உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

2222

31 Responses to “கருத்துக்களம். மத சுதந்திரம் எதுவரை ?”

 • மன்ற மண்டபத்தை இப்படியான விழாவுக்கு அல்லது வேறு நிகழ்வுக்கு குறிப்பிட்டு நிதி கொடுத்து நிகழ்சிகளை நடத்தலாம் என்பது திறப்பு விழா அன்று கூறினார்கள் . ஆனால் பொதுவாக பார்த்தால் அது ஒரு விழா . மதம் மாறுவது மாற்றுவது புலம் பெயர் நாடுகளில் பெரிய விடயம் அல்ல … ஒருவரின் சுய விருப்பம் .மன்றத்தில் ஊரில் கஸ்ரத்தில் வாழும் மக்கள் இப்படியான நிகழ்வில் ஈர்க்கப்படுவார்கள் என்பது மனவருத்தும் மத மாற்றம்.இதுவே எனது தாழ்மையான கருத்து.

 • tamilan:

  tamian:
  December 22, 2014 at 12:48 pm
  புலம் பெயர் தேசத்தில் கிறிஸ்தவ நாட்டில் வாணி விழ நடத்தலாம் அனால் இந்துக்கள் வாழும் இடத்தில கிறிஸ்தவர்கள் வால் ஆட்ட கூடது ,துவேசிகள் வாழ வேண்டும் பலகாலம் மதத்தை வைத்தி என்ன செய்ய போரியல் .புலம் பெயர் தேசத்தில் நீங்கள் வாழும் வாழ்வு கிர்ஷ்டவர்கள் தந்த தானம் இல்லையா .இந்து மதம் மக்களுக்கு செய்யும் சேவை என்ன காசு பிடுங்குவதை தவிர .இந்து கோயில் உண்டியல் நிறைந்தால் கோயில் கோபுரம் உயரும் கிறிஸ்தவ கோயில் உண்டியல் நிறைந்தால் உணவு கிடைக்கும் ஏழைகளுக்கு .எமது ஆலயங்கள் சமுக சேவை செய்து இருந்தால் இந்துக்கள் ஒருவரும் இருக்கமாட்டார்கள் ஏழையாக .

  • நந்தன்:

   ஒரு ஊரில இரண்டு மடையன்கள் இருந்தாங்களாம். அதில் ஒருவன் ஒரு காணியை காட்டி சொன்னானம். இந்த காணியில் ஒரு கோடி மண் இருக்கு ஏண்டு. அதற்கு அடுத்த மடையன் சொன்னானாம் இல்லை..இல்லை.. இந்தக் காணியில் இரண்டு கோடி மண் இருக்கு எண்டு. அப்ப முதல் மடையன் சொன்னானம் அதை ஒருக்கா எண்ணி காட்டு என்று. அது மாதிரித்தான் நான் உங்களுக்கு விளக்கம் தந்தால் இருக்கும்……..

   மதம் பரப்புறவர்களோடு கதைத்த அனுபவம் எனக்கு நிறைய உண்டு. எதற்கு எடுத்தாலும் இந்து கோயில் பிழை என்று சொல்லியே அளாப்பிக் கொண்டு திரிவதுதான் அவர்கள் தொழில்…..உந்த மண்டை கழண்டதுகளோட என்னால் வாதாட ஏலாது. முடியலா………………

   • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    இரண்டு மடையன்களின் கதை அருமை.
    இந்தக்கருத்துக்களத்தின் தலைப்பிலுள்ள தகவலே தவறானது. அதாவது ஆரம்பமே தவறு.

    மதம் பரப்புவர்களோடு கதைத்த/கதைக்கும் அனுபவம் இங்கு பலருக்கு உண்டு – நீங்கள் மட்டும் விதிவிலக்கு இல்லை. எம்மிடமுள்ள குறைபாடுகளை முன்வைக்கும்போது அதற்கான தகுந்த விளக்கத்தை கொடுக்க எமக்கு தெரிந்திருக்கவேணும். கதைக்கவிட்டுவிட்டு தலையாட்டிக்கொண்டிருந்தால், வழுக்கைத்தலையிலும் அரப்பு தடவி shampoo மாதிரி நுரைக்கவேற வைப்பினம். ஒன்றை நன்றாக காட்டவேணுமென்றால் இன்னொன்றுடன் ஒப்பிடுவது இயல்பு. சினிமாவிலும் இன்னொருவனை எங்கையாவது வில்லனாக காட்டினால்த்தான் அதில் கூட நேரம் வந்துபோவவர் நாயகனாக காட்டமுடியும். இது வியாபார தந்திரம்.

    இது எல்லாம் இருக்கட்டும்…..
    ஊரில் தீக்குளித்தவரின் இறுதிக்கிரியை அப்ப எப்ப?

    அடுத்த கருத்துக்களத்துக்கான புதிய தலைப்பு இதோ:
    ஊரில் தீக்குளித்தவரின் பூதவுடலை புதைப்பதா? அல்லது மீண்டும் எரிப்பதா?
    🙂 🙂 🙂

    • kaalaivelan:

     அண்ணா சுழிபுரத்தில் ஒரு இடம் -குடாக்கனை கிறிஸ்த்தவ மணமே தெரியாத சுழிபுரத்தில் குடாக்கனை என்ற இடம் இன்று முற்றாக கிறிஸ்த்தவ குறிச்சி ஆகிவிட்டது .அங்குள்ள ஏழ்மையைப் பயன் படுத்தி சூறாவளி வேகத்தில் அங்கு மதம் பரப்பப் பட்டுள்ளது .நீங்கள் கூறுவது போல் மீண்டும் அவர்களுக்கு மிட்டாய் கொடுக்க முடியாது .எங்கள் ஊரில் உள்ளவர்கள் இதுவரை இவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை .பிழைப்புக்காக மதம் மாறியவர்கள் ஒருசிலர் இங்கு வந்து தம் பிழைப்புக்கு வழி தேடுவதே இந்த நிகழ்வு .தம் பிழைப்புக்காக எமது ஊரையே பிளவு படுத்த முனைகிறார்கள் .அதற்க்கு மன்றம் எண்ணெய் ஊற்றுவது போல் செயல்படுகிறது .தீக் குளித்தது என்பது ஒரு கட்டுக் கதை .

 • ஊர் குருவி:

  கடவுளை காண வளிகள் பல, ஆனாலும் காணப்போவது எதோ நீங்கள் ஒருவரே. நீ கடவுளைக் காண வேண்டுமென்றால் நீ கடவுளாக வேண்டும். கடவுளின் இயல்பு அன்பு. அன்பே சிவம் என்கிறார்கள். இந்த அன்பு கடலான இந்து மதத்தை பெரிய ஐரோப்பிய சுனாமியே வந்து அளிக்கமுடியாமல் போய்விட்டது. இது எல்லாம் ஒரு மார்கழி மழை மாதிரி. இதை அடக்க நினைப்பது மதமா? மத வெறியரா? மத வியாபாரியா? உலக மாயம் என்று உலகம் எங்கேயோ போகுது, இதில நம்மூரு எங்க இருக்குது? வெளிநாட்டில் கிரிஸ்மஸ் மரம் இல்லாத ஊரவர் வீட? மரத்தில் பிள்ளையார் சிலை வேற தொங்குது. கற்பூரம் காடாத குறை!

  கருத்துக்களில் பிடித்தது…..

  ragavi: December 21, 2014 at 01:18
  இன்று மறுமலர்ச்சி மன்றவாசலில் நடந்த நிகழ்வு மிகவும் மனம் வருந்ததக்கது

  அற்புதன்:December 20, 2014 at 21:11
  மதப்பிரச்சாரம் என்பது எங்களூரில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நடைபெற்று வரும் ஒரு விஷயமாகும்.

  இந்தமதத்தின் காவலர்கள்.:December 20, 2014 at 17:44
  இன்று ……உண்டு இவர்களது வாழ்வாதார மேம்பாட்டுக்கு ஊர்ப்பெரியவ்களிடம் எதாவது திட்டங்கள் உண்டா? இவர்கள்தான் இந்தமதத்தின் காவலர்கள்.

  ஊர் நல விரும்பி: December 20, 2014 at 16:20
  தயவு செய்து ஒரு சின்ன விசையத்தை பெரிசாக்காதீங்க ……. தாவி செய்து மத –இன -சாதி வேறு பாடு காட்டதிங்க….இது கடைசியா உங்களை தான் பாதிக்கும்.
  ஊர் நல விரும்பி

  நந்தன்: December 20, 2014 at 18:27
  வெளிநாட்டில கோயில் கட்டி நாங்கள் மதம் பரப்பவில்லை……..

  நந்தன்: December 21, 2014 at 13:42
  வாழ்க்கையில் எல்லாருக்கும் ….. வழி மாறி….. தடுமாறுகின்றான். பலவீனமடைகிறான்…. மதம் மாற்றுபவர்கள்…… விடுதலை வாங்கி தருவதாக பொய் கூறி அவர்களின் வாழ்வை திசை திருப்புகிறார்கள். (உண்மை!!!)

  Vaasakan: December 20, 2014 at 12:25
  இவ்விடயத்தில் மன்ற நிர்வாகத்தில் எவ்வித பிழையும் இல்லை…..
  அவர்களின் ஜனநாயக உரிமை.அவர்களின் பேச்சு சுதந்திரம்.
  சில நாடுகளில் மார்கழிமாத ஊதியம் இரண்டு மடங்காககொடுக்கிறார்கள்.
  மேலும் ஒருசிலரின் வீட்டில் கூடி கிறிஸ்மஸ் மரத்தினை வைத்து அலங்கரித்து இருக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நத்தார்பரிசு என்று நீங்கள் பரிசுப்பொருட்களை வாங்கிக்கொடுக்கிறீர்கள்.வீட்டிற்க்கு வெளியே
  வர்ண விளக்குகளால் அலங்கரித்து கொண்டாடுகிறீர்கள். எல்லாவற்றையும் நீங்கள் செய்து கொண்டு பின்பு நீங்கள் ஊரில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடகூடாது என்று சொல்கிறீர்கள்.(அருமை)

  sasi: December 20, 2014 at 04:57
  பன்முகத் தன்மையைப் பற்றி அறியாத……
  ‘உனது கருத்து எனக்கு எதிரானதாக இருந்தாலும், அக் கருத்தைத் தெரிவிக்க உனக்கு உள்ள உரிமையைக் காப்பதற்காக நான் எனது உயிரையும் கொடுப்பேன்’ (நல்ல போராளி)

  நந்தன்: December 20, 2014 at 07:24
  வாழ்வில் ஏற்பட்ட விபத்துகளால் நொந்து போய் இருக்கும் மக்களை அனுகி மதம் மாற்றம் செய்யும் பேர்வழியினர்.

  ambikaiyin adyavan: December 20, 2014 at 04:29
  எமதூர் கலாச்சாரப் பண்பாடுகளுக்கும் இவையெல்லாவற்றுக்கும் மேலாக இவர்களுக்கு உல்லாச வாழ்வுதனை உவந்தளித்த அருள்நிறை அம்பாளிற்கும் துரோகமிழைத்து மதம்மாறிய இவர்கள், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கும்,அவர்தம் பிள்ளைகளுக்கும் உண்பதற்கு,உணவளித்து,வாழ்வில் முன்னேற்றம் காண கல்வியினையும் வழங்குவீர்களாயின் என்றென்றும் இறையருள் தங்களுக்குக் கிடைக்கும்.மதம் மாறவேண்டிய அவசியமும் ஏற்படாது.
  நன்றி! (நன்றி)

  ராஜராஜன்: December 20, 2014 at 12:41
  மக்கள் பலருக்கும்” – நீங்கள் என்ன செய்தீர்கள்?
  மதநம்பிக்கை அவரவர் சுதந்திரம் இதை மற்றவர்கள் கட்டு படுத்த முடியாது. அப்படி பயப்பிடுவதாயின் உங்கள் மத சார் நடவடிக்கைய்களில் எது கோளாறு இருப்பதாக அர்த்தமாகிவிடும்.
  “””சுதந்திரமாக சிந்திக்கவும் செயல்படவும் தடை போடாதீர்கள்””””

  arun: December 20, 2014 at 01:07
  நந்தன் அவர்களே எமது ஆலயங்கள் …….. இந்த இடங்களை நாம் சீர்படுத்தினால் எமது மக்கள் யாரும் மதம் மாறமாட்டார்கள்

  Tamilan Tamil: December 19, 2014 at 23:22
  பனிப்புலம் வாழ் உறவுகள் வெளிநாட்டில் சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக மதம் மாறினும் அதை எமது ஊருக்கு கொண்டு வருவது மிக தவறான செயலாகும் அதுவும் இந்து ஆலயத்துக்கு அருகாமையில் இதுவே எமது சமுக பொது நிகழ்வாக இருந்தால் அனைவராலும் ஏற்று கொள்ள கூடிய செயலாகும்

  vinothiny pathmanathan: December 19, 2014 at 22:28
  மறுமலர்ச்சி மன்றம் என்பது பொதுவான ……. ஒரு ஜனநாயக நாடு என்ற நோக்கில் எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு…. ( அருமையான விளக்கம்! )
  kuruvi: December 20, 2014 at 13:55
  மிட்டாயக் கண்டால் குழந்தை பறிக்கத்தான் செய்யும் .

  பலெர்மோ தமிழ் கிறுக்கன்: December 19, 2014 at 18:09
  ஆனால் அன்று எமது நாட்டை சுரண்டும் நோக்கோடு பல வெளிநாட்டவர்கள்
  படை எடுத்தார்கள் ….. எடுபடவில்லை!!!.

  KAANDEPAN: December 19, 2014 at 17:50
  இதை எதிர்ப்பவர்கள் எமது ஊர்ப் பெரியவர்கள் அல்ல.ஆறுமுகநாவலர் தான் பைபிளை தமிழில் மொழி பெயர்த்தவர். தைப்பூசத்தை மன்ற கோயிலில் நாடாத்தி இந்துக்கள் எல்லோரும் காசு சேர்த்து ஏழைகளுக்கு உதவி எமது மக்களின் மத மாற்றத்தை தடுக்கலாம்

 • ragavi:

  இன்று மறுமலர்ச்சி மன்றவாசலில் நடந்த நிகழ்வு மிகவும் மனம் வருந்ததக்கது .மன்ற நிர்வாகம் எதையும் மக்களுக்கு எதிராக செய்யமாட்டாது .மன்றத்தில் உள்ள உள்ளரங்கம் வாடைகைக்கு கொடுக்கப்பட்டது என்பது உண்மை .ஆனால் நீங்கள் கூறுவதுபோல்
  மதமாற்ற பிரசாரத்துக்கு தான் கொடுக்கப்பட்டது என்றால் அது மாபெரும் தவறு மன்றஆரம்பகாலத்தில் இருந்து இன்றுவரை மன்றத்துக்கு எதிரானவர்கள் செயல் பட்டுக்கொண்டே தான் இருக்கிறார்கள்.உதாரணத்திற்கு மன்ற கட்டுமான பணிதொடங்கும்போது அதை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுத்தார்கள். ஒன்றும் கைகூடவில்லை.பல தடைகளை தாண்டி அந்த மாபெரும் கட்டுமானப்பணி புலம் பெயர்
  மக்களின் உதவியுடனும்,ஊர்மக்கள் உதவியுடனும் மிகவும்வேகமாக சிறப்பாக நடை
  பெற்றுமுடிந்தது .இது யாவரும் அறிந்ததே.இந்த அசுர வளர்ச்சியை கண்டு பொறுக்கமுடியாத
  எதிரணி மன்றநிர்வாகத்தை பார்த்து எள்ளி நகையாடியது .இவர்கள் மக்கள் மத்தியில் தாங்கள்
  ஏதோ சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் போல் நாடகம்மாடி தங்களை பிரபலபடுத்திக்கொண்டு
  சந்தர்ப்பம் பார்த்து மக்களின் மனதில் விசத்தை தூவி விடுகிகிறார்கள்.அப்படி தூவிய விசம் தான் இன்று நடந்த சம்பவம் .இன்று நடந்த சம்பவத்தில் கூட மக்களின் உணர்வுகளை மதித்து தான்
  மன்ற நிர்வாகம் இந்த நிகழ்ச்சியை நிறுத்தியுள்ளது என்றால் அது மிகையாகது.மன்றத்தில்
  கடந்த காலங்களில் சில தவறுகள் தனி மனிதனால் நடந்து உண்மை .ஆனால் இப்போ இல்லை .

 • அற்புதன்:

  மதப்பிரச்சாரம் என்பது எங்களூரில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நடைபெற்று வரும் ஒரு விஷயமாகும். என்னைப் பொறுத்தவரை.இன்று மறுமலர்ச்சி மண்றத்தில் நடந்துமுடிந்த போராட்டம் .என்பது மத ரீதியான இரு மதத்தினருக்கும் இடையே உள்ள ஒரு மதமாற்ற பிரசாரத்திற்கு எதிராக நடாத்தப்பட்ட போராட்டமேயல்ல!.இன்று எங்களூர் . எவரது கையில் இருக்கிறதோ எவர்கள் ஆட்சியில் இருக்கின்றனரோ அவர்களுக்கெதிரான ஓரு அந்தஸ்து போராட்டமே!. உயர்ந்த இடத்தை அடைந்து கொள்வதற்கான ஒரு போராட்ட ஒழுங்கு என்று கூட சொல்லலாம். எனவே எனது கருத்து பலருக்கு விதண்டாவாதமாகத் தென்படலாம்.சிலருக்கு கோபத்தையும் ஏற்படுத்தலாம்.அதனால் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்..

 • இந்தமதத்தின் காவலர்கள்.:

  இன்று எங்கள் கிராமத்தில் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவிற்கே அங்கலாப்பவர்கள் பெருமளவில் உண்டு. இவர்களது வாழ்வாதார மேம்பாட்டுக்கு ஊர்ப்பெரியவ்களிடம் எதாவது திட்டங்கள் உண்டா? மன்றத்தில் நடைபெறவிருந்த்து.ஒரு கிறிஸ்தவ இசைநிகழ்ச்சி .இதனைத்தடுத்து நிறுத்திய கோமாளித்தனத்தினூடூ அவர்களது மன்றம் பொறாமை குறைந்திருக்கும். விடுப்புபார்க்க வந்த அனைவருமே போராளிகளாகியுள்ளனர்.ஆலயத்தை சிறிநீர்களிக்குமிடம் என்றவரும் ஒரு ஆன்மீகவாதி.இறைவன் தூணிலும் இருப்பார்……….என்கிறது இந்துமதம் . இவர்கள்தான் இந்தமதத்தின் காவலர்கள்.

 • ஊர் நல விரும்பி:

  தயவு செய்து ஒரு சின்ன விசையத்தை பெரிசாக்காதீங்க …….நமூர் மக்கள் ஒற்றுமையுடன் அயல் ஊர் கிறிஸ்தவ மக்களுடன் வாழ விடுங்க ….நாம வெளிநாட்டில அவங்க இடத்தில வந்து முழத்துக்கு முழம் இந்து ஆலயம் கட்டுகிறோம் அதுக்கு அவன் எதாவது சொன்னால் “இன-மத ” தோஷம் என்கிறோம் அனால் நம்மூரில் , நமது அயல் கிராம மக்கள் எதாவது தங்கள் மத கொண்டாட்ட நிகழ்வி செய்ய நாம எதிருப்பு காடிறோம் ….

  இதுவே சிங்களவன் வந்து நாளைக்கு புத்த மதம் பரப்ப மண்டபம் கேட்டால் உங்களால் குடுக்காமல் இருக்க முடியுமா? ஏன் சம்பில்துறையில சிங்களவன் யாருக்கக்க ஒரு புத்த கோயில கட்டி இருக்கான்? இதை எதிக்க உங்கள்ளுக்கு துப்பில்லை அப்புறம் எங்கள் சக தமிழ் உறவினர் வேற ஒரு மதம் பின்பற்றுற காரணம் காட்டி அவர்களுக்கு மண்டபம் கொடுக்காமல் அடாவடி தனம் செய்கிற வேலை அநாகரிகம் …தாவி செய்து மத –இன -சாதி வேறு பாடு காட்டதிங்க….இது கடைசியா உங்களை தான் பாதிக்கும்.

  ஊர் நல விரும்பி

  • நந்தன்:

   வெளிநாட்டில கோயில் கட்டி நாங்கள் மதம் பரப்பவில்லை…….. சம்பில்துறை புத்தர் மதம் பரப்பவில்லை……….. ஆனால் இவர்கள் காசு ஆசை காட்டி, பொய் சொல்லி மதம் பரப்புபவர்கள்…………. இதை புரிந்து கொள்ளுங்கோ எல்லாரும்……..

   • ஊரிலுள்ள மதம் மாறப்போவர்களுக்கு மண்டைக்குள் ஒண்டும் இல்லை என்று சொல்லுறீங்கள். அப்படித்தானே?

    • நந்தன்:

     வாழ்க்கையில் எல்லாருக்கும் இடையில் விபத்து அல்லது வறுமை, வழி மாறி போதல் போன்ற நிகழ்வு தவிர்க்க முடியாமல் ஏற்படுகின்றது. அந்த நேரம் எம்மைப் போன்ற சராசரி மனிதன் சுயமாக சிந்திக்கின்ற நிலையில் தடுமாறுகின்றான். பலவீனமடைகிறான்.. அந்த நேரம் பார்த்து இப்படிப் பட்ட பேர் வழிகள் )(மதம் மாற்றுபவர்கள்.) அவர்களை அனுகி அந்த துன்பங்களில் இருந்து தாம் விடுதலை வாங்கி தருவதாக பொய் கூறி அவர்களின் வாழ்வை திசை திருப்புகிறார்கள்.

     உண்மையில் அவர்களின் வாழ்வில் இவர்கள் விளக்கு ஏற்றி வைப்பார்களேயானால் இந்த நிகழ்வை நானே தலைமை ஏற்றி எனது வீட்டில் நடாத்தி வைப்பேன். ஆனால் இவர்கள் சொல்லதெல்லாம் பச்சை பொய்.

     அதனால்தான் இந்த நிகழ்வை மன்றம் போன்ற பொது இடத்திலோ, எமது ஊரிலோ என் சக்திக்கு உட்பட்ட அளவிற்கு எடுத்து சொல்லி தடுக்க முயலுகிறேன். அவ்வளவுதான். அவர்களுக்கு அறிவு இருக்கின்றது. இல்லை என்று யாரும் இங்கு சொல்லவில்லை…

     • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

      நீங்கள் குறிப்பிடுபவர்கள் சுயநம்பிக்கை இழந்தவர்கள். இந்த சிறுபான்மை வகையினர் தாம் தழுவிய மதத்தில் இருப்பதே தமது மதத்துக்கு கேவலம் என்றுதான் கூறவேண்டும்.
      ஊரில் அரங்கேற்றப்படவிருந்த நிகழ்வு மதம் மா(ற்)றும் நிகழ்வு என்று ஊரவரை எவராவது கலந்துகொள்ளும்படி அறிவித்தல், பிரச்சாரம் செய்யப்பட்டிருந்ததா? அல்லது மதம் மாறப்போகும் ஊரவர் எவராவது இந்நிகழ்வில் கலந்திருந்தார்களா? பலருக்கு அங்கு நிகழ இருந்த நிகழ்வு என்னவென்று தெரியாமலே தமது கருத்துக்களை இங்கு வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுவே எனது கருத்து.

      சிறுவயதில் உறவினரில்லாத, உதவியெதுவுமற்ற, அறியாத, அந்நிய நாடொன்றில், வறுமையான சூழ்நிலையில், எவ்வித உதவியும் கிடைக்காமல், ஆரம்ப நிலைப்பன்ம வயதில் அகதி முகாமில் வசிக்கும்பொழுது தங்குமிட அனுமதிப்பத்திரம் பெற்றுத்தருகிறோம், மேலதிக வசதிகள் அமைத்துத்தருகிறோம், வேலை வாய்ப்பு பெற்றுத்தருகிறோம், வாழ்க்கையின் உச்சத்தில் ஏற்றி விடுகிறோம் என்று கூறி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூரங்கள் பார்க்காது வாகனங்கள் விட்டு ஏற்றிக்கொண்டுபோய் ஓதுவார்கள், ஓதுவார்கள், ஓதுவார்கள், எல்லாரும் தலையை கொடுப்பார்கள், வாகனத்தில் சேர்ந்து ஏறி வந்த தமது வாழ்க்கையில் பக்குவமடைந்தவர்கள், பெரியவர்கள், மூத்தவர்கள் தமது தலையை கொடுத்து என் கண் முன்னேயே மயங்கி விழுவார்கள், தொடர்ந்த ஓதுவார்கள், நானும் என் தலையை கொடுப்பேன் என் தலை என்னமோ மரமண்டையோ அறியேன். எனது இயல்பான சுபாவம் எக்காரணத்துக்காகவும் எனது சுயநம்பிக்கையை விட்டுக்கொடுக்கமாட்டேன் எனக்கு ஒண்டுமே ஏறாது, ஒண்டுமே நடக்காது, சாதுவாக களைப்பு வரும் ஒருநாளும் சாப்பிடாத சாப்பாடை அன்று சாப்பிட்டு விட்டோமே என்று. அகதிமுகாமில் சோறு கூட காட்டமாட்டார்கள், ஞாயிறுகளில் இடியப்பம், பிட்டு, உப்பு மா, தோசை, அப்பம் என்று ஏதோ என்னமோ விசேஷமான தமிழ் சாப்பாடுகள் கிடைக்கும். வாராந்தம் ஒரு outing ஆக இதை உபயோகித்து/துஷ்பிரயோகித்து வந்தேன். வாராந்தம் தலையையும் கொடுப்பேன் ஒண்டுமே எனக்கு ஏறாது. நான் குறிப்பிடுவது கித கால் நூற்றாண்டுக்கு முன்னர், அதாவது இன்றைய நவீனம், தொழில்நுட்பத்தை மனிதன் காண்பதற்கு முன். ஏன் இப்படியான இணையங்கள் எல்லாம் என்னென்று தெரியாத காலத்தில். நந்தன் என்பவர் உலகின் எப்பக்கத்தில் இருக்கக்கூடும் என்று அறிந்துகொள்ளமுடியாத காலத்தில் என்றும் சொல்லலாம். உலகத்தின் இன்னொரு பக்கத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று அறியமுடியாத காலப்போக்கில். இன்றைய நிலை முற்றிலும் வேறு.
      எனக்கு செலவழித்தது வீண் என்ற வெறுப்பு ஏற்பட்ட பின்னர், இந்த மரமண்டையனுக்கு ஒண்டுமே ஏறுதில்லை என்ற வெறுப்பால் ஊர் உறவினருக்கு ‘உண்ட மேன் அங்க கஞ்சா அடிச்சுக்கொண்டு திரியிறான்’ என்ற முறைப்பாடு தான் அவர்களுக்கு கிடைத்த இலாபம். ஆனால் கால்நூற்றாண்டு காலமாக சிகரட் எனது உதடுகளை தொட்ட அனுபவம் இன்னமும் கூட இல்லை, இனியும் இல்லை.

      சின்ன விடயத்தை பெரிதாக்கினால் பாரிய சேதம் எங்களுக்கே.
      விளம்பரம் தேவையில்லாததற்கு இலவசமாக பிரச்சாரம் செய்துகொடுப்பதாகவே இது முடிகிறது.

      இதற்கு சமீப கால நடைமுறை உதாரணம்: கத்தி படத்துக்கு Lyca விளம்பரம் செய்தது ஆகக்குறைவு – படத்தை நீண்ட நாட்கள் ஒட்டியவர்கள் கத்தியை எதிர்த்தவர்களே!

    • kaalaivelan:

     அப்படி இல்லை அண்ணா ,சொக்காயைக் காட்டினால் சின்னப் பாப்பா ஓடிவரும் தானே .

     • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

      ஊராக்கள் எல்லாரையும் சின்ன பாப்பாக்களுக்கு வைச்சிருந்தால் நத்தார் முடிஞ்ச பிறகு நீங்கள் அதே சொக்காவை காட்டி அதே ஆக்களை திருப்பி இந்துவுக்கு மாத்தலாம் தானே. சமயம் பார்த்து மாறுவதுதானே சமயம். அம்மன் வீதி, சில்லாலை என்று போய் கல்பணிஸ், வெண்பொங்கல் எல்லாம் வாங்கிச்சாப்பிட்டனாங்கள் இருக்கிறோம் எத்தனை பேர் இப்ப என்ன சிலுவையோடையே திரியிறோம்? அந்தக்காலத்திலை சில்லாலை, மாதகல், பண்டத்தரிப்பு என்று கிறீஸ்தவர்களை வடிவு கூடவென்று லவ்வினவை வீட்டுக்கு/ஊருக்கு பயந்து கடைசியில் எல்லாத்தையும் விட்டுட்டு ஊருக்குள்ளையே கட்டினவை எத்தனை பேர் இங்க இதை வாசிச்சு அமைதியாய் சிரிக்கினம் பாருங்கோ? அதுவும் ஊருக்குள், போராட்டக்காலத்தில் ஆமிக்காரன் கூட முகாம் அமைக்காத எங்கட ஊருக்குள். ஊருக்குள் கொமுனிசத்தின் தாக்கம் கூட இருந்தும், அதை பின்பற்றுபவர்களை இப்பவும் 2014இல் கைவிட்டுத்தான் எண்ணலாம். முழு ஊருமே இப்ப கொமுனிசமே?

      சுயநம்பிக்கையை பற்றி சுயஅனுபவத்தோடு கலந்து இங்க எல்லாருக்கும் விளங்கிற மாதிரி தெருத்தமிழில் எழுதியிருக்கிறன். அதை இன்னொருக்கால் வாசியுங்கோ. சுயநம்பிக்கையில் தளம்புவனே எல்லாப்பக்கமும் இழுபடுவான். வறுமை, வருத்தம், குறைபாடு, பேராசை எல்லாம் வெறும் நொண்டிச்சாட்டுகளே.

     • oor kurivi:

      அறிவுரை வழங்க அறிவு தேவையில்லை. யாரும் யாருக்கும் அறிவுரை வழங்கலாம். காது கொடுத்து கேட்க ஆட்களிருந்தால் காசின்றி அறிவுரை வழங்கவும் ஏராளமான ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். அறிவுரை வழங்க அந்த விடயத்தில் அனுபவம் தான் தேவை . அனுபவம் தான் வாழ்க்கை. அப்படி தனக்கு வெளிநாட்டில் ஆரம்ப காலத்தில் நடந்த அனுபவத்தை “நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:December 22, 2014 at 01:48” அழகாக இங்கு பகிர்ந்து இருக்கிறார்.

      இப்படி தடுப்பதால் விளைவு இப்படியும் வரலாம் என்று கத்தி படத்திற்கு நடந்ததை உதாணமாக காட்டியிருக்கிறார். எந்தப் பொருளும் சந்தைக்கு வருவது தான் ஜனநாயகம், சுதந்திரம். அது சரியா பிழையா என்பது மக்கள் தெரிவு செய்யவேண்டும். மிட்டாய் எடுப்பவரை எடுக்க விடுங்கோ, அது தான் சுதந்திரம். இது ஒரு வித காளி ஆட்டம் என்பதை ஒத்துக்கொள்ளுகின்றேன். அதை பொது இடத்தில் செய்வதில் தப்பில்லை. ஒளித்து வைத்து செய்தால் அது கஞ்சா வியாபாரம்.

      பதினாறு வயதில் ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்து வந்த நம் ஊர் கட்டிளம் காளைகள் வாழ்கையில் எவ்வளவு விடயங்களை பார்த்தும் அதற்கு அடிமைப்படாது பக்குவப்பட்டு ஒழுங்காக உயர்வாக பலமடங்கு தன்னம்பிக்கையோடு வாழவில்லையா….?

 • nakkeeran:

  நாங்கள் நாலு பேர் இந்த ஊரையே மாற்றுவோம் எனக் கனவு கண்டவர்களுக்கு இன்று நல்ல பாடம் .

 • Vaasakan:

  இவ்விடயத்தில் மன்ற நிர்வாகத்தில் எவ்வித பிழையும் இல்லை.
  மிகவும் சரியான அணுகுமுறையை கடைப்பிடித்திருக்கிறார்கள்
  எமது ஊரில்கிறிஸ்மஸ் விழாவினை கொண்டாட உள்ளோர்
  எமது ஊரவர்தான் அவர்களும் மன்றத்தின் பாரிய கட்டுமானபணிக்கு பாரிய‌
  பங்களிப்பு செய்தவர்கள்தான்.அவர்களின் ஜனநாயக உரிமை.அவர்களின்
  பேச்சு சுதந்திரம்.

  மேலும் மன்றத்து முருகன் கோயில் கும்பாவிசேக‌ம்
  செய்ய பலலட்சம் ரூபா சன்மானம் கேட்டு இறுதியில் அவர்கள் வராமல்
  வேறு ஊரவரை வைத்து குறைந்த செலவில் கும்பாவிசேகம் செய்தோம்.
  இந்துக்கள் என்று மார்பு தட்டி சொல்லும் எமது ஊரவர் பலர் மன்றத்தில் நடந்த‌
  கும்பாவிசேகத்துக்கு ஒரு நாளும் வரவில்லை.

  மேலும் நீங்கள் விரும்பினால் இந்துக்களின் பகவற்கீதை என்னசொல்கிறது
  அதில் உள்ள விடயங்களை மன்ற மண்டபத்தினை வாடகைக்கு எடுத்து
  நீங்களும் மக்களுக்கு தெளிவுபடுத்தலாம். இதில் ஒரு பிரச்சனையும்
  இல்லை.அல்லது இந்து கலாச்சார கருத்தரங்கு , இந்துக்களின்
  விழா ஏதாவது செய்யலாம்.

  நீங்கள் வாழும் நாடுகளில் வேலை செய்யும் இடங்களில், கடைகளில்
  உங்களுக்கு நத்தார்ப் பரிசு கிடைக்கிறது. அதை நீங்கள் மனமுவந்து வாங்குகிறீர்கள்
  மேலும் சில நாடுகளில் மார்கழிமாத ஊதியம் இரண்டு மடங்காககொடுக்கிறார்கள்.
  அதையும் நீங்கள் பெற்றுக்கொள்கிறீர்கள். மேலும் ஒருசிலரின் வீட்டில் கூடி கிறிஸ்மஸ்
  மரத்தினை வைத்து அலங்கரித்து இருக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நத்தார்பரிசு
  என்று நீங்கள் பரிசுப்பொருட்களை வாங்கிக்கொடுக்கிறீர்கள்.வீட்டிற்க்கு வெளியே
  வர்ண விளக்குகளால் அலங்கரித்து கொண்டாடுகிறீர்கள். எல்லாவற்றையும் நீங்கள்
  செய்து கொண்டு பின்பு நீங்கள் ஊரில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடகூடாது என்று
  சொல்கிறீர்கள். உலகம் முழுவதும் கிறிமஸ் விழா கொண்டாடுகிறார்கள்.

  சரிஎல்லாவற்றையும் விட்டு நீங்கள் எல்லோரும் பாவிக்கும் கலண்டர்
  உலக சரித்திரம் கிறிஸ்துவின் பிறப்பினை மையமாக வைத்தே கிறிஸ்துக்குமுன்/ கி.பின்
  எனபிரித்து இன்று நாம் கிறிஸ்துவுக்குபின் ஆண்டு 2014 இல்வாழ்ந்து கொண்டுஇருக்கிறோம்
  கலண்டரினை பாவிக்காது விட்டுவிடுவீர்களா??

  • kaalaivelan:

   நீங்கள் கட்டியது கோயிலா ?உங்கள் வசதிக்காக குடியிருந்த கோயிலை அகற்றிநீர்களே ,தெருவால் போகிறவர்கள் மறைவாக ஒன்றுக்கு இருக்க இடமல்லவா அமைத்துக் கொடுத்துள்ளீர்கள் .நீங்கள் கட்டியது கோயில் என்றால் மக்கள் வந்திருப்பார்கள் .நீங்கள் 20லட்சம் வேலுக்கு விலை பேசியவர்கள்தானே .

 • sasi:

  காலைச்செஞ்சூரியன் இப்படியொரு பதிவை சில நாட்களுக்கு முன் இட்டிருந்தான்????

  பன்முகத் தன்மையைப் பற்றி அறியாத xxxxxx:

  மன்ற மண்பத்தை வாடகைக்கு எடுத்து எமது ஊரவர்கள் சிலர் ஏற்பாடு செய்திருக்கும் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் ஒளி விழா நிகழ்வுக்கு எதிராக, RSS இன் அடிவருடிகள் சிலர் பொய்ப்பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது. இவ் வைபவம் இலங்கை முழுவதும் அனைத்து அமைப்புக்களிலும் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

  எமது கிராமத்தில் ஓர் தரமான முன்பள்ளி இன்மை:

  எமது கிராமத்தில் ஓர் தரமான முன்பள்ளி இன்மையால், எமது கிராமத்தின் பாலர்கள் பலர் சில்லாலையில் அமைந்துள்ள கிறிஸ்த்தவப் பாலர் பாடசாலைக்குச் செல்வது பல ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் துர்ப்பாக்கிய விடயமாகும். இதை எமது கிராமத்தின் இந்து மதக் காவலர்கள் கவனத்தில் எடுத்துச் செயற்படுவார்களா?

  வீணான செயலீனத்தால் வீணாகிப்போன மக்கள் பணம்:

  அம்பாள் சனசமூக நிலைய முன்பள்ளிக்கு வலிகாமம் கல்வி வலயத்தால் வழங்கப்பட்ட ரூபா 25 000 நிதி அம் முன்பள்ளி இயங்காமல் இருப்பதன் காரணமாக சுழிபுரத்தில் உள்ள முன்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது.

  கூறுபோட்டு கொள்ளையடிக்கப்படும் பனிப்புலம் முத்துமாரி அம்மன்:

  இரண்டு குடும்பங்களால் பங்கு பிரிக்கப்பட்டு பல ஆண்டுகளாக எமது அம்மன் கோயில் பங்கு பிரித்து பகற்கொள்ளைக்கு ஆளாகியுள்ளதைக் கவனித்து, மக்கள் அனைவரும் அணிதிரண்டு அதைத் தடுத்து, தனிநபர்கள் சிலரால் ஏப்பம் விடப்படும் கோயில் காசைக் கோயிலின் அபிவிருத்திக்கும், கிராமத்தின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்துவார்களா?

  பிரச்சினைகள் திசைதிருப்பப்படுதல்:

  எமது கிராமத்தில் கல்வி நிலையம் என்ற பெயரில் தனி நபர் ஒருவரால் மேற்கொள்ளப்படும் கொள்ளையைப் பற்றிப் பொதுமக்கள் கவனம் செலுத்தாமல் இருக்க அவர் சில இல்லாத பிரச்சினைகளைக் கிளறி ஊதிப் பெருப்பிப்பதாக அறிய முடிகின்றது. இப்போது ஊரில் இளைஞர் மத்தியில் நிலவும் ஒற்றுமையையும் இவர் குலைக்க முயல்வதாக அறியக்கூடியதாக உள்ளது. ஆனால், பொருளாதாரத் தடைக் காலத்தில் குழந்தைகளுக்கான பால்மாவைத் தான் பருகுவதற்காகக் கொள்ளையடித்த நேர்மையான இச் சமுர்த்தி அதிகாரிக்கு இவ் இளைஞர் ஒருங்கிணைவு வெகு விரைவில் ஆப்பாக அமைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  அந்நிய மதத்தின் தலையீட்டை எதிர்ப்பதற்கான கிராம மக்களின் ஒருங்கிணைவு வெற்றிபெற வாழ்த்துகின்றோம்.

  ‘உனது கருத்து எனக்கு எதிரானதாக இருந்தாலும், அக் கருத்தைத் தெரிவிக்க உனக்கு உள்ள உரிமையைக் காப்பதற்காக நான் எனது உயிரையும் கொடுப்பேன்’ என்ற ஒரு அறிஞனின் குரல் இன்று எனது கிராமத்தில் எதிரொலித்தது.

  • நந்தன்:

   செஞ்சூரியன் அவர்களே…..மேற்படி அமைப்பினர் உலகம் முழுக்க என்ன செய்கிறார்கள் என்பதை ஊரில் இருப்பவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களுக்கு மன்ற அரங்கை வாடகைக்கு விடுவதற்கு முன்னர் அவர்கள் செயற்பாடு பற்றி யாரடமாவது விசாரித்து தெரிந்து கொண்டிருக்கலாம்.

   கிறிஸ்மஸ் விழா என்றதும் எமக்கு அயலில் இருக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் விழாதான் நம்மில் பல பேருக்கு ஞாபகம் வரும்..

   ஆனால் இவர்கள் அப்படி அல்ல…. வாழ்வில் ஏற்பட்ட விபத்துகளால் நொந்து போய் இருக்கும் மக்களை அனுகி மதம் மாற்றம் செய்யும் பேர்வழியினர். இவர்களை தயவு செய்து மன்ற வளாகத்தினுள் அனுமதியாதீர்கள்.

   நாளைக்கு மதுப்பிரியர்கள் குடித்து மகிழ மன்ற அரங்கத்தை வாடகைக்கு கேட்டால் கொடுப்பீர்களா.. மன்ற அரங்கம் என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. தயவு செய்து இந்த விழா மன்ற வளாகத்தினுள் நடைபெற விடாதீகள்.

 • ambikaiyin adyavan:

  புலம் பெயர் வாழ் எமதூர் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வும், இந்நிகழ்வு பற்றி *காண்டீபன்* என்பவர் வழங்கியுள்ள கருத்தும்,மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

  பணத்திற்காக மனச்சாட்சியை சிதைத்து, பெற்றவர்க்கும், பேசும் தாய்மொழிக்கும்,பிறந்த மண்ணுக்கும், எமதூர் கலாச்சாரப் பண்பாடுகளுக்கும் இவையெல்லாவற்றுக்கும் மேலாக இவர்களுக்கு உல்லாச வாழ்வுதனை உவந்தளித்த அருள்நிறை அம்பாளிற்கும் துரோகமிழைத்து மதம்மாறிய இவர்கள்,தாம் வாழும் நாட்டிலிருக்கின்ற கிறிஸ்தவ திருச்சபைகளிடமிருந்து மென்மேலும் கோடிக்கணக்கில் பணம் பெற்று தமது பொருளாதாரத்தை வளர்க்கும் நோக்கத்திலேயே இத்தகைய சிறு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். இவர்களது இந்த நடவடிக்கையானது மறுமலர்ச்சி மன்ற நிர்வாகத்தினரால் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.

  மறுமலர்ச்சி மன்ற நிர்வாகமானது ,இந்நிகழ்வுக்கு அநுமதி வழங்குமாயின் , மன்றத்துக்கு பூமிதானம் செய்த நன்கொடையாளருக்கும்,மன்றத்தினரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட முருகன் ஆலயத்துக்கும், மன்றக் கட்டிடப் பணிகளுக்கு உதவிகள் வழங்கிய புலம்பெயர் ,மற்றும் புலத்தில்வாழ் மக்கள் பலருக்கும் மற்றும் புலத்தில் வாழ்கின்ற மக்களுக்கும் நம்பிக்கைத் துரோகம் இழைத்தவர்களாகவே கருதப்படுவார்கள்.எனவே மன்ற நிர்வாகமும், சம்பந்தப்பட்ட விழா அமைப்பாளர்களும் உடனடியாகவே தத்தம் நிலைப்பாடுகளை மக்களனைவருக்கும் தெளிவுபடுத்த வேண்டியது அவர்தம் கடமையாகும்.

  இவ்விழா ஏற்பாட்டாளர்கள் நத்தார் பரிசுகளை நமதூர் சிறுவர்களுக்கு வழங்காது வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கும்,அவர்தம் பிள்ளைகளுக்கும் உண்பதற்கு,உணவளித்து,வாழ்வில் முன்னேற்றம் காண கல்வியினையும் வழங்குவீர்களாயின் என்றென்றும் இறையருள் தங்களுக்குக் கிடைக்கும்.மதம் மாறவேண்டிய அவசியமும் ஏற்படாது.

  நன்றி!

  • ராஜராஜன்:

   “மன்றத்துக்கு பூமிதானம் செய்த நன்கொடையாளருக்கும்,மன்றத்தினரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட முருகன் ஆலயத்துக்கும், மன்றக் கட்டிடப் பணிகளுக்கு உதவிகள் வழங்கிய புலம்பெயர் ,மற்றும் புலத்தில்வாழ் மக்கள் பலருக்கும்”
   இதயே சற்று மாத்தி யோசித்தால்

   “அம்மன் கோவிலுக்கு பூமிதானம் செய்த நன்கொடையாளருக்கும்,ஊரவர் பணத்தில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட அம்பாள் ஆலயத்துக்கும், கோவில் கட்டிடப் பணிகளுக்கு உதவிகள் வழங்கிய புலம்பெயர் ,மற்றும் புலத்தில்வாழ் மக்கள் பலருக்கும்” – நீங்கள் என்ன செய்தீர்கள்?

   மதநம்பிக்கை அவரவர் சுதந்திரம் இதை மற்றவர்கள் கட்டு படுத்த முடியாது. பொது இடம் ஒன்றில் எந்த மதத்தவர்க்கும் மத கொண்டாட்டங்களுக்கு உரிமை உண்டு. ஏன் பயப்பிட வேண்டும்? அப்படி பயப்பிடுவதாயின் உங்கள் மத சார் நடவடிக்கைய்களில் எது கோளாறு இருப்பதாக அர்த்தமாகிவிடும்.
   புலம்பெயர் தேசத்தில் நவராத்திரி கொண்டாட இங்குள்ளவர்கள் இப்படி அனுமதி மறுத்தார்களா?
   சுதந்திரமாக சிந்திக்கவும் செயல்படவும் தடை போடாதீர்கள்.

 • arun:

  நந்தன் அவர்களே எமது ஆலயங்கள் தம்மை சீர்படுத்தவெண்டும் எமதுசமயத்தில் உள்ள சாதிய அடக்கு முறைகள் ஒழிக்கப்பட வேண்டும் அம்மன் கோவிலிலோ இடும்மன் கோவிலிலோ தாழ்த்தப்பட்ட சாதியென ஒடுக்கப்பட்டவர்கள் சுவாமி தூக்க அனுமதிப்பதில்லை தூர இடத்து உயர்ந்த சாதி ஆக்களை கூப்பிட்டுவிடும் அம்மன் கோவிலில் சாதிய அடுக்குமுறை தெரியாது சுவாமி தூக்கியஎமது ஊரதாழ்த்தப்பட்ட வாலிபன் துரத்தப்பட்டான் எமது ஆலய பரம்பரை பிராமணர்களால். இந்த இடங்களை நாம் சீர்படுத்தினால் எமது மக்கள் யாரும் மதம் மாறமாட்டார்கள்

 • Tamilan Tamil:

  நாங்கள் எந்த ஒரு நாட்டிலும் பனிப்புலம் என்று கூறும் போது நாங்கள் இந்துக்கள் எனநினைப்பார்கள் . பனிப்புலம் வாழ் உறவுகள் வெளிநாட்டில் சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக மதம் மாறினும் அதை எமது ஊருக்கு கொண்டு வருவது மிக தவறான செயலாகும் அதுவும் இந்து ஆலயத்துக்கு அருகாமையில் இதுவே எமது சமுக பொது நிகழ்வாக இருந்தால் அனைவராலும் ஏற்று கொள்ள கூடிய செயலாகும்

 • vinothiny pathmanathan:

  மறுமலர்ச்சி மன்றம் என்பது பொதுவான ஒரு இடம்.இங்கு சாதி ,மத பேதங்கள் ஒன்றுக்குமே இடமளிக்கக் கூடாது . அதாவது இந்து சமய விழாக்கள் மட்டுமே இங்கு நடத்த வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கக் கூடாது. எந்த சமய நிகழ்வுகளும் நடாத்தலாம்.ஆனால் மத மாற்றம் என்பது அவரவர் சொந்த விருப்பத்தின் படியே நிகழ்வது.அது அவரவர் உரிமை.யாரையும் நாங்கள் வற்புறுத்தி மதத்தில் இணைக்கவோ ,அல்லது மத மாற்றம் செய்யவோ முடியாது. நாங்கள் வாழும் இந்த புலம்பெயர் நாடுகளில் கிழமையில் ,அல்லது மாதம் ஒரு முறையாவது மத போதனை செய்யும் ஒருவர் வந்து வாசல் கதவை தட்டுகிறார் .நாங்கள் என்ன செய்கிறோம்,அவர் தரும் புத்தகங்களை வாங்க மறுத்து ,அல்லது இதில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்பதையோ நாசுக்காக கூறி அவர்களை அனுப்பி விடுகிறோம்.அதே போல எங்களுக்கு இந்த நிகழ்வில் விருப்பம் இல்லை என்றால் அதனை தவிர்த்து விடலாம் , அல்லது உங்கள் உறவுகளுக்கு சொல்லி அவர்களை அங்கு செல்ல வேண்டாம் என சொல்லுங்கள். அதை விடுத்து மன்றம் நிகழ்விற்கு இடம் அளிக்கக் கூடாது என குற்றம் சொல்வது பொருத்தமற்றது. இது ஒரு ஜனநாயக நாடு என்ற நோக்கில் எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. எனவே மன்ற நிர்வாகத்தினை இந்த விடயத்தில் நாங்கள் குற்றம் காணக் கூடாது என்பது என் எண்ணம் .

  • kuruvi:

   அக்கா உங்கள் கருத்தை erkkiren ஆனால் இது சமய விழாவல்ல .இது தவிச்ச முயல் அடிக்கும் செயல் .மிட்டாயக் கண்டால் குழந்தை பறிக்கத்தான் செய்யும் .

 • பலெர்மோ தமிழ் கிறுக்கன்:

  இலங்கைளில் உள்ள அனைவரும் பிறப்பால் இந்துக்கள்.
  ஆனால் அன்று எமது நாட்டை சுரண்டும் நோக்கோடு பல வெளிநாட்டவர்கள்
  படை எடுத்தார்கள் அதிலும் கடைசியாக ஆட்சிபுரிந்த ஆங்கிலேயன் மக்களுக்கு
  ஆசைவார்த்தைகள் உதவிகள் வைப்புருத்தல்கள் என்ற கோணத்தில்
  மதம் என்ற விதையப்போட்டு. கட்டாயப்படுத்தினால் மக்கள் மதம்
  மாறுவார்கள் என்ற கணக்கு பெரியளவில் எடுபடவில்லை!!!.
  ……………………………………………………………………………………………………………………………………
  பிறப்பால் நாங்கள் என்ன மதம் என்று தெரிந்துகொண்டு மதம் மாறுபவர்கள்,
  என்னைப் பொறுத்தளவில் இவர்கள் கோமாளிகளே!!!
  பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய்க்குசெய்யும் துரோகம்!!!
  எமது உறவுகளே இவர்களின் போலிமுக மூடிகளை கிழிந்து எறியுங்கள்!!!
  (அன்புடன் தமிழ்கிறுக்கன்)

 • KAANDEPAN:

  இதை எதிர்ப்பவர்கள் எமது ஊர்ப் பெரியவர்கள் அல்ல எமது ஊரைகாட்டி கொடுப்பவர்கள் இது மதம் மாற்றும் நடவடிக்கையல்ல புலம் பெயர் எம்மவர் தமது கிறிஸ்மஸ் விழாவை நாடாத்தி தமது உறவுகளுக்கு தங்கள் உதவிகள் வழங்கும் நிகழ்வு .இலங்கையில் யாரும் தமது மத நிகழ்வை நடாத்த உரிமை உண்டு அவர்களுக்கு நிகழ்வை நடாத்த இடம் கொடுக்க வேண்டும் .நாங்கள் அவர்கள் உணர்வுகளை மதிக்க வேண்டும் இதுதான் எமது விவேகானந்தரின் கருத்து .ஆறுமுகநாவலர் தான் பைபிளை தமிழில் மொழி பெயர்த்தவர் .நாங்கள் உண்மையான இந்துவாக இருந்தால் இவர்கள் விழா முடிந்த்ததும் பாரிய அளவில் எமது சமய திருமுறை விழாவை மன்ற மண்டபத்தில் நடத்தலாம் இந்த விழாவை எதிர்க்கும் எல்லோரும் இதற்கான ஏற்பாட்டை செய்து தைப்பூசத்தை மன்ற கோயிலில் நாடாத்தி இந்துக்கள் எல்லோரும் காசு சேர்த்து ஏழைகளுக்கு உதவி எமது மக்களின் மத மாற்றத்தை தடுக்கலாம்

  • நந்தன்:

   நாங்கள் மன்றம் கட்டினது போட்டி போட்டு உங்கள் மதங்களை பரப்புவதற்கு அல்ல..அதற்காக ஆலயங்கள் போதுமானளவு ஊரில் இருக்கு…….. என்னுடைய கருத்து மன்றம் எதற்கு எல்லாம் பாவிக்கலாம் என்று மன்ற நிர்வாகத்திற்கு தெரியவில்லை. அல்லது அந்த நிர்வாகத்தின் கண்ணை ஏதோ ஒன்று மறைக்கின்றது. அவ்வளவுதான்

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து