உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஜியோ தொலைக்காட்சி நிருபர் ஒருவர் மர்ம நபர்களால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.

வாலி பாபர் என்ற அந்த நிருபர் பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பி்க் கொண்டிருந்தபோது ஒரு காரில் வந்த சிலர் லியாகுவட்டாபாத் பகுதியில் அவரை வழி மறித்து துப்பாக்கியால் சுட்டனர்.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என்பது குறித்து இப்போது கூறமுடியாது. கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெல்வன் கோத் பகுதியில் இரு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கலவரம் வெடித்துள்ளது. செவ்வாய்க்கிழமையில் இருந்து நடைபெற்றுவரும் இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து