உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கும் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவருவதாக நவ்றூ அரசாங்கம் தெரிவித்துள்ளதுஇதன்பிரகாரம் வாரத்தின் ஏழுநாட்களும் 24 மணித்தியாலங்கள் செயற்படும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான பிராந்திய நிலையமொன்றை திறக்கவுள்ளதாக நவ்றூ அரசாங்கம் கூறியுள்ளது.

சுமார் 600 புகலிடக் கோரிக்கையளார்களின் அகதி விண்ணப்பம் அடுத்த வாரம் பரீசிலிக்கப்படும் என நவ்றூ அரசாங்கத்தின் நீதி அமைச்சர் டேவிட் ஆடியாங் தெரிவித்துள்ளார்.இதன்மூலம் நவ்றூ தீவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் சுதந்திரமாக நடமாட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இந்த நகர்வை மனித உரிமை செயற்பாட்டளார்கள் வரவேற்றுள்ளனர்.அகதிகளாக படகுகள் மூலம் அவுஸ்திரேலிய சென்ற அனைவரும் நவ்றூ உள்ளிட்ட தீவுகளிலுள்ள தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பொருத்தமற்ற வகையில் தடுப்பு நிலையங்களின் நிலைமைகள் உள்ளதாக கவலைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தடுப்பு நிலையத்தில் இருந்த சோமாலிய பெண் ஒருவரை இரண்டு ஆண்கள் பாலியல் பாலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக அவுஸ்திரேலிய தொலைக்காட்சியொன்று கடந்தவாரம் செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பில் நவ்றூ பொலிஸார் நான்கு மணித்தியாலங்களின் பின்னரே நடவடிக்கை எடுத்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

நவ்றூ தீவிலுள்ள தடுப்பு நிலையத்தில் அவுஸ்திரேலியாவின் பங்களிப்பு சட்டபூர்வமானதா என்பதை அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் பரீசிலிக்கவுள்ள நிலையில் இந்த தீடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து