உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

untitledபாசையூர் பகுதியில் ஒரு கிலோ டைனமைட் மருந்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் பகுதியில் கஞ்சா விற்பதாக சட்ட விரோத செயல்கள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்  அடிப்படையில் நேற்று முன்தினம்  இடம்பெற்ற சேதனையில் டைனமைற் மாதிரியுடன் நேற்று முன்தினம்  ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் பாசையூரைச் சேர்ந்த குணம் ரொக் ஜோசெப் (வயது 30) என்பவராவார். மேலும் குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்  அடிப்படையில் அவரது வீட்டிற்கு பின்புறம் நிலத்திற்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ டைனமைட் மருந்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சந்தேக நபர் இன்றைய தினம்  யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து