உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஆர்யா + அனுஷ்கா நடித்திருக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில், ‘தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள்.

பிரகாஷ் கோவேலமுடி இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகும் படம் ‘இஞ்சி இடுப்பழகி’. மரகதமணி இசையமைத்திருக்கும் இப்படத்தை பி.வி.பி சினிமாஸ் தயாரித்திருக்கிறது. செப்டம்பர் 6ம் தேதி இசையும், அக்டோபர் மாதத்தில் படமும் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

இப்படத்தில் ‘தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்ற ‘இஞ்சி இடுப்பழகி’ பாடலை ரீமிக்ஸ் செய்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

இப்பாடல் குறித்து படக்குழுவிடம் பேசியபோது, “ஆர்யா மற்றும் அனுஷ்கா இருவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் வரும். அப்போது இருவரும் தங்களை அப்பாடலில் நடிப்பதாக நினைத்துப் பார்ப்பார்கள்.

ஆர்யா, அனுஷ்கா இருவருமே பாரம்பரிய உடை அணிந்து ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் ரீமிக்ஸில் தோன்றுவார்கள். இப்பாடலை இளையராஜா சாரிடம் முறையாக அனுமதி பெற்று உபயோகப்படுத்தி இருக்கிறோம்” என்று தெரிவித்தார்கள்.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் இசை செப்டம்பர் 6ம் தேதி வெளியாக இருக்கிறது. ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் ரீமிக்ஸ் உடன் அடங்கிய டீஸர் செப்.7 அல்லது செப்.8-ல் வெளியாகலாம் என்று படக்குழு சார்பில் தெரிவித்தனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து