உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பழநி : தைப்பூச திருவிழாவையொட்டி இன்று அனைத்து முருகன் ‌கோயில்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பழநியில் இன்று ( 20-ம் தேதி) தைப்பூச உற்சவம் நடக்கிறது.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச விழா, ஜன., 14ல் பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், ஒவ்வொரு நாளும் வள்ளிதேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளுவார்.முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம், இன்று மாலை, 4.30 மணிக்கு, திருத்தேர் வடம்பிடித்தலுடன் துவங்குகிறது. நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற உள்ளது. ஜன., 23ல் பெரியநாயகியம்மன் கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில், மாலை, 6 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை இணை ஆணையர் ராசமாணிக்கம், அறங்காவலர் குழு தலைவர் எஸ்.வி.பாலசுப்பிமணியம் தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். தைப்பூசத்தினையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரையாக வந்துள்ளனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து