உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

vadamaratsi_boy_death_001யாழ்.  வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் சடலம் பிரித்தானியாவின் Ealing மாகாணத்தில் அமைந்துள்ள King George’s Playing Field பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக தெரியவருவதாவது,பிரித்தானியாவின் Lady Margaret சாலையில் அமைந்துள்ள இந்த பூங்காவில் இளவயது வாலிபர் ஒருவரது உடல் இறந்த நிலையில் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இத் தகவல் அறிந்ததும் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் அந்த பூங்காவை சுற்றி வளைத்துள்ளனர்.இதனையடுத்து அந்த உடலை கைப்பற்றிய பொலிஸார், முதற்கட்ட சோதனைக்கு பின்னர், அந்த இளைஞர் இறந்துள்ளதை உறுதி செய்தனர்.

இறந்த அந்த நபர் குறித்த கூடுதல் தகவல்களை திரட்டி வருவதாக தெரிவித்துள்ள பொலிஸார், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அந்த இளைஞரின் உயிரிழப்புக் குறித்து முழுமையான சோதனைக்கு பின்னரே அறிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, உயிரிழந்துள்ள இளைஞர் யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த பாலசுந்தரம் பார்த்தீபன் என்ற 29 வயது இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இத்தற்கொலைக்கு  குடும்ப தகராறே காரணம் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து