உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மண்ணின் மைந்தர்கள் வரிசையில் இன்று

 சாந்தை சிற்றம்பல வித்தியாசாலையின் தந்தை ,அமரர் அம்பலவாணர் சிதம்பரப்பிள்ளை அவர்கள் . 

இன்று சாந்தையில் ஒரு பாடசாலை இருப்பதற்கு மூல காரணமாக இருந்தவர் அமரர் சிதம்பரப்பிள்ளை செட்டியார் அவர்களே .இந்து சமயத்தை வளர்க்க முன்னின்று உழைத்த ஒரு ஆன்மீகவாதி அமரர் அவர்கள் .இந்து சமயத்தை நலிவுறாது காப்பதற்கு இந்துப் பாடசாலைகள் அவசியம் என்பதை அன்று உணர்ந்த செட்டியார் அவர்கள் சனத்தொகை கூடிய பாடசாலை வசதியில்லாத ஒரு இடத்துக்கு இந்து பாடசாலை இருக்கவேண்டிய தேவையை உணர்ந்தார் ,

இளமையில் சிங்கப்பூரில் தொழில் புரிந்து ஓய்வில் நாடு திரும்பி இருந்தவர் தமக்குச் சந்ததி இல்லாத குறையைப் போக்க ஊர்ப் பிள்ளைகளை ஊட்டி வளர்க்க எண்ணம் கொண்டார் .ஓய்வு பெற்று ஊரில் இருந்த காலத்தில் இடையிடையே சாந்தை விநாயகர் ஆலையத்தில் பூசகராகவும் இருந்தார் .தமது சேவை உருக்கு உதவ வேண்டும் என்னும் பேரவா அவர் சமய ரீதியில் நற்ப்பணி ஆற்றினார் .இக்காலத்தில் சைவ பரிபாலன சபையினர் கிராமந்தோறும் பாடசாலைகள் அமைக்கும் முயற்ச்சியில் இருந்தனர் . அப்போது செட்டியார் அவர்கள் தமது விருப்பத்தை அவர்களிடம் தெரிவித்து சாந்தையில் உள்ள தமது காணியான 10 பரப்பளவு காணியை சைவ பரிபாலன சபையிடம் அன்பளிப்பாகக் கையளித்தார் .1957ஆம் ஆண்டு இந்து பரிபாலன சபையினர் அக்காணியில் ஒரு மண்டபம் அமைத்து 1959 ஆம் ஆண்டு பாட சாலை ஆரம்பிக்கப் பட்டது .ஆரம்பத்தில் இப்பகுதிப் பிள்ளைகள் அக்கறை குறைவாக இருந்த போதும் இப்போது மூன்று மண்டபங்கள் அமைக்கப் பட்டு நிறைந்த பிள்ளைகள் கற்கக் கூடியதாக வளர்ந்துள்ளது .அமரர் அவர்களின் எண்ணம் நிறைவேறியது .இருந்தும் இப் பாட சாலையில் குடிநீர் இல்லாத குறை இருந்தது .இதைப் போக்க 1980 ஆம் ஆண்டு பாடசாலைவளவில்ஒருகிணறும் அமைத்துக் கொடுத்தார் .இதன்பின் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் இல்லாத குறை காணப்பட்டது .இதைப் போக்க பாடசாலைக்குச் சற்று தொலைவில் உள்ள தமது வயல்க்கரைக் காணி12 பரப்பையும் விளையாட்டு மைதானத்துக்காக வழங்கினார் .இன்று இது பாடசாலை மாணவர்களுக்கு ஒரு சிறந்த மைதானமாக விளங்குகிறது .

ஒரு அடி நிலத்துக்காக ஒன்பது பத்து வருடங்கள் கோடேறி வழக்காடும் எம்மவர்கள் மத்தியில் இத்தகைய சேவை செய்த ஒரு மகான் அமரர் அம்பலவாணர் சிதம்பரப்பிள்ளை நினைவு கூராது இருப்போமானால் நாம் செய் நன்றி மறந்தவர்களாவோம்.

 

நன்றி 

ஆ .த .குணத்திலகம்     ஓய்வு பெற்ற ஆசிரியர் , சாந்தை

6 Responses to “மண்ணின் மைந்தர்கள்”

 • vigneswaran:

  நன்றி குணம் மாஸ்ரர் .
  இன்றைய சாந்தையூர் சந்ததியினருக்கு தெரியாத உண்மையை .அறிந்து கொள்வதற்கு உதவியதற்கு நன்றிகள் ,எம் ஊரில் இவர் போன்றவர் தான் பிள்ளையார் கோயில் உரிமையாளராக இருந்த குன்சர் அவர்கள்.
  எனது வேண்டுகோள் . எம் ஊரின் வரலாறுகளை முடிந்தால் அறியத்தாருங்கள் .. எம் உரை பற்றி நாம் அறியவேண்டும் .

  நன்றி .
  கனகசபை விக்னேஸ்வரன்

  • kunaththilakam saanthai:

   தம்பி விக்கீ ,நான் உண்மையாக ஊருக்கு உழைத்தவர்கள் பற்றியே எழுதிக்கொண்டிருக்கிறேன் .எனவே என் முயற்ச்சி தொடரும் .சிலர் தம் சுயநல நோக்குடன் தாம் உருக்குப் பெரிதாகச் செய்கிறோம் என மக்களை ஏமாற்றியவர்களும் எம் ஊரில் உண்டு .அவர்கள் பற்றி நான் எதையும் குறிப்பிட விரும்ப வில்லை .விரைவில் அடுத்த மைந்தர் வருவார் .

 • vinothiny pathmanathan:

  எம் மண்ணின் மைந்தர் அமரர் அம்பலவாணர் சிதம்பரப்பிள்ளை செட்டியார் அவர்களின் ஈகை தன்மையையும் ,காலமறிந்து அவர் செய்த சேவையினையும் பாராட்டி இந்த நேரத்தில் அவரை நினைவு கூர்ந்த எங்கள் ஊர் ஆசான் மதிப்புக்குரிய குணம் ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகள்.

  • kunduk karuppan:

   வினோ அக்கா ,உங்களைப்போல் சாந்தையிலுள்ள ஏனையோரும் செட்டியாரை நினைவுகூருவரா ?அங்கு படித்த எத்தனை பேர் வெளிநாடுகளில் ???????????????

  • அற்புதன்:

   வினோதினி அவர்களே!
   சாந்தை என்ற இந்த உருவத்தைச் செதுக்கி வடித்த.அந்த செட்டியாரை போற்றுவதா? செதிக்கிய உளியை நினைத்து அந்த உளியின் நினைவைப் போற்றும் அளவிற்கு நூல் வரைந்த இந்த ஆசிரியரை நாம் போற்றுவதா?

   • nakkeeran:

    அர்ப்புதன் அண்ணா !
    அருமையான உன் கருத்தை
    செப்புதற்கு என்னிடம்
    சிறந்த அறிவில்லை ,
    இப்புவியில் உன்போல்
    இதயம் உள்ளோர் இருந்தால்
    அப்போதே திருந்திடுவார்
    அன்றைய தென் சாந்தையார் .

    வடமொழியில் இருந்த ஸ்கந்த புராண மதை
    தென் மொழியில் தந்தவர் கச்சியப்பர்
    கச்சியப்பர் இல்லையேல் இன்று
    கந்த புராணமும் இல்லை
    கந்த ஸ்கந்த சட்டியும் இல்லை ,
    சூரன் கொடுமையும் தெரியாது
    முருகன் பெருமையும் தெரியாது !

Leave a Reply for vinothiny pathmanathan

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து