உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

untitledநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மக்கள் மீண்டுமொரு மண்சரிவு அனர்த்தத்தில் தங்களது உறவுகளை இழந்துள்ளனர்.இன்று பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.கல்கந்த பகுதியில் வீடொன்றின் மீது, மற்றுமொரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஹெகொட பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், இருவர் உயிரிழந்துள்ளனர்.மேலும், பஹலகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளார்.பதுளை – மகியங்கனை வீதியின், சிறிகெத்த பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளதாக அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, வேவல்ஹிண்ண ரில்பொல – மெதகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகள் சிலவற்றுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.இந்த அனர்த்தத்தில் சிலர் காணாமற் போயுள்ளதாகவும் பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அத்துடன், மண்சரிவில் சிக்கி காணாமற்போனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் ஈடுபட்டிருக்கின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து