உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கடந்தாண்டில் மட்டும், சர்வதேச கடற்பகுதியில் 1,181 கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையான கடத்தல்கள், சோமாலிய கடற்கொள்ளையர்களால் நிகழ்த்தப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச கடற்பகுதி கண்காணிப்புக் குழு, சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

கடந்தாண்டு, சர்வதேச கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் 1,181 கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன. இவற்றில் 49ல் இருந்து 52 வரையிலான கப்பல்கள் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டவை. 445 முறை கப்பல்கள் மீது கடத்தல் முயற்சி மற்றும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஏடன் வளைகுடாவில் முறையான கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டதால், கப்பல் கடத்தல்கள் பாதியாக குறைந்து விட்டன. தென்சீன கடலில் 2009யை விட 2010ல் இரண்டு மடங்கு கப்பல் கடத்தல் அதிகரித்துள்ளது. கடந்தாண்டில் 31 கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன.

கடற்கொள்ளையர்கள் கேட்ட பணத்தை கொடுத்து 1,016 கப்பல்கள் மீட்கப்பட்டன. இன்னும் அவர்களிடம் 28 கப்பல்களும், 638 பிணையக் கைதிகளும் இருக்கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சர்வதேச கடற்பகுதி கண்காணிப்புக் குழுவின் கோலாலம்பூர் இயக்குனர் பொட்டங்கல் முகுந்தன் கூறுகையில், “1991க்கு பின் மிக அதிகளவில் கப்பல்கள் கடத்தப்பட்டது கடந்தாண்டு தான். இந்த கடத்தல்களில் எட்டு கப்பல் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்` என்றார்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து