உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- Krishnapillai Ampikkumar on பணமா ? பாசமா ?
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Loganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Logan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (51)
- அம்மன் கோவில் (118)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (34)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (58)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (14)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (11)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (205)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (468)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (21)
- சாந்தை சனசமூக நிலையம் (25)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (104)
- சிந்திப்பவன் (16)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (26,092)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (19)
- திருமணவிழா (36)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (182)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (20)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (65)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (21)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (182)
- முத்தமிழ் (32)
- எம்மவர் ஆக்கங்கள் (20)
- மெய் (24)
- வர்த்தக விளம்பரம் (34)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (92)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (25)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் கிடையாது; ரணில்
- மட்டு – புதுக்குடியிருப்பு கடற்கரையிலிருந்து ஆஸிக்கு செல்ல முற்பட்ட 21 பேர் கைது!
- இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை – ஐ.நா.கண்டனம்
- நியூயோர்க்கில் துப்பாக்கி சூடு 10 பேர் பலி
- மே 18 முன்னாள் போராளிகள் தாக்குதல் முயற்சி – த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கண்டனம்!
- வடக்கு , கிழக்கில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி
- கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 13 பேர் படுகாயம்
- ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி காலமானார்
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
சிறந்த சிந்தனா சக்தி! திறமைமிகு எழுத்தாற்றல்!
இறை துணையால் நன்றே பெற்ற
தம்பி அற்புதனே!
பொதுவாக நான் வழங்கிய கருத்துக்கு
தாங்கள் ஆவேசமுற்றமை ஏற்புடையதல்ல.
இன்று உலகெங்குமுள்ள சைவாலயங்கள்
வியாபார நிலையங்களாகச் செயற்படுகின்றனவெனும்
கருத்திற்கு முரண்பாடனவல்ல நான்.
எனினும், வேலியே பயிரை மேய்கின்றதென்ற ஆதங்கம்.
தற்போது ஏற்பட்டுள்ள சித்தர்களின் மீள் வருகைகள்,
இந்து மதத்தின் மகிமைகள் பற்றிய ஆராய்ச்சியாளர்களின்
ஆவணப்படுத்தப்படும் கண்டுபிடிப்புகள், ஆலயங்களின் உலகப் பரவலாக்கல், நவீன தொழில்நுட்பத்துறைகளில் இந்திய மக்களின் அறிவாற்றல் மிகு பங்களிப்புகள் உலகை வியப்படைய வைத்திருப்பதுவும்.விரைவில் பூவுலகில் ஏற்படப்போகும் இயற்கை மாற்றங்கள் பல மாறுதல்களை ஏற்படுத்தப்போவதாகவும், இந்து மதமே உலகில் சிறந்த மதமாக இருக்குமென கூறியுள்ளார்களன.
ஆலயங்களில் நடைபெறும் விரும்பதகாத செயற்பாடுகளை பொருட்படுத்தாது தூய பக்தியோடு ஆலயத்திற்கு சென்று வழிபடுவதே சாலச்சிறந்தது.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று!
நன்றி!
மனிதனின் ஆணவத்தை கட்டுப்படுத்துவதற்கு மனிதனால் உருவாகப்பட்ட சக்தியே இறைவனாகும்.அந்த இறைவனை வைத்து வழிபட ஒரு புனிதத்தலம் தேவைப்பட்டது.
அத்தலமே கோயிலாகும்.ஆகவே மனிதன் குடியிருக்கும் இடமெல்லாம் கோயில் தேவை .
கோயில் இருக்கும் இடமெல்லாம் மனிதன் இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதே
மிகவும் பொருத்தமானதாகும் அன்று மனிதனால் உருவாகப்பட்ட இறைசக்தி இன்று வியாபார நோக்குடன் செயல்படுவது மிகவும் வேதனை .
மனிதன் இருக்கும் இடத்தில் கோயில் இருக்க வேண்டும் என்பதே இவ் வாக்கியத்தின் நோக்கம் .எனவே உங்கள் கருத்து கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.
கடவுள் மீது அதி தீவிர நம்பிக்கையும் ஆன்மீகம் பற்றிய ஆழமான புரிதலும், இறைஞானத்தை பற்றிய அழுத்தமான அர்த்தத்தையும் கருத்துக்களையும் கூறி வரும் சிவானந்தம் அண்ணர் போன்றோரை.நான் மேற்கூறிய கருத்து. கண்டிப்பாக காயப்படுத்தியிருக்கும். என எனக்கு நன்றாகவே தெரியும்.ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக தேவையற்ற விதண்டாவாதக் கருத்துக்களை தெரிவிப்பது ஆரோக்கியமானதல்ல என்பது உண்மையே.ஆனால் மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்களோ! என்று நினைத்தால் நாங்கள் எங்கள் கருத்தை என்றுமே கூற முடியாது!
வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டுள்ள உலகப் புகழ் பெற்ற சிற்ப எழில் மிக்க அற்புத இந்து ஆலையங்கள் இந்தியாவில் உள்ளது என்பது தங்களுக்கு தெரிந்த உண்மையே. இந்த அற்புத இந்து ஆலையங்களை நேரில் சென்று பார்வையிட்டு தரிசிக்க வேண்டுமென்று எனக்கு சிறு வயதில் இருந்தே ஆசை இருந்தது சில மாதங்களுக்கு முன் ஆயிரம் ஆயிரம் கனவுகளை மனதில் நிறுத்தி மகிழ்ச்சியுடன் ஆசைகளுடன் அவ் ஆலையங்களை தரிசிக்க சென்யிருந்தேன்.
என் வீட்டின் பூஜை அறை (அலமாரி. அந்த அறையில் நான் வைத்து வணங்குவது மூன்றே மூன்று கடவுளின் திருவுருவப் படங்கள்.மட்டுமே என்னுடைய வீட்டின் பூஜை அறைக்குள் நிற்கும் போது வருகின்ற தெய்வபக்தி.உலகப் புகழ் பெற்ற ஆலையங்களுக்குள் நிற்கும் போது வரவில்லை.காரணாம். அர்ச்சனைத் தட்டில் இருந்து பூக்கடை.பழக்கடை.செருப்புக்கடை வாசலில் நிற்ப்பவன் ஆலையத்தை சுற்றிக் காண்பிப்பவன் வரை பணம் பணம் பணம்.
பெரு மதிப்புக்குரிய சிவானந்தம் அண்ணரே.! நான் மேற்கூறிய கருத்தில் உள்ள உண்மைத்தன்மையை நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பெருந்தன்மை உடையவர் உண்டு என்றே நம்புகிறேன்.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்னும் கூற்றுக்குப் பல காரணங்கள் உண்டு .மனிதனை வாழ்க்கை நெறியைக் கற்ப்பிக்கும் ஒரு இடமும் கோயில் .அவனை ஆணவத்தை அடக்கி ஒரு சிறு நேரமாவது இருக்கச் செய்வதும் கோயில் .இன்னும் கோயிலில் வானுயர்ந்த கோபுரம் அமைக்கப் படுகிறது .அக் கோபுரத்தில் கலசத்தில் வைக்கப் படும் திரவியங்கள் பெரும் இடிகளைத் தாங்கும் சக்தி வாய்ந்தது .எனவேதான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் எனக் கூறி இருக்கலாம் .
*கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்* என்ற முதுமொழி அந்தக் காலம், இந்தக் காலம் என்ற வேறுபாடின்றி எந்தக் காலத்துக்கும் பொருத்தமானதே!
இந்த முதுமொழியை இந்துக்கள் மட்டுமன்றி உலகெங்கும் வாழ்கின்ற அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் பின்பற்றி வருகிறார்கள் என்பதை இங்கு விதண்டாவாதக் கருத்துக்களை வழங்கிக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் அறிவர்.
நன்றி!
எந்த ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும் நம் முன்னோர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்துவிடவில்லை. அதன் பின்னணியில் வாழ்வியல் குறித்த பல விஷயங்கள் பின்னிப் பிணைந்துள்ளன. காலப்போக்கில் இன்றைய சமுதாயம் அதை முட்டாள்தனம் என்றும் மூடநம்பிக்கை என்றும் கூறி வந்தாலும் அது முழு அளவில் ஏற்புடைய ஒன்றல்ல என்பதுவே என் எண்ணம் .இன்றைய கால கட்டத்தில் ஆலயங்கள் என்ற நோக்கில் இப்போது இந்த கருத்துக்களம் தேவையற்ற ஒரு தலைப்பு என்றே கருதலாம்.ஏனெனில் இப்போது சிறிய ஊர்கள் என்று எடுத்துக்கொண்டாலும் குறைந்தது ஊருக்கு 2 தொடக்கம் 3 ஆலயங்கள் உள்ளன. இதனை பார்க்கும் போது, இப்போது கோவிலே இல்லாத ஒரு ஊரை கண்டு பிடித்து அங்கே சென்று குடியேறுவது என்பது தான் சவாலான ஒரு விடயமாக இருக்கும் என நினைக்கிறேன்.
அண்ணா என் பார்வையில் மாந்தனும் கோயில் ஒன்று தான்
இரண்டும் தங்களின் வயுறு நிரப்பும் உண்டியல்கள்
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க –
வேண்டாம் என்று முன்னோர்கள்
சொல்லி இருக்கிறார்கள். ஆனால்
கோயில் ஒரு விசித்திரமான இடமென்று
நம் முன்னோர்கள் கூறியதே இல்லையே ?
ஆலையங்களுக்குள் தவறு செய்தவன்
பணக்காரன்.ஆனால் பழி முழுவதும்
ஒரு பாவமும் அறியாத ஏழை மேல்.
நம் முன்னோர்கள் காலங்களில் தான்
ஆலையங்களில் ஆலய மணி ஒலித்தது.
ஆனால் இன்று ஆலையங்களில் ஒலித்துக்
கொண்டிருப்பது ஆலய மணிஅல்ல. ஆணவ மணி.
பாமர ஏழை அவன் கனவு நிறைவேற.
தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து.
கடவுளே காப்பாத்து, என்று கூவி அழுது.
மனம் உருகி.விழுந்து புரண்டு கடவுளை
தேடிப்போய் மன்றாடுகின்றான்!
அவனை சாப்பிடுறத்திற்காகவே போட்டா
போட்டியாக வண்ண வண்ண வர்ணங்களில்
உயரமான கோயில்களையும் கோபுரங்களையும்
கட்டி. கும்பாபிஷேகமும் நடத்துகின்றான்
கடவுளை காட்டி தன் வயிற்றை வளர்ப்பவன்.
கோவிலை சுற்றியிருக்கும். பூசகர்
வர்க்கமோ.முதலாளி வர்க்கமோ.
ஏழைக்கு கடவுளை புகுத்துபவன்
நானென்றும் தானென்றும் கடவுளின்
தத்துவத்தை பொழிந்து கடவுளின்
தூய வடிவம் தான்தான் என்கின்றான்.
பக்தி முக்தி. இறை பயத்துடன் வாழும்
மானிடப் பத்தர்களுக்கு மத்தியில்
பிணம் தேடும் கழுகளைப் போலவே
பணத்தைத்தேடி அலைகிறான்.
கடவுளை புகுத்துபவன்.!
கோவிலில் பக்தர்களை ஏமாற்றி பிழைப்பவன்
பற்றி அறிந்தவன் எல்லாம், அறிந்தவனாகிறான்.
அவரகளை பற்றி அறியாதவன் எல்லாம், அறிந்தும்
எதையுமே அறியாதவன் போலாகிறான்.வேரூன்றி
நிற்கும் இறை .நம்பிக்கையால்.
அர்ப்புதன் அண்ணா !
முன்னோர் மொழிந்தது முற்றிலும் உண்மை ,
பின்னோர் புரிவதே பாதகத் தன்மை !
ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதம் என்பர் ,
கொள்ளை அடிப்பவர் ஒரு சிலர் ,
வெள்ளை அடிப்பவர் அவர்களில் சிலர் .
கள்ளமில்லாதவர்க்குக் கடவுள் உண்டு ,
கடவுள் அவர்களின் உள்ளத்தில் உண்டு !
சொல்லிலும் செயலிலும் நேர்மை இருந்தால்
புல்லன் ஆயினும் அவனே இறைவன் !
கடவுளின் தரகன் எனத் தம்மைக் காட்டி
கைக் கூலி வாங்கிடும் குருக்கள்மார் செயலால்
கடவுளும் வேண்டாம் கோயிலும் வேண்டாம் என்று
கூறிடும் உங்கள் வேதனை நியாயமே !
மனிதன் மனிதனாக வாழவேண்டு மென்றால் கோயில் கட்டாயம் இருக்க வேண்டும் அனால்,அந்த மனிதனை மனிதனாக வாழவிடமல் பத்தி செய்யும் கோயில்களை வியாபர தலமக்கிறர்களே? புத்தி கேட்ட ஆசாமிகள்
கோயில் என்பது மக்களை நெறிப் படுத்துவதற்காகவே ,அது மக்களிடம் இருக்கவேண்டும் .அப்போது அது கோயிலாக இருக்கும் .ஆனால் தனியார் கோயிலை நிர்வகிக்கும் போது அங்கு ஏதோ ஒரு சுய நல நோக்கு இருக்கத்தானே செய்யும் .எனவே அங்கு வியாபார நோக்கு இருப்பது வியப்பல்ல .ஆனால் நாம் கோயில் எனக்கொண்டு வழிபடலாம் என்பது என் கருத்து .அதற்காக கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது .
மனிதன் மனிதனாக வாழவேண்டு மென்றால் கோயில் கட்டாயம் இருக்க வேண்டும் .எனவே இவ் வாக்கியம் இன்றையநிலையில் மிகவும் பொருத்தமானதே என்பது என் கருத்து .