உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ship_london_002பெல்ஜியத்திலிருந்து சரக்கு கப்பல் ஒன்றில் மறைந்துகொண்டு வந்திருந்த 35 பேர் லண்டன் துறைமுக அதிகாரிகளால் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பெல்ஜியத்தின் ஜீபுருக்கே துறைமுகத்தில் இருந்து நேற்று இரவு 10 மணிக்கு புறப்பட்ட ஒரு சரக்கு கப்பல் இன்று காலை 6 மணியளவில் லண்டனில் உள்ள டில்பரி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.

குறித்த சரக்குக் கப்பலில் இருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது ஒரு கொள்கலனில் இருந்து கூக்குரலும், தட்டும் சத்தம் கேட்டவுடன், ஊழியர்கள் உடனே அந்த கொள்கலனைத் திறந்து பார்த்துள்ளனர்.
அப்போது அதன் உள்ளே 35 பேர் ஆபத்தான நிலையில் இருந்ததைக் கண்டு, அவர்களை மீட்டதுடன், இது தொடர்பில் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு அம்பியுலன்ஸ் வரவழைக்கப்பட்ட அவர்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.அவர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர்கள் சட்டவிரோதமாக குடியேற வந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.கொள்கலனில் வந்தவர்களில் இலங்கையர்களும் இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்படுகின்றது. எனினும் 35 பேரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
பிரித்தானியாவுக்குள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாகனங்கள் மூலம் அதிகளவான ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் வர முயற்சிக்கும் நபர்களை, அந்நாட்டிற்குள் அழைத்துச் சென்று விடும் நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு இலங்கையர்கள் உட்பட ஐவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் இவ்வருடம் சிறைத் தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து