உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள தங்கச்சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 27 பேர் மண்ணில் புதைந்து பலியாகியுள்ளனர்.மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் உள்ள பம்பாரி (Bambari) நகரில் மலைகள் சூழ்ந்த வனப்பகுதியான டேசிமாவில் (Dassima) தங்கச்சுரங்கம் ஒன்று உள்ளது.கனடாவைச் சேர்ந்த ஆக்ஸ்மின் (Axmin) என்ற நபருக்கு சொந்தமான இந்த சுரங்கம், திடீரென இடிந்து விழுந்ததில் 27 பேர் மண்ணில் புதைந்துள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 25 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மாயமான 2 பேரை தேடி வருகின்றனர்.இதுகுறித்து மத்திய ஆப்பிரிக்க நாட்டின் சுரங்க அமைச்சக அதிகாரி கூறுகையில், தங்கச்சுரங்க நிறுவனங்கள் சரியாக சட்டதிட்டங்களை கடைபிடிப்பதில்லை என்றும் அதனால் மழை ஏற்படும்போது சுரங்கம் இடிந்து விழுந்து விடுகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து