உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

 

Unavngivet-tilekiu                                                                                                 அம்பாள் துணை நிற்க.

எமது ஊரில் வாழும் பணிப்புலம் வாழ் பெரியோர்களுக்கு, யேர்மன் பீலவீல்வாழ் ஊர் நலன்விரும்பியின் ஓர் அன்பான வேண்டுகோள், ஊரில் நடக்கும் சிறுசிறு பிரச்சனைகளை வளரவிடாமல் பெரியோர்களாகிய நீங்கள் தலையிட்டு முடிந்தளவுக்குத் தீர்த்து வைக்கவும்.கடந்தகாலங்கள் போல சண்டை சச்சரவுகள், வெட்டுப்பகைகள் வேண்டாம்.நாங்கள் கடந்த ஒருதசாப்தகாலமாக நீதிமன்றங்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் கொடுத்தது கொஞ்நஞ்சமல்ல. யார் கொடுத்தாலும் அது எங்களூர் உழைப்பு. கஸ்ரப்பட்டு உழைத்து தேவையில்லாமல் ஏன் ……. ?இது இருபத்தோராம் நூற்றாண்டு. சண்டை வேண்டாம்.எல்லோரும் சமாதானமாக சந்தோசமாக இருப்போம்.பிளவு வேண்டாம். பிரிந்து இருந்தாலும் ஒற்றுமையாக இருப்போம். சதிசெய்வோரின் சதிவலைகளில் அகப்படாமல் சந்தோசமாக இருப்போம்.எட்டப்பர்கள் எல்லாக்காலங்களிலும் உருவெடுப்பர். அவர்களை அடையாளம் கண்டு ஓடோட விரட்டுவோம்.கடந்த முற்பது ஆண்டுகளாக எங்கே போனது இந்தச் சண்டித்தனம்?. அதுபோல ஏன் இன்னமும் வாழமுடியாதா? சிந்திப்போம்.செயலாற்றுவோம்.அடுத்தவர் அவமானப்படும் {மனம் புண்படும் }வகையில் எதையும் எழுதுவதோ, பேசுவதோ நல்ல பண்பல்ல.சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்  கோடாமை சான்றோர்க்{கு} அணி.ஒருபக்கம்மாக இல்லாமல் நடுவு நிலமையில் இருப்பதே அறிவுள்ளோர்க்கு அழகாகும்.பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்திறன்தெரிந்து கூறப் படும்.பிறர் குற்றம் பேசிப் பழிப்பவன் பிறராலும் குற்றங் கூறிப் பழிக்கப்படுவான் அன்பே சிவம்  ஒற்றுமையே வலிமை,மன்னிப்பதே மனிதப் பண்பு,எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் பேசித்தீர்ப்பதே சிறந்த வழி.இது எங்கள் ஊர் ஒற்றுமையாகவும் அன்பாகவும் இருக்கவேண்டும் என்ற ஆதங்கமே.

அன்புடன் பணிப்புலத்தான்.

2 Responses to “எமது ஊரில் வாழும் பணிப்புலம் வாழ் பெரியோர்களுக்கு”

  • saravanan:

    அருமையான கருத்து .இதை உணர்வரா நம்மவர்கள் ?

  • அற்புதன்:

    உறவுப் பாலத்தை தட்டியெழுப்பும் வகையில் தமது இடுகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் தமது ஆத்திர உணர்வை வெளிப்படுத்தியிருக்கும் பணிப்புலத்தானின் உள்ளத்தில் இருந்து எழுந்த உணர்ச்சி கருத்திற்கு மிக்க நன்றி!

    இருப்பிலும் ஊர் ஒற்றுமையாக இருக்க முயற்சிக்கும் பணிப்புலத்தானிடம் என் நெஞ்சில் அரித்திடும் ஒரு சில கேள்விகளை கேட்க நினைக்கின்றேன்.. தயவு செய்து இந்தக் கேள்வியை யதார்த்தமாக எடுத்துக்கொள்ளுங்கள். இடையூராக நினைக்கவேண்டாம்.எனவே எங்களூரில் நடக்கின்ற சம்பவங்ளில் இது சரியென்றும் அது பிழையென்றும் சரி பிழை என்பது பற்றி அலாவுவது என் கேள்வியல்ல.எமது ஊரில் இவ்வாறான சின்னச்சின்ன சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற போது அதை எம்மவர்களின் இணையதளத்தில் ஒரு தரப்பை பாராட்டியும் இன்னொரு தரப்பை புண்படுத்தியும் பலரும் விமர்சித்து கருத்துக்களை எழுதுகின்றனர். இப்படி எழுதுபவர்களின் கருத்துக்களைப் பார்க்கும்போது .ஊரவர் ஒற்றுமையாகக் கூடாது என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்ஆகவே ஊர் இரண்டுபட்டால்கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.அல்ல! கருத்தாளர்களுக்கு தான் கொண்டாட்டம்.எனவே இந்த விடயத்தில் ஊர் மக்கள் இரண்டாக பிளவுபட்டு இருக்கும் நிலைமைக்கு புலம்பெயர் வாழ் நாமும் ஒரு காரணமே!

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து