உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

உலக அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கும் விழா வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது.

இதற்காக சிறந்த திரைப்படங்கள் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த “127 அவர்ஸ்”, “பிளாக் சுவான்”, “தி கிங்ஸ் ஸ்பீச்”, “தி பைட்டர்” உள்ளிட்ட படங்கள் விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் “தி கிங்ஸ் ஸ்பீச்” என்ற ஆங்கில படம் 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த தொழில் நுட்பங்களுக்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக “ட்ரூ கிரித்” என்ற படம் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவற்றில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம் போன்றவைகளுக்கு இது சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த படங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் “தி கிங்ஸ் ஸ்பீச்”, “பிளாக் சுவான்”, “தி பைட்டர்”, “இன்செப்சன்”, “தி கிட்ஸ் ஆர் ஆல் ரைட்”, “127 அவர்ஸ்”, “தி சோசியல் நெட்வொர்க்”, “டாய் ஸ்டோரி 3”, ட்ரூ கிரித்”, “வின்டர்ஸ்” போன் ஆகிய படங்கள் உள்ளன. இவற்றில் தி கிங்ஸ் ஸ்பீச், தி சோசியல் நெட் வொர்க் ஆகிய படங்களுக்கு இடையே தான் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதில் தி சோசியல் நெட் வொர்க் படம் “கோல்டன் குளோப்” விருது பெற்றது. “தி கிங்ஸ் ஸ்பீச்” திரைப்படம் கடந்த வாரம் அமெரிக்க சினிமா பட தயாரிப்பாளர்களின் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சிறந்த நடிகருக்கான போட்டியில் கோல்டன் குளோப் விருது பெற்ற பிர்த் (தி கிங்ஸ் ஸ்பீச்), கிறிஸ்டியன் பாலே (தி பைட்டர்) ஆகியோர் உள்ளனர். சிறந்த நடிகைக்கான போட்டியில் ஆன்னெட் பெனிஸ் (தி கிட்ஸ் ஆர் ஆல் ரைட்), நாடாலி போர்ட்மான் (பிளாக் ஸ்வான்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து