உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

                             untitled                      யா/சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலயம். பழைய மாணவர் சங்கம்

 எமது பாடசாலை தரம்1 முதல் தரம் 11 வரை யான வகுப்புக்களைக் கொண்டது.; ஒரு குறுகிய நிலப்பரப்பான ஆறு பரப்பு காணிக்குள் இயங்கி வருவது யாவரும் அறிந்ததாகும்.இந்த குறுகிய நிலப்பரப்பில்தான் பதினொரு வகுப்புக்களுடன் ஆய்வுகூடம், கணனியறை,  நூலகம், சமயலறை, களஞ்சியறை, தண்ணீர் தொட்டி, கிணறு, கழிப்பறைகள், சிறுவர் பூங்கா, ஆகியவையும் அமைந்துள்ளன. நவீன கல்விச் சிந்தனைக்கேற்ப போதியளவு விசாலமான கட்டிடத்தில் மாணவர்களின் குழுச்செயற்பாட்டிற்கு ஏற்ற வகையில் நமது பாடசாலைக் கட்டிடங்கள் அமைதல் வேண்டும். இந் லையில் கடந்த 07.08.2013 அன்று புலம்பெயர் பழையமாணவன் திரு. அம்பலவாணர் சச்சிதானந்தம் (சச்சி,ஜேர்மனி) அவர்கள் தலைமையில் பழைய மாணவர்கள் ஒன்றுகூடல் பாடசாலையில் இடம்பெற்றது.

மேற்படி கலந்துரையாடலில்  அயலில் உள்ள {பாடசாலைக்கு தெற்குப் புறமான} காணியை கொள்வனவு செய்வ து எனத் தீர்மானிக்கப்பட்டு.பழைய மாணவர்களும், எமது ஊரில் வசிப்பவர்களுமான காணி உரிமைகாரர்களிடம் நியாயமான விலைக்கு காணியை தந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.அவர்களும் எமது பாடசாலையின் அபிவிருத்தி நோக்கம் கருதி பன்னிரண்டு பரப்பு காணியையும் நியாயவிலையான ஒரு பரப்பு மூன்று இலட்சம் ரூபாவாக {300000* 12= 3600000} மொத்தமாக முப்பத்தாறுஇலட்சம் ருபாவுக்கு தருவதற்கு சம்மதம் தெரிவுத்துள்ளனர்.. மேற்படி செயற்பாட்டினை செயற்படுத்தும் காலம் தற்போது கைகூடியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றன்

19/03/2014 . இல் திரு சிவபாதம் சிவானந்தம் அவர்களால் ரூபா 75 ஆயிரம் இச்செயற்பாட்டிற்கு முதல்முதலாக வழங்கப்பட்டு  சங்கானை  இலங்கை வங்கிக் கிளையில் (BANK OF CEYLON)உள்ள 

 கணக்கின் பெயர்

 OLD STUDENT ASSOCIATION

 முகவரிJ/CHULIPURAM NORTH ARUMUGAVIDYALAYAM CHULIPURAM NORTH CHULIPURAM

 கணக்கு இலக்கம் 71689186

 இல் வைப்பிலிடப்பட்டுள்ளது.

 மேலும் கனடாவில் திரு .கு.ரவிமோகன் தலைமையிலான குழுவினரல் சுமார் 6 இலட்சம் இலங்கை ரூபா சேகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்

 எமது பாடசாலை நலன் விரும்பி ஒருவர் HOLLAND நாட்டில் இருந்து ரூபா 1 இலட்சம் இலங்கை ரூபா தனது தனிப்பட்ட நன்கொடையாக வழங்கச் சம்மதித்துள்ளார்.

 மேலும் FRANCE நாட்டில் வாழும் பாடசாலையின் பழைய மாணவரான் திரு .கிருஸ்ணசாமி சந்திரன் (சுழிபுரம் கிழக்கு ) அவர்கள் இக்காணியின் ஒருபகுதியைத் தான் கொள்வனவு செய்து பாடசாலைக்கு வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்தள்ளதுடன்  சுழிபுரம் கிழக்கு பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் தம்மாலான பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். 

இச்செயற்பாட்டை நடைமுறைப்படுத்தும் பின்வரும் பாடசாலையின் பழைய மாணவர்க ள் மற்றும் நலன் விரும்பிகட்குத் தங்கள் ஆதரவை நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 செல்வி வையித்திலிங்கம் மனோராணி

 திரு கணேசரட்ணம் ரவீந்திரன்

 திரு சுப்பிரமணியம் யாதவன்

ஜேர்மன்

திரு குமாரசாமி குணேஸ்வரன்

திரு திருப்பதி தவம்

திரு சிவபாதம் பகிரங்கன்

திரு அம்பலவாணர் சச்சிதாநந்தம்

கனடா

திரு தம்பிமுத்து புலேந்திரன்

 திரு குமாரவேலு ரவி மோகன்

 திரு. கார்த்திகேசு சண்முகம்

 டென்மார்க்

 திரு நாகராசா சிதம்பரநாதன்

 திரு மகேந்திரம் இராமச்சந்திரன்

நோர்வே

திரு சின்னத்துரை ஜெயராசா

 திரு சிவபாதம் சிவானந்தம்

இத்தாலி

திரு தர்மபுத்திரன் சங்கர்

சுவிஸ்

திரு கந்தசாமி மோகன்

 திரு சிவநாமம் விஜயகுமார்

 ஹொலண்ட்

 திரு இராசையா அற்புதன்

 இவர்களுக்கு தங்கள் ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 தகவல்: செல்வி வையித்திலிங்கம் மனோராணி – தலைவர்

 பழைய மாணவர் சங்கம் யா/சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலயம்.

 சு.திருக்கேஸ்வரன் காப்பாளர். பழைய மாணவர் சங்கம் யா/சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலயம்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து