கோயம்புத்தூரை சேர்ந்த ரஜினியின் ரசிகர் ஒருவர் உடல்நிலை சரியில்லாத போது, லிங்கா படம் பார்க்க சென்ற திரையரங்கில் உயிரிழந்துள்ளார்.கோயம்புத்தூர் பேரூரை அடுத்த செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(56). சிறுநீரக பாதிப்பு காரணமாக இவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவருக்கு டிரிப் மூலம் மருந்து செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் லிங்கா படம் ரிலீஸ் ஆகியுள்ளதை கேள்விப்பட்ட ராஜேந்திரன் எப்படியாவது ரஜினியின் லிங்காவை பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பில் இருந்தார்.லிங்கா படத்தை பார்க்க பகலில் சென்றால் மருத்துவமனை ஊழியர்களிடம் சிக்கிக் கொள்வோம் என்று நினைத்து, இரவு காட்சியை பார்க்க திட்டமிட்டார்.இதையடுத்து நேற்று இரவு கையில் குத்தியிருந்த டிரிப் குழாய்களுடன் மருத்துவமனையில் இருந்து கோவை, எஸ்.பி.ஐ ரோட்டில் லிங்கா படம் ஓடும் திரையரங்குக்குள் சென்றுள்ளார்.10 மணி காட்சிக்கான டிக்கட்டை எடுத்து உள்ளே சென்ற அவர், லிங்கா படத்தை ரசித்து பார்த்தார்.படம் முடிந்து அனைவரும் வெளியில் சென்றனர். ராஜேந்திரன் மட்டும் இருக்கையிலேயே கிடந்தார், திரையரங்கு ஊழியர்கள் வந்து பார்த்தபோது அவர் இறந்து போனது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து பொலிசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.