உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரான்சின் கிழக்குப் பகுதியில் காற்றாலைகள் அமைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணித்திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோருவது உள்ளிட்ட ஆயத்தப் பணிகள் நேற்று தொடங்கின. நாட்டில் அமைக்கப்படவிருக்கும் முதல் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்காக 10-பில்லியன் யூரோ ஒப்பந்தப்புள்ளிகளாக கோரப்படுவதாகவும் இதனை ஏலம் எடுக்க விரும்பும் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்தினை அரசிடம் தெரிவிக்கலாம் என பிரான்ஸ் அதிபர் சர்கோசி நேற்று அறிவித்தார்.

தேசிய அளவில் மின் உற்பத்தியின் தேவையை கருத்தில் கொண்டே இந்த காற்றாலை மின்சாரப் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டிற்கு தேவைப்படுவது போக மிச்சமுள்ளதை ஏற்றுமதி செய்யவும் முடியும் என்பதோடு இதனால் புதிதாக 10,000 வேலை வாய்ப்புக்களும் உருவாகும் என மேற்குப் பகுதி துறைமுகத்தில் பேசுகையில் சர்கோசி மேலும் கூறினார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து