உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

karthik_002நடிகர் கார்த்திக் மீது அவரது தாயாரே பொலிசில் புகார் தெரிவித்துள்ளார்.மறைந்த பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் நடிகர் கார்த்திக், பல வெற்றிப் படங்களை கொடுத்த கார்த்திக் கூட்டுக் குடும்பமாகவே வசித்து வந்தார்.தற்போது அவர்கள் வீட்டில் சொத்துப் பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது.கடந்த திங்கட்கிழமை சென்னை தேனாம்பேட்டை பொலிஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.அந்த மனுவில், தனது தந்தை நடிகர் முத்துராமன் வாங்கிய சொத்துக்களில் தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை தனது அண்ணனும், அண்ணியும் சேர்ந்து அபகரித்துக் கொண்டனர் என்றும், சொத்துக்களை கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்றும், தனது தாயாரை ஏமாற்றி சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளது என்றும், தனக்குச் சேரவேண்டிய சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும் என்றும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், தனக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் கார்த்திக் மீது அவரது தாயார் சுலோச்சனா நேற்றிரவு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.அதில், எனது இளைய மகன் கார்த்திக் கொடுத்த புகார் மனு தவறானது. எனது பெயரில் சென்னை ஆழ்வார்பேட்டை, சி.பி. ராமசாமி ரோட்டில் சொத்துக்கள் இருந்தன. அந்த சொத்துக்களை நான்தான் எனது மூத்தமகன் கணேசன் பெயருக்கு எழுதி கொடுத்தேன்.என்னை ஏமாற்றி அந்த சொத்துக்களை எனது மூத்த மகன் எழுதி வாங்கிக் கொண்டதாக கார்த்திக் கூறிய புகாரில் உண்மை இல்லை. அந்த சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கார்த்திக்கும், அவரது அடியாட்களும் என்னையும், எனது மூத்த மகன் கணேசனையும் மிரட்டுகிறார்கள்.எனவே எனக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதோடு, கார்த்திக் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து