உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

 

untitledசோயா வெஜ் குருமா 

சோயா பீன்ஸ்ஒரு கப்

பீன்ஸ் – 5

கேரட்ஒன்று

உருளைக்கிழங்குஒன்று

பச்சை பட்டாணிகால் கப்

பெரிய வெங்காயம்ஒன்று

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 2

மல்லித் தூள்ஒன்றரை மேசைக்கரண்டி

மிளகாய்த் தூள்ஒரு மேசைக்கரண்டி

மஞ்சள் தூள்ஒரு தேக்கரண்டி

பூண்டு – 4

இஞ்சிஒரு பெரிய துண்டு

தேங்காய் சொட்டு – 2

சோம்புஒரு தேக்கரண்டி

கறுவாஒரு துண்டு

ஏலக்காய் – 3

வெள்ளை எள்ஒரு மேசைக்கரண்டி

கொத்தமல்லித் தழைசிறிது

ஆலிவ் ஆயில் – 2 மேசைக்கரண்டி

கடுகு எண்ணெய்ஒரு தேக்கரண்டி

முதல் நாள் இரவே சோயா பீன்ஸில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.வெங்காயம், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.ஊற வைத்த சோயா பீன்ஸை எடுத்து சட்டியில்போட்டு தண்ணீர் வேக வைத்து எடுக்கவும். அதே போல் பட்டாணியையும் வேக வைத்து எடுக்கவும்.வெறும் தாட்சியில் வெள்ளை எள், ஏலக்காய் மூன்றையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம் சேர்த்து மைய அரைக்கவும்.தக்காளியை தனியாக அரைத்து வைக்கவும்.தேங்காய், சோம்பு சேர்த்து தனியாக அரைத்து வைக்கவும். தாட்சியில் எண்ணெய் ஊற்றி சூடனதும் கறுவா, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.வதக்கியவற்றுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்த கலவையை ஊற்றி மீண்டும் வதக்கவும்.அதனுடன் அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.நன்கு வதங்கி வாசனை வந்த பிறகு நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளைப் போட்டுக் கிளறவும். அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.காய்கறிக் கலவை கொதித்து பச்சை வாசனை போனதும் 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.10 நிமிடம் கழித்து காய்கள் வெந்ததும் வேக வைத்த சோயா பீன்ஸ் சேர்த்து, தேங்காய், சோம்பு சேர்த்து அரைத்த விழுதுடன் மேலும் அரை கப் தண்ணீர் ஊற்றி கலந்து கலவையில் ஊற்றி கிளறி மூடி வைக்கவும்.2 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.சோயா வெஜ் குருமா தயார்.

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து