உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

0102

20 Responses to “சீரழிந்து வரும் இந்துக்களின் சடங்குகள்”

 • அற்புதன்:

  திருவிளையாடல்’ படத்தில் தருமியாக நடிக்கும் நாகேஷின் பாடலில் குற்றம் உள்ளது என்று நக்கீரன் குறை சொல்வார் அது போலவே அழிந்து போகும் அழகான சில சடங்குகள் பற்றிய கடமைகளை உயிர்ப்பிக்கத் துடிக்கும் குணம் ஆசிரியரின் கவிதையில் குறை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி ஆயிரம் குறை சொல்வார் பலர்! எனவே என்னை பொருத்தவரையில் இவ்வான .சம்பிரதா சடங்குகள் பற்றி தவறென்று சொல்பவர்கள் மீது எந்தொரு தவறுமில்லை என்று நான் நினைக்கின்றேன் ஏனென்றால். இந்த விஷயம் தவறென்று சொல்பவர்கள் அவர்களின் கண்களுக்கு அர்த்தமற்றதாய் போல் மிகச் சாதாரணமாகவே தோன்றுகின்றன எனவே இதை இவ்விடத்தில் நானென் கூறுகின்றேன் என்றால் இதில் வயதில் மூத்தவர்கள். முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் மூவர் அவர்களின் கருத்துக்களையும் பார்த்து கூறுகின்றேன்.எனவே அன்றைய காலத்தின் அருமை தெரியாத இன்றைய இளைய தலைமுறையினர் இவைகளை அறிந்து கொள்ள முடியாத நிலையில் வாய்ப்பு உள்ளது என்றால் ஏன்?? .ஒரு தலைமுறையினர் யுத்தத்திலேயே பிறந்து யுத்தத்திலேயே வளர்ந்தவர்கள். இன்னொரு தலைமுறையினர் தரையில் இருந்து மார்பில் அடித்து ஒப்பாரி வைக்காமல் வீதிகளில் உள்ள சடலங்களை அடக்கம் செய்ய முடியாத சூழலில் வளர்ந்தவர்கள்!

  குணம் ஆசிரியாரின் மனதில் எழுந்தது மணலில் வரைந்த ஓவியம் அல்ல. எங்கள் மனதில் பதிந்த காவியம்…

 • ajaruban:

  என்னவொரு அருமையான அர்த்தமான கவிதை வடிவில் வந்தது சிறப்பு , but இன்றைய காலத்தில் மனிதாபிமானம் அன்பு பாசம் எல்லாம் வேஷமாகவே தென்படுகிறது ,பணம் தான் இன்று எங்கும் முன்னிலை படுத்த படுகிறது, உங்களின் மனக்குமுறலை கவிதை வடிவில் எல்லோரும் விளங்கி கோலும் வடிவில் படித்தமைக்கு நன்றி

 • கனகரத்தினம்:

  வணக்கம் குணதிலகம் ஐயா,
  தங்கள் ஆக்கம் பிரமாதம். அனுபவமும், ஆற்றலும் கண்டு பிரமிக்கின்றோம்.
  போற்றுகின்றோம். வாழ்த்துகின்றோம்.
  நன்றி

  • kunaththilakam:

   அண்ணா !
   நீங்கள் என்னைவிட வயதில் மூத்தவர் .எனவே நீங்கள் என்னை ஐயா என விளிப்பது அழகல்ல .நான் அதை விரும்பவில்லை .நீங்கள் தம்பி என அழைக்கலாமே .

   • கனகரத்தினம்:

    தம்பி குணம்,
    இங்கே ஐயா என விழித்தது தங்களின் ஆக்கத்திற்கு மதிப்பும் மரியாதையும் செலுத்துவதற்காகவே.

    ஐயா என அழைப்பதால் அழைத்தவரை விட வயதில் முதியவராகிவிட முடியாது. அறிவில், ஆற்றலில், செயலில் முதிர்ந்தவர்களை ஐயா என அழைப்பது வழமைதானே!

 • Namasivayam:

  இறந்தவர்களுக்கு கிரியை செய்வது பழைய கால மூடக்கலாச்சாரம்.புரோகிதர் பலர் அடிமைபடுதபட்ட காலம். இன்றைய நாகரீகம் விஞ்ஞனம் வளர்தந்த காலத்தில் இதை பாத்தல் சிரிப்புதான் வருகிறது. இது எல்லாம் மூட நம்பிக்கை.உயிருடன் இருக்கும்பொழுது நன்றாக பராமரிக்க வேண்டும் அதுவே போதும். இறந்த பின்ப்பு உறுப்புக்களை தானம் செய். என்செயவட்டை உரமாக்கு பசலைக்கு பாவிக்கவும். குணம் மாஸ்டர் இன்னும் 1920 இல் இருக்கிறார் .

  • kunaththilakam:

   நான் உங்களைவிட வயதில் கூடியவன் என நினைக்கிறேன் .அதனால் நம் முன்னோர் முறையை இங்கு குறிப்பிட்டேன் .நீங்கள் கூறுவதுபோல் உங்கள் பெற்றோர் உடலை அல்லது உறவினர் உடலை உரமாக்க உங்களால் முடியுமா ?முடிந்தால் அதை முதலில் செய்து ஒரு முன் மாதிரியைக் காட்டுங்கள் .அதன் பின் உங்கள் காலத்தை தீர்மானிக்கலாம் .இப்படித் தத்துவம் பேசியோர் எம்மூரில் கனபேர் .

 • sivan:

  குனதிலகம் அவர்களே மீண்டும் சாதிய அடக்குமுறை தங்களுக்கு தேவைபடுகிறது போல் உள்ளது உங்களுக்கு வாழ்த்து பாடுபவர்களுக்கு உங்கள் காட்டுமிராண்டி கருத்துக்கள் புலப்படாது

  • anpan:

   இங்கு பாரம்பரியம் அழிந்துபோகின்றன என்றே குறிப்பிட்டுள்ளார் .சிவன் அவர்களே உங்களுக்கு ஏன் இந்த விஷ விளக்கம் ?அவர் கூறிய கருத்துக்களில் அப்போதிருந்த முறைகளில் குடிமகன் முறைகளும் இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார் .அதுமட்டுமா உங்கள் கவனத்த்ல் பட்டது ?சாதி முறையை மீளக் கொண்டுவர வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளதாக இல்லை .நீங்கள்தான் அப்படியொரு தோற்றத்தில் உள்ளீர்கள் போலுள்ளது .சாதி அமைப்பைத் தகர்த்த(நாடகமாடிய ) எத்தனையோ பேர் எங்கள் ஊரில் எப்படி இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியாததா ?ஆனால் நாம் வாழ்த்துப் பாட வில்லை .நாம் அறியாத சிலவற்றை இக் கருத்துகள் மூலம் அறிந்து கொள்கிறோம் .நல்ல கருத்துக்களை இங்கு தரும் ஒரு கருத்தாளரை மனம் நோகவைக்காது உங்களுக்குள் ஏதாவது தனிப்பட்ட பிரச்சனைகள் இருப்பின் அல்லது இக் கவிதை சம்பந்தமாக கதைக்க வேண்டி இருப்பின் நேரடியாக அவருடன் கதைக்கலாமே .

  • kunaththilakam saanthai:

   காகம் திட்டி மாடு சாவதில்லை .உங்கள் கருத்து என்னை தாழ்த்திவிடாது.உங்களை யார் என்பதையும் ஓரளவு அறிவேன் .என் கருத்துடன் வழமையாக முரண்படுபவர்கள் ஓரிருவர் இருக்கிறார்கள் .இவர்கள் கருத்துடன் அல்லாது என்னுடன் மோதுவதையே தங்கள் கருத்தாகக் கொள்பவர்கள் .நான் சமூக நடத்தைகள் பற்றியே குறிப்பிடுவதுண்டு .இல்லாததெதையும் இங்கு கூறவில்லை .எனவே என்னுடைய குறிக்கோளை அறியாதவனே இக் கருத்தை எழுதி இருப்பார் .கருத்துச் சுதந்திரம் யாருக்கும் உண்டு .

 • சிவானந்தம்:

  அறிவாற்றலும், அநுபவ முதிற்சியும் நிறைந்த ஆசானே!
  உந்தனுக்கு எந்தன் வணக்கமும், வாழ்த்துக்களும்!
  உந்தன் ஆதங்கம் நியாயமானதே!
  மறத்தமிழர் நாமென மார்தட்டும் நம்மினம், தாய்மொழியைப் பேசிடத் தயங்கிடும் தமிழினம், காலங்காலமாக முன்னோர் வளர்த்திட்ட கலாச்சாரப் பண்பாடு பழக்க வழக்கங்களை பாதுகாத்திட மறுத்திடும் எம்மினம், மிகச் சிறிய வயதிலேயே பெற்றவரைப் பிரிந்து, உறவுகளைத் துறந்து பாரெல்லாம் ஏதிலிகளாய் பரந்து வாழ்கையிலே எப்படி இருக்கும் உறவுகளின் பந்த பாசம், பண்பாடு கலாச்சார நினைவு? தூரம் அதிகமானால் தொலைந்திடும் சொந்த பந்தம்.இந்த நிலைமையானது எமது எதிர்காலச் சந்ததியினரைப் பெரிதும் பாதிக்கப்போகின்றது என்பதே எனது ஆதங்கம்.
  அதாவது, *பெற்றோர் பாவம் பிள்ளைகட்கே!*என்ற முதுமொழி பொய்த்ததாக அறியவில்லை. பிள்ளைகள் தமது பெற்றவர்களின் இறுதிக் கிரியை முதல், பிதிர்க் கடன்களை ஒழுங்காகச் செய்யத் தவறுமிடத்து அவர்களது பிள்ளைகளையோ,பேரப்பிள்ளைகளையோ பாதிக்கும் என சைவ வேதாகம சாத்திரங்கள் கூறுகின்றன. இதன் உண்மைத்துவத்தை அநபவரீதியாக ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம்.

  எனது கருத்தில் தவறிருப்பின்
  தயைகூர்ந்து அறியத்தரவும்.

  நன்றி!

  • kunaththilakam sillaalai:

   தம்பி ,உங்களைப் போன்றவர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் .நான் இணையத்தில் உலாவுவோரில் மிகவும் வயது முதிர்ந்தவராக இருக்கும் என நினைக்கிறேன்.அதனால்தான் என்னுடைய அனுபவத்தை இன்றைய இளம் சந்ததியினருக்கு அறியத் தரும் நோக்குடன் எழுதினேன் .ஏனெனில் இன்னும் சிலவருடங்களில் இங்கும் மின்சாரத் தகனம் வரலாம் .அப்போது எங்கள் பாரம்பரியம் முற்றாக அழியும் என நம்பலாம் .எனவே எமது வருங்காலச் சந்ததி இவைபற்றி அறிய வேண்டும் என்பது என் அவா .
   எங்கள் முற் காலத்தில் ஒரு மரண வீடென்றால் அங்கு பலர் பந்காற்றுவதைக்காண முடியும்.ஆனால் இப்போ அப்படியில்லையே

   • சிவானந்தம்:

    தங்கள் கருத்திற்கு நன்றி!
    இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள், மற்றும் தொடர்ந்து வரும் பிதிர்க் கடன்கள் என்பவற்றை உலக மக்கள் அனைவரும் தத்தம் மத அனுஷ்டானங்களுக்கு அமைவாகவே செய்து வருகிறார்கள் ஆனால் தமிழ் மக்கள் மாத்திரம் வசதி, வாய்ப்புகளுக்கேற்ப, முறைமைகளை மாற்றி வருகிறார்கள். இதனால்த்தானே எம்மினம் இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறது.*OLD IS GOLD*என்று இங்கிலாந்து மக்கள், மற்றும் பல மேலைத்தேச மக்களும் பழமையான கலாச்சாரப் பண்பாடுகளைப் பேணிப்பாதுகாத்து வருகிறார்கள். ஆனால் எமது (தமிழ்) மக்களோ மதம் மாறுவதிலேயே முதலிடத்தை வகிக்கிறார்கள். என்ன செய்வது?
    ஆனால், இரு விடயங்களில் தங்களுடன் முரண்பட வேண்டியுள்ளது. அதாவது இறுதிக் கிரியைகளை உறவுகளுடன் இணைந்து மற்றும் பண்டையகாலம் போல் குறிப்பிட்ட குலமக்களே செய்ய வேண்டுமென்பது. இந்தச் செயற்பாடானது ஒழிக்கப்பட்டு அனைத்து மக்களும் ஓர்குல மக்கள் என்ற வரையறைக்குள் வாழவேண்டுமென்பதாகும்.இறந்தவருடைய உறவுகள் மட்டும் மத,சமூகஅனுஷ்டானங்களுக்குமைய செய்தால் போதுமானதாகும்.

    அடுத்ததாக, மின்சார ஆலைகளில் பூதவுடல்களைத் தகனம் செய்தலாகாது என்று தாங்கள் கூறியிருப்பது தவறானது என்பது எனது கருத்தாகும். ஏனெனில் கடந்த கால யுத்தத்தினாலும், இன்றைய அபிவிருத்தி என்ற பெயரிலும் காடுகள், பசுஞ்சோலைகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. இயற்கை அழிக்கப்படுவதனால் பூமியில் பல காலநிலை மாற்றங்களும், இயற்கையின் சீற்றங்களும் அதிகரித்த வண்ணமுள்ளது. இந்நிலையில் இறுதிச் சடங்குகளுக்காகவும் இருக்கின்ற மரங்களை வெட்டினால் இயற்கை என்னவாகும் எனவே கொள்ளிக் கட்டைத் தகனத்தைவிட மின்சாரத் தகனம் சிறந்ததாகும்.
    மின்சாரத் தகனத்தின் பின்பு மேற்கிரியைகளுக்காக சாம்பல் உறவினர்களிடம் உரிய முறையில் வழங்கப்படும்.

    எனவே, இந்த இருவிடயங்கள் பற்றி தாங்கள் சிந்திக்க வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி!

    • kunaththilakam:

     உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் .நான் இங்கு இபோதும் சாதி அடிப்படையில் கிரியைகள் செய்யவேண்டும் எனக் கூறவில்லை .இப்படித்தான் நடந்தது என்பதை இன்றைய விஞ்ஞான உலகில் வாழும் இளையோருக்குத் தெரியப் படுத்தவே எழுதினேன் .இப்படி எவ்வளவோ விடையங்கள் மறைந்துவிட்டன .எனவே பழைய பாரம்பரியங்களை நினைவூட்ட வேண்டுமென்பதற்காக எழுதினேன் அவ்வளவே .

 • GOPAL-T:

  மரணச் சேதியை கூட பிள்ளைகளுக்கு அறிவிக்காமல் அவசரமவசரமாக செய்துமுடித்திடுவர் .
  .உற்றார்.உறவினர் கேட்டால் அவர்களுக்கு அறிவித்தது ஆனால் அவர்களால் வர
  முடியவில்லை காரணம் வேலைத்தலத்தில் லீவு கிடைக்காதாம் என்று பொய் உரைத்திடுவர்
  இது உண்மை என எண்ணி உறவினரும் அமைதிகாத்திடுவர்
  பிள்ளைகள் இணையதளமூலம் அறிந்து நாங்கள் வாறோம் மாண்டவரை வைத்திருங்கள்
  என்றால் அதுக்கு முரண்பட்டுவர் .
  இறுதியில் பிள்ளைகள் வந்து விடுவார்கள் என்ற பயத்தில் இறந்தவருக்கு செய்ய வேண்டி
  கடமையையும் செய்திடார்
  அவசரமவசரமாக காரியம் செய்துமுடித்திடுவர் இதுவும் இன்றைய நிலை.

  • nakkeeran:

   கோபால் அண்ணா !

   வீட்டுக்கு வீடு வாசல்ப்படி ,-இதை
   வெளியே சொல்வது வெட்கக் கேடு
   வாழ்வில் இது எல்லாம் சாகசம் -எனவே
   விமர்சனம் வேண்டாம் விட்டு விடு .

  • அற்புதன்:

   துடிப்போடு எழுகின்றேன்
   அடிபோட வந்திடாதீர்.
   இழிவுபடுத்தும் கூட்டமே, நான்.
   ஊனமாக்குவது என் குணமே.
   எழிதியத்தை அழியுங்கள்.
   பிரபல ஊடகங்களுக்கு வாரவாரம்
   கதைகள் எழுதி அனுப்புவது
   எழுத்தாளர் வேலை இதை
   நீங்களே சொல்லுங்கள்
   இது நியாயமா?????????

   • nakkeeran:

    அண்ணா ,எதை அழிக்கச்சொல்கிறீர்கள் ?
    கவிதையையா கருத்தையா?

 • vinothiny pathmanathan:

  இன்றைய நிஜத்தை வெகு சிறப்பாக கவி வடித்த எம் ஊர் ஆசான் குணம் மாஸ்டர் குறிப்பிட்டவை; யாராலும் மறுக்க முடியாதவையாகத் தான் உள்ளது.இது இன்றைய காலத்தின் கோலம் என்பது தான் பொருத்தமானதாக இருக்கும்.

 • ஏழை செத்தால் ஆடம்பரமாக செய்கிறான்
  பணக்காரன் செத்தால் பணத்துக்காக அடிபடுகிறான்.
  ஏழை ஏழை தான். பணக்காரன் பணக்காரர் ஆகிக்கொண்டே எல்லாத்தையும் மறந்து விடுகின்றது.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து