உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

untitledதமிழ் அரசியல் கைதிகள் 274 பேரை முதல் கட்டமாக விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி விசேட செயலணி ஆராயும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.அரச தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.நல்லிணக்க நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுப்பதற்காக விசேட ஜனாதிபதி செயலணியொன்றை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இவ்விசேட ஜனாதிபதி செயலணியில்  7பேர் வரை அங்கம் வகிப்பர்.கடந்த காலங்களில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களினால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 274 தமிழ் கைதிகளின் விடுதலை குறித்தும் இந்த செயலணி ஆராய்ந்து பரிந்துரை செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து