உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரைச் சேர்ந்தவர் ஜார்ஜ் லா பெர்லீ (49). விமானியான இவர் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார். சம்பவத்தன்று இவர் அமெரிக்காவில் உள்ள டெட் ராய்ட் செல்லும் விமானத்தை ஓட்டி சென்றார். அப்போது அவர் அளவுக்கு மீறி மது அருந்தினார்.

இதனால் வழக்கத்தை விட அவருக்கு 4 1/2 மடங்கு போதை அதிகரித்தது. எனவே விமானத்தை எங்கு தரை இறக்குவது என தெரியவில்லை. இந்த நிலையில் அவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியிடம் தான் நியூயார்க்கில் விமானத்தை தரை இறக்க வேண்டும் என்றார்.

இவரது நிலைமையை புரிந்து கொண்ட அதிகாரிகள் அந்த விமானத்தை லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்க செய்தனர். இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த 241 அமெரிக்க பயணிகள் உயிர் தப்பினர். இதற்கிடையே குடிபோதையில் இருந்த விமானி ஜார்ஜ் லா பெர்லீ மீது ஐல்ஸ்வொர்த் கிரவுன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட விமானி லா பெர்லீக்கு 6 மாதம் ஜெயில் தணடனை விதித்து உத்தரவிட்டார்

One Response to “குடிபோதையில் விமானம் ஓட்டிய விமானிக்கு ஜெயில் தண்டனை;”

  • T.BALA:

    இதுக்குத்தான் நாங்கள் விமானிகளை மது அளவைஅளவிட ஒரு பொலிசும் பயணம் செய்யவேணும் இது ஊருக்கு போறவைக்கும் பாதுகாப்பு. பாலா

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து