ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான முனைப்புக்கள் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.ஏசியன் மிரர் ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.மிகவும் இரகசியமான முறையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கையொப்பங்களைத் திரட்டி வருகின்றனர்.நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த யோசனையை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால் அதன் பின்னர்,ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.75 பேருக்கு மேல் கையொப்பமிட்டு யோசனை முன்வைக்கப்பட்டால் அதனை சபாநாயகரால் நிராகரிக்க முடியாது என்று கையொப்பங்களைத் திரட்டி வருகின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்று அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.