உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Unavngivet

20 Responses to “கருத்துக் களம்-31”

 • Vinothiny Pathmanathan:

  இது ஆண்களுக்கான கருத்துக்களம் .இங்கு இந்தக் கருத்துக்களத்தின் அடிப்படைப் பிரச்சனையே குறிப்பிட்ட ஆணின் அன்பு முழுவதுமே தனக்கே கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கும் பெண்களினால் தான் ஏற்படுகிறது.இதனை சரியாகப் புரிந்து கொண்டு வாழும் ஆண்களால் மட்டுமே வாழ்வை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல முடியும் .எனவே விவாதம் செய்வதை விடுத்து எப்படி இருவரின் மனமும் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பது ஆண்களின் கைகளிலேயே தங்கி உள்ளது.

  • kunathilagam santhai:

   என் கருத்து ஒரு சிறு கதை மூலம் …
   ஒருகுடும்பத்தில் அன்புடன் வாழ்ந்தான் குடும்பத்தலைவன் .எதிர்பாராத விதத்தில் தலைவன் இறந்து விட்டான். எல்லோரும் கதறுகிறார்கள் .எல்லா அலுவல்களும் நடந்தேறின .ஒருநாள் அத் தலைவனின் ஆவி இவர்களுக்குத் தெரியாது அங்கு வந்தது .(தெரிந்தால் பயப்பிடுவார்கள் தன் அன்புக்குரியவர்கள் பயப்பிடுவதை அவன் விரும்பவில்லை .)அங்கு ஒவ் வொருவரும் அவன் இறந்ததையிட்டு அழுது கொண்டிருந்தனர் .அவன் ஒவொருவரும் அழும் இடத்துக்குச் சென்று அவர்கள் சொல்லி அழுவதை அவதானிக்கிறான் .அவனுடைய அன்புமகன் தான் தந்தையை இழந்த பிள்ள ஆகிவிட்டேனே என அழுகிறான் .மகள் தன் கலியாணத்தை முடிக்காமல் போய் விட்டேரே என அழுகிறாள் .மனைவியோ தன் தாலி இழந்து தான் அமங்கலி ஆகி விட்டேனே என அழுகிறாள் .எல்லார் கவலையையும் கேட்டுக் கொண்டு கடைசியில் தன் தாயின் பக்கம் போகிறான் .தாயானவள் நான் உயிருடன் இருக்கையில் நீ இடை வழியில் போய் விட்டீரே என அழுகிறாள் .அப்போதுதான் அவன் தான் கடைசியில் தாயிடம் வந்த தவறை உணர்கிறான் .எனவே தாய் மட்டுமே மகனுக்காக அழுகிறாள் .மற்றவர்கள் தங்களுக்காகவே அழுகிறார்கள் .ஆகவே சுயநலமற்ற தாயையே மறக்க முடியாதவனாகிறான் .இன்னும் தேவையெனி மீண்டும் வருகிறேன் .நன்றி .

 • nakkeeran:

  அன்னையைப் போற்றினால் அகப்பை தாளாது !
  தாயைப் போற்றினால் தலையணைக்குப் பிடிக்காது !
  படைத்தவளைப் போற்றினால் பத்திர காளி ஆட்டம் !
  பெத்தவளைப் போற்றினால் பேய் பிடித்தாட்டும் !
  இப்படி இருக்க எப்படி உண்மையைக் கூறமுடியும் ?

 • முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா என்ற இந்தக் கேள்வியைப்போல். தாயா.தாரமா என்ற இந்தக் கேள்வியும் ஒரு சிக்கலான கேள்வி.நீங்கள் எந்த வகையில் கேட்டாலும் , இந்த கேள்விக்கு சரியான விடையளிப்பது யாராலும் இயலாத ஒரு விஷயம். அகவே என்னை பொருத்தவரை ஒரு ஆணின் வழ்க்கை சிற்க்க காரணம் என்று பார்த்தால் மனைவிக்கு அதிக பங்கு உண்டு.திருமணத்திற்கு முன் தாய். திருமணத்திற்குப் பின் மனைவி.ஒரு ஆணின் வாழ்க்கையின் பாதி வரை கைபிடித்து நடக்க வைப்பது ஒரு தாயின் கடமை. அவன் வாழ்க்கையில் விழுந்துவிடாமல் காப்பது ஒரு மனைவின் கடமை.எனவே யார் யாரைவிட முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று எடை போட்டு பார்க்க இருவரும் கடைகளில் வேண்டுகின்ற பொருள்கள் அல்ல. இருவரும் இரு விதமான உறவுகள்..! https://www.youtube.com/watch?t=2&v=tMv-OXjbyto

  • seran:

   உங்கள் கருத்து இருவரும் இரு வேறு உறவுகள் என்பது ஏற்கக் கூடியதே .தாயின் உறவு பாசம் .மனைவியின் உறவு தேவை .

 • sivanantham.s:

  இங்கு கருத்துக்களை வழங்கிக்கொண்டிருக்கும் கருத்தாளர்கள் அனைவரும் ஆண்களாக,மகன்களாக, மருமகன்களாக, கணவர்களாக, அண்ணன்மார்களாக, தம்பிகளாக, தந்தையர்களாக, பேரன்களாகவும் இருப்பதுபோல் தோன்றுகிறது.ஆகவே, உங்களிடம் ஒரேயொரு வினாவை மட்டும் முன் வைக்க விரும்புகிறேன். அதாவது *தங்களை ஆண்கள் என்ற நிலையிலிருந்து மேற்குறிப்பிட்ட நிலைகளுக்குத் தரமுயர்த்தியது யார்? தாயொருவரால் மட்டும் மேற் கூறிய பதவிகளை உங்களுக்குத் தந்துவிட முடியுமா? இவ்வாறு ஏன் தாயென்றும், தாரமென்றும் தரம் பிரித்துப் பார்க்கிறீர்கள். *தந்தையும்,கணவனும் போலவே, தாயும், தாரமும் என்பது இறைவன் வகுத்த விதி* எனவேதான் ^.இன்னார்க்கு இன்னார்^ என ஆணையும், பெண்ணையும் இறைவன் படைத்துள்ளார்.

  *கூடி வாழ்ந்தால் கோடி புண்ணியம்.
  *தந்தை எவ்வழி மைந்தன் அவ்வழி.
  *தாயைப் போல் பிள்ளை நூலைப்போல் சேலை.
  *நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்.

  நண்பர்களே! இன்னுமொரு விடயத்தை தங்களுக்கு நினைவூட்டி விடைபெற விரும்புகிறேன். அதாவது ஒரு ஆண்மகன் தாயுடன், மகன் என்ற பதவியுடன் வாழ்வது கால் நூற்றாண்டு காலப்பகுதியாகும்.ஆனால் கணவன்,மருமகன்,தந்தை,பேரன், பாட்டன் என்ற பல பதவிகளைப் பெற்று வாழ் நாளின் முழுப் பகுதியையும் நிறைவு செய்வது தாரத்துடனேயே.

  இந்த விளக்கங்கள் போதாவிடின் மீண்டும் வருகிறேன்.

  நன்றி!

 • RAVI_T:

  கோழியில் இருந்து முட்டை வந்ததா ?அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா ?என்பது அல்ல விடயம்.கொடுக்கப்பட்ட தலைப்பு வாழ்வில்மதிக்கப்
  ப்படவேண்டியவள்
  தாயா ? அல்லது தாரமா ? இதை விடுத்து வேறு திசையில் …….
  என்னைக் கருவில் பத்துமாதம் சுமந்து
  இவ்வுலகுக்கு அறிமுகம் செய்தவள் தாய் .தாயானவள் தான் என் அப்பாவை எனக்கு அறிமுகம் செய்கிறாள் .இதன் பின் தான் மிகுதி தாய்க்குப் பின் தான் தாரம் என்பது என் கருத்து.

  • vadivelan:

   ரவிக்கு என்பாராட்டுகள் ,இங்கு எல்லோரும் மனைவிக்குப் பயந்தவர்களாகவே காணப்படுகிறார்கள் .எங்கே மனைவியைக் குறைத்து தாயை கூறினால் மனைவி அகப்பைச் சூனியம் செய்து விடுவாளோ என்ற பயம் .நீர் துணிந்து உள்ளதைக் கூறியதை நிட்சயம் பாராட்ட வேண்டியதே .தான் வாயிற் உணவை வைக்கும் போதும் மகன் சாப்பிட்டானா என்று எண்ணுபவள் தாயே !

 • kanaga:

  ஒரு ஆணின் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதவரும், மதிப்பிற்குரியவரும் தாயும், தாரமும்

  ஆனால் இளமையில் மதிப்பிற்குரியவள் தாய்

  முதுமையில் மதிப்பிற்குரியவள் மனைவி

 • KUNATHTHILAKAM:

  ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச்
  சான்றோன் எனக் கேட்ட தாய் .

 • KUNATHTHILAKAM:

  தாரமே தாய் ,ஆனால் இருவர் அன்பும் வேறுபட்டதே .பால் நினைந்தூட்டுப்பவள் தாய் .ஆனால் தாரம் ??????????????????????.

 • தாய்யாக இருப்பவளும் ஒரு காலத்தில் தாரம்மாக இருந்தவள் தான் …இருவரையும் பிரித்து
  பார்க்க முடியாது சில வேலை தாரம் தாயை மிஞ்சி விடுகுர சந்தர்பங்கள் இருக்குது

  • seran:

   தாயில்லாமல் நானில்லை .மனைவியல்ல
   தாய் சொல்லைத் தட்டாதே .மனைவியல்ல
   தாய்க்குப் பின் தாரம்
   தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே !மனைவியை அல்ல
   தாயைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடமாட்டேன் .மனைவியை அல்ல

 • sivanantham.s:

  தாரமே! தாயாகும் தகுதி பெற்று தாய்மை அடைந்து தாயாகிறார்.
  எனவே தாய் வேறு, தாரம் வேறல்ல! இருவரும் இறைவனால் படைக்கப்பட்ட பெண்பாலினமே! ஆகவே, தாயும், தாரமும் மறக்கப்பட முடியாத,மரியாதைக்குரியவர்களே!

  இதே நிலைப்பாடு தந்தைக்கும் சமமானததாகும்.அதாவது தந்தை வேறு,கணவன் வேறல்ல. ஒரு கணவனே, தந்தையாகும் தகுதி பெற்று தந்தையாகிறார்.இருவரும் இறைவனால் படைக்கப்பட்ட ஆண்பாலினமே! ஆகவே கணவனும், தந்தையும் மறக்கப்பட முடியாத,மரியாதைக்குரியவர்களே!

  இறைவனின் படைப்பான ஆண், பெண் என்ற இரு வேறு உடற்பிரிவுகளும் ஒன்றுக்கொன்று ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த வெவ்வேறு உடற்கூறுகளல்ல., இரண்டும் ஒன்றுக்கொன்று சமமான செயற்பாடுகளைக்கொண்டவையேயாகும்!

  *ஆண்பாலின்றி, பெண்பாலின்றி ஆணுமில்லை,பெண்ணுமில்லை!
  ஆணும்,பெண்ணுமின்றி கணவனுமில்லை, மனைவியுமில்லை!
  கணவனும், மனைவியுமின்றி தந்தையுமில்லை, தாயுமில்லை!
  ஆணின்றி , பெண்ணால் தாரமாக முடியாது!
  கணவனின்றி, மனைவியால் தாயாக முடியாது!

  எனவே, தாயும்,தாரமும்,தந்தையும்,கணவனும் மறக்கப்பட முடியாத, மரியாதைக்குரியவர்களே!
  இறைவனின் இரு படைப்பையும் இனிதே ஏற்று இன்பமாய் வாழ்வோமாக!
  நமது பிள்ளைகளுக்கு நல்லதோர் தாய்,தந்தையராக வாழ்வோமாக!

  நன்றி!

  • arivu:

   சிவானந்தம் அண்ணரின் கருத்து அருமை .ஆனால் தாய்க்கும் தாரத்துக்குமே மோதல்.ஒருவன் மதிக்க வேண்டியவள் தன் தாயையா ?தாரத்தையா ?என்பதுதான் விடையம் .

 • Koventhan:

  குடும்ப உறவுகளைப் பேணி குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிகளைத் தருபவள் தாரம்

  • vadivelan:

   குடும்ப உறவுகளை எத்தனை தாரமானவள் பேணுகிறாள் .பெற்றுவளர்த்த பெற்றோரிடமிருந்து தன மாயை வலையினால் கணவனைப் பிரித்தெடுக்கும் சண்டாளி அவள் .

 • KUNATHTHILAKAM:

  தாய்க்குப் பின் தாரம்

Leave a Reply for அற்புதன்

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து