உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

untitledரஷ்யாவின் அதிபரான புடின் பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார் என்று அவரது முன்னாள் மனைவி அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புதினின் முன்னாள் மனைவி லியிட்மிலா. புடின் லியிட் மிலாவை கடந்த 1983 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்

இந்த தம்பதியினருக்கு மரியா மற்றும் யேக்டரினா என 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக புடின் மனைவியை 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.கடந்த சில காலங்களாக விளாடிமர் புடினின் செயல்கள் மிக அதிகமாக விமர்சிக்கபட்டு வருகின்றன. மேலும் விளாடிமிர் புடினை சுற்றி ஒரு மர்மம் சுழன்றுகொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுவருகிறது.

இந்நிலையில் அதிபர் புடினின் முன்னாள் மனைவி லியிட்மிலா ஜேர்மனை சேர்ந்த ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் உண்மையான புடின் இறந்து நீண்ட நாட்களாகி விட்டதாகவும் தற்போது அவருக்கு பதிலாக அவரைப்போன்ற தோற்றமுடைய வேறு ஒருவர் அவர் இடத்தில் உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அதில் கூறியுள்ளது, என் கணவர் புடின் , துரதிருஷ்டவசமாக, நீண்ட காலத்திற்கு முன் இறந்து விட்டார். நான் அதை பகிரங்கமாக ஒப்புகொள்ள வேண்டும்.

ஏனெனில் அவரது சார்பில் நடந்துகொண்டு இருக்கின்ற செயல்களை என்னால் பார்த்துகொண்டு இருக்கமுடியவில்லை. இது மக்களுக்கு பயங்கரமாகத்தான் இருக்கும்.

புடினை கொன்ற மாதிரி என்னையும் என் மகள்களையும் கொலை செய்து விடுவார்களோ என்று நான் தற்போது பயப்படுகிறேன்.

எனக்கும் புடினுக்கும் திருமணம் நடைபெற்றபோது எனக்கு உளவுத்துறை அதிகாரிகள் மீது பாசம் இருந்தது. ஆனால் திருமணத்துக்கு பிறகு நடந்தது வேறு விதமாக இருந்தது.

புடின் கீழ்த்தரமானவர்.கொடுமையான மனிதர்.கொடுங்கோலன்,அவர் எனக்கு மதிப்பு அளித்ததே இல்லை. என்னை பெயரளவுக்கு மட்டுமே மனைவியாக நடத்தினார். நான் நீண்ட நாட்களாக கொடுமைபடுத்தப்பட்டேன்.

இந்நிலையில் ஒரு நாள் நான் என் மகள்களுடன் வீடு திரும்பிய போது அங்கே எங்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத சிலர் இருந்தனர். மேலும் வீடு நாசமாக்கப்பட்டிருந்தது.

அவர்கள் என்னிடம் வந்து நீ உயிருடன் இருக்க வேண்டும் என்றால், இதைப்பற்றி வெளியே கூறக்கூடாது என்று மிரட்டினர்.

புடினின் மரணம் முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று. மேலும் தற்போது ஆட்சியில் இருப்பது அவரை போலவே தோற்றமுடைய ஒருவர்.

நல்லவேளையாக நான் விவாகரத்து பெற்று அவர்களிடமிருந்து தப்பித்து தற்போது வெளிநாட்டில் வசிக்கிறேன். ஆனால் ரஷ்யாவில் தற்போது நடக்கும் விசயங்கள் எனக்கு பயத்தை தருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து