உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஊர் நோக்கிய திட்டம்.     கால் நடை வளர்ப்பு பற்றி சகலரும் அறிந்தாலும் அதன் பலாபலன்கள் நாம் பெரிதாய் அனுபவிக்கவில்லை. கோழி.ஆடு,மாடு வளர்ப்பதில் இன்று நிறைவான இலாபம் பெறமுடியும். பத்து கோழியுடன் ஆரம்பித்தால் அதில் இருந்து ஒரு குறுகிய காலத்தில்  கோழிப்பண்ணை முதலாளியாக முடியும்.  இதே போல் சகல கால்நடை வளர்ப்பு முறைகளையும் தொழிலாக்க முடியும். இன்று நமது ஊரில் இருந்து பல இளைஞர்கள் வெளிநாடு செல்வதே  நோக்கம் கொண்டவராய் இருக்கிறார்கள்.இது தப்பல்ல ஆனால் இன்று பலட்ச்சம் கட்டியும் வருபவர் எத்தனை இளைஞர்கள் அதிலும் எத்தனை இளைஞர்கள் அகதி அந்தஸ்த்தை பெறுகிறார்கள்.எனவே தான் ஊர் நோக்கிய தொழில்களை உருவாக்க வேண்டும்.அவரவர்கள் தங்கள் தொழில்தராதங்கள் கண்டறியப்பட்டு முதலீடு செய்தால் பலர் இதனால் முன்னேறுவதோடு நமது கிராமத்தையும் நிறைவு கண்ட கிராமமாக உருவாக்கலாம். கணனிகள் மூன்று அல்லது நாலு வாங்கிப்போட்டு கணனி வகுப்புக்கள் மூலம் சம்பாதிக்க முடியும்.சிறு ஆடைத்தயாரிப்பு நிலையம். பன்பொருள் கைத்தொழில் பேட்டைகள். விவசாயம் அதாவது ஊரவரின் காணிகள் பயன்படுத்தாமல் இருந்தால் அதை வருமானத்தின் ஒரு பகுதி காணி உரிமையாளருக்கு என்ற அடிப்படையில் எடுக்கலாம்.இந்த காணிகளில் சொட்டுநீர் திட்டமிடல் மூலம் மரக்கறி பயிரிடல் முறைகள். ஊடுருவல் பயிரிடல் முறைகள். அதாவது ஒரு பெரும் பயிர்களுக்கு இடையில் அல்லது வாழை,தென்னை,பலா,மா போன்றவற்றின் கீழ் சில பயிர்கள் உண்டாக்க முடியும்.இந்த திட்டங்களின் ஆர்வம் உள்ளவர்களுக்கு புலம்பெயர் மக்கள் நிதியம் உருவாக்கப்பட்டு அந்த நிதிய மூலம் கடன் அடிப்படையில் பல உதவிகள் செய்ய முடியும்.இதுவும் ரட்ணராசா அவர்கள் எழுதிய விடயம் பற்றியதே இது இன்னும் ஒரு கோணத்தில் ஆராயப்பட்டுள்ளது.                                                      

நாம் ஊரில் வாழ்ந்தகாலங்களை மீட்டால் எல்லா வீட்டிலும் கோழி, ஆடு, மாடு வளர்த்துள்ளோம்.ஆனால் நாம் எங்கள் வீட்டில் எப்ப கோழிக்கறி ஆக்குவார்கள். வீட்டில் யாருக்காவது சுகயீனம் என்றால் இல்லை என்றால் கோழிக்கு சுகயீனம் என்றால் மட்டுமே. கோழிக்கு சுகயீனம் என்றால் மற்றக் கோழியையும் பிடித்து சமைப்போமா இல்லை அதுகும் எப்ப தூங்கி விழுமோ அப்பதான் கோழிக்கறி. வேள்வி, தீபாவளி தான் ஆட்டுக்கறி. இப்படி கால்நடைகள் வளர்ப்பில் அனுபவம் நிறையவே உண்டு. இந்த தொழிலை சுகாதாரமாகவும். சுத்தமான இடத்தில் ஒழுங்காக செய்தால் நாமும் முன்னேறலாம். என்ன நீங்க மட்டும் வெளிநாட்டில இருக்கலாம் ஏன் பாருங்கோ நாங்கள் வரப்படதோ என்று முனகுவது எனக்கு கேட்க்குது. இன்றைய அரசியல் நிலையில் வெளிநாடுகளில் அகதி நிலை மறுக்கப்படுகின்றது. வெளிநாட்டின் பொருளாதாரங்கள் வீழ்ச்சி கண்டுள்ளதால் பலர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். புரிந்தவர்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் புரியவில்லை என்பவர்கள் புரிய முயற்ச்சிக்கவும்.              நன்றி த.பாலா

10 Responses to “சிறிய முதல்: நிறைவான வருமானம்”

 • Egan:

  சிறுகைத்தொழிற்சாலைக்கப்பால்பெரிய தொழிற்சாலைகளை அமைத்து பெரிய அளவில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வாய்ப்புகள் இல்லையா? சிறுகைத்தொழில் என்ற வட்டத்திற்குள்தான் இருக்கவேண்டுமா?

 • t.bala:

  கற்றவர்க்கு தான் முதல் இடம். அவர்கள் பணிகள் எமக்கும் தர தயாராக முன்வருவார்களா? இதே வேளை நமது சகல திட்டமிடலும் ஊரவர்கள் கரங்களை இணைக்கும் போதே அதை முழுமைப்படுத்தமுடியும்.அதற்க்கான முயற்ச்சிகளின் சில பணிகளை சுவிஸில் இருந்து சென்ற மோகன் அவர்களிடம் செய்யும்படி சொல்லி அவர் அதை சரிவர செய்துவிட்டு வருவார்.இதைவிடவும் நமது பணிகள் தொடரும். பாலா

 • t.bala:

  திரு சிவா அண்ணா ஊருக்கும் உங்களுக்குமான தொடர்பு நிறையத்தூரம் என நினைக்கிறேன்.எடுக்கப்பட்ட திட்டங்களின் ஆரம்பக்கட்ட வேலைகள் எத்தனை என கணனியை ஒவ்வொரு நாளும் கவனிக்கவும்.இதைவிட நம்முயற்ச்சிகளில் தடைகள் பல இருந்தும் முன்னோக்கிய நம் பயணம் தொடரும்.எதையும் வெட்டினோம் கட்டினோம் என செய்யமுடியாது.அமைதியாக திட்டமிட்டு திடீரென நிறைவுபெறும். பாலா

 • pothu vilambi:

  ஏன் பாலா எங்கடை ஊர்ப்பெண்பிள்ளைகள் தையல், அழகுபடுத்தல், போன்ற கலைகளைப் பயின்றிருக்கிறார்கள். அவர்களில் வறுமைக்கோட்டிற்குள் இருப்பவர்களை தெரிவு செய்து அவர்களின் தலமையின் கீழ் ஒரு தொழில்
  கூடத்தை அமைத்துக். கொடுத்தால் பலர் நன்மை பெறுவார்கள்.

 • T.BALA:

  திட்டங்கள் தீட்ட முடியும் ஆனால் செயற்ப்படுத்தமுடியுமா என எப்பவும் கேள்விகளை கேட்க்காமல் முதலில் உங்களை நீங்களே நம்பவேண்டும்.அந்த நிலையில் தான் நாம் திட்டங்களையும் நம்ப முடியும்.ஒவ்வொரு கிராமத்தையும் அந்தந்த கிராமத்தின் புலம்பெயர் மக்கள் தத்தெடுத்து அபிவிருத்தி செய்தாலே நம் தமிழ் மக்கள் 70% தன்நிறைவாகலாம்.மிகுதி தானாக கனியும்.நமது ஊரவர்கள் பலர் இன்றும் உதவிக்கரங்கள் வன்னியை நோக்கியுள்ளது. பாலா

  • Sivanantham.S:

   பாலாவே!
   தமிழர் நம் கதி? எம்மூரவரில் பலர் வன்னிக்கு உதவுகிறார்கள் என்றால் அவர்கள் எல்லாம் மக்களால் போற்றி வணங்கப்பட வேண்டியவர்கள், தாகத்தில் தவிப்பவர்களுக்கு தக்க தருணத்தில் தண்ணீர் கொடுக்கும் தர்ம வள்ளல்கள். தாங்கள் இவ்வாறு தவித்துக் கொண்டிருக்கும் ஊர்மக்களுக்குத் தேவையான அவசரமான சிறு உதவியையாவது செய்வதற்கு தயக்கம் காட்டுவதேன். நாம் செய்யும் சிறு துளி உதவி தவிக்கின்ற மக்களிற்கு பேருதவியாக இருக்கும். * மனமுண்டானால் இடமுண்டு*.முயற்சிக்கவும் நற் பலன் நன்றே கிடைக்கும். தாங்கள் இதுவரை எத்தனை திட்டங்கள் அறிவித்தீர்கள் . எத்தனை பூரணத்துவம் பெற்றன? தவறிருப்பின் மன்னித்துக்கொள்ளவும்.
   நன்றி!

 • rajan:

  That is a good news.

 • Sivanantham.S:

  தங்களது சிந்தனை சிறப்பானதே. செயற்படுத்துவதற்கோ தடைக் கற்கள் பலவற்றை தாண்டிச் சென்றாலல்லவா வெற்றி காணமுடியும். புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற நாங்கள் திட்டங்கள் தீட்டுவது சுலபம் ஆனால் தாயக மக்களோ இத் திட்டங்களை ? குறிக்குள்தான் அடைத்துப் பார்க்க முடியும்.இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் வழங்குகின்ற உதவிகளே அந்த மக்களைச் சென்றடையவில்லையென்ற செய்திகள், வேதனை தருகின்றது.
  கடந்த மாதம் நோர்வே செஞ்சிலுவைச் சங்கத்தாரிடமிருந்து எனக்கு வந்த கடிதம் ஒன்றில் கிளிநொச்சியில் வாழ்கின்ற இரு சிறு சகோதரர்களின் நிலை பற்றிய விளக்கத்துடன் அவர்களுக்கு உதவி செய்யும்படியும் கேட்டிருந்தார்கள்.அந்தக் கடிதமானது வீட்டிலுள்ள அனைவரையுமே மிகுந்த வேதனைக்குள்ளாக்கிவிட்டது. இவ்வாறான மக்கள் எமது ஊரிலும் வாழ்வதாக அறிகிறேன். தாங்கள் தங்களுடைய தொடர்புகளூடாக உதவிகளின்றி சிரமப்படும் குடும்பத்தினரை தெரிவு செய்து புலம்பெயர் மக்களின் உதவிகளைப் பெற்று அவர்களின் அன்றாட வாழ்வு சிறந்திட உதவலாமல்லவா. இக் கைங்கரியத்தை தாங்கள் முன்னெடுக்கும்
  பட்சத்தில் என்னாலான பங்களிப்பையும் செய்யத் தயாராகவுள்ளேன். விபரமாக
  நன்றி!

 • நலன் விரும்பி:

  பகி அவர்களுக்கு…

  நீங்கள் கூறும் வங்கிகள் கடன் வழங்குவது சரி… ஆனால் இது பற்றிய போதிய தகவல்கள் மக்களை சென்று அடைந்துள்ளதா.. பாலகுமார் அண்ணா கூறும் பல விடயங்கள் ( வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பற்றியது ) சரியாகவே தென்படுகின்றது.

  மேலும் நீங்கள் கூறிய விடயம் ஒரு மனத்திருப்தியை தருகின்றது. உண்மையில் எப்படியான முயற்சிகளுக்கு இந்த வங்கிகள் கடன் வழங்குகின்றன என்பது பற்றி எமது ஊர் மக்கள் நலன் கருதி இந்த இணையம் மேலதிக தகவல்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும்

 • அழ பகீரதன்:

  எமது ஊரில் சுயதொழில் வாய்ப்புக்கு இலங்கை வங்கி சங்கனை கிளையூடாக கடன் கொடுக்க நாம் என்றும் தயாராக இருக்கின்றோம். அவ்வாறான நோக்கமுடையவர்களுக்கு சகல வித‍த்திலும் உதவத்தயாராக இருக்கின்றோம். சுயதொழிலில் ஆர்வமுடையவர்களை எனக்கு அறிமுகப்படுத்துங்கள்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து