உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

face_ban_002அரசுக்கு எதிராக பேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைதளங்களில் தவரான கருத்துகளை பதிவுசெய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க சவுதி அரேபிய அரசாங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபிய அரசு இணைய பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுபாடுகளை விதித்துள்ளது.

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை தீவிரமாக தணிக்கை செய்வதற்கு சட்டமும் தனி துறையின் அங்குள்ளது.

இந்நிலையில் அரசாங்கத்துக்கு எதிராக யாராவது புரளியை பரப்பினால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் அரசாங்கம் மூலம் நடத்தப்படும் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டின் நீதித்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, மிகவும் மோசமான வதந்திகளுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படும், அதை தவிர்த்து சவுக்கால் அடிப்பது, சிறையில் அடைப்பது, வீட்டு காவலில் வைப்பது, சமூக வலைதளத்தளை முடக்குவது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு பலரும் தங்கள் கண்டனம்த்தை தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்காக மரண தண்டனை விதிக்க முடிவு செய்துள்ள முதல் வளைகுடா நாடு சவுதி அரேபிய தான் என்று கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்னர் மெக்காவில் ஏற்பட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தனர். இதற்கு சவுதி அரசாங்கத்தின் அலட்சியமே காரணம் என்று பலரும் இணையத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து