உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மாங்குளம் பிரதேசத்தில் பெண் ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பனிக்கன்குளம் பிரதேசத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பெண்ணின் கால் ஒன்று துண்டிக்கப்பட்டுள்ளதோடு, அவர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த பெண் 40 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை பனிக்கன்குளம் சந்தியில் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்தில் இவர் தங்கியிருந்துள்ளதோடு, வீதியை கடக்க முற்பட்டவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

விபத்தினை ஏற்படுத்திய வாகனம் தப்பிச் சென்றுள்ளதோடு, மாங்குளம் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து