உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

தற்போது புலி படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக ‘ராஜா ராணி’ படத்தை இயக்கிய அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

இப்படத்தை ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்கிறார். இவர் விஜய்யுடன் இணையும் மூன்றாவது படம் இது. ஏற்கனவே விஜய் நடித்த சச்சின், துப்பாக்கி படங்களை இவர் தான் தயாரித்திருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார் என்பதும், இப்படத்திற்கு அட்லியின் ‘ராஜா ராணி’ படத்திற்கு இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ்குமாரே இசை அமைக்கிறார் என்பதும் ஏற்கெனவே முடிவான விஷயம்.

லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்தப் படத்தில் ராதிகாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ள ராதிகா சரத்குமார் இதுவரை விஜய் கூட நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில் இது விஜய், ராதிகா சரத்குமார் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து