உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

russia_flightjt_002எகிப்தில் இருந்து ரஷ்யாவுக்கு 224 பயணிகளுடன் சென்ற ரஷ்ய விமானம் சினாய் தீபகற்பம் பகுதியில் வெடித்து சிதறியது. சினாய் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தை தாக்கியது தாங்கள் தாம் என ஐ.எஸ்.தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.

சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாத குழுக்களின் அமைவிடங்களில் புடின் அரசு நடத்திவரும் வான் தாக்குதலுக்கு பதிலடி தரும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.

வெடித்து சிதறிய விமானத்தின் பாகங்கள் ஐ.எஸ்.குழுவினர் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் சிதறுண்டு கிடப்பதாக பாதுகாப்பு மற்றும் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 17 குழந்தைகள் உட்பட 224 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.ஏர்பஸ் A320 நிறுவனத்திற்கு சொந்தமான ரஷ்ய நாட்டு விமானம் Kolavia Flight 7K9268, 217 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன், எகிப்து நாட்டில் உள்ள ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து ரஷ்யா நாட்டிற்கு சென்றது.

அப்போது எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் அந்த விமானத்தின் தொடர்புகள் திடீரென்று துண்டிக்கப்பட்டன.முன்னதாக மாயமான விமானத்தில் இருந்து விமானிகள் துருக்கி நாட்டு விமான நிலையத்தை தொடர்பு கொண்டதாகவும், தொழில்நுட்ப பிரச்னை பற்றி பேசியதாகவும் அந்நாட்டின் விமான கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.இதனிடையே மீட்புப்படையினர் 100க்கும் அதிகமான உடல்களை கருகிய நிலையில் கண்டெடுத்துள்ளனர். மேலும் கருப்பு பெட்டியை மீட்டுள்ளதாகவும் விபத்தின் காரணம் குறித்து கூடுதல் தகவல்கள் தெரியவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விபத்து குறித்து தகவலறிந்த உறவினர்கள் ரஷ்ய விமான நிலையத்தில் அழுகுரல்களுடன் குவியத் துவங்கியுள்ளனர். இதற்கிடையே இந்த விபத்துக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளார்.சிரியாவில் தங்களுக்கு எதிராக தாக்குதலை தொடங்கியுள்ள ரஷ்யாவுக்கு பதிலடி தருவதற்காகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.எனினும் ரஷ்யாவும் எகிப்தும் இந்த தகவலை மறுத்துள்ளது.

சினாய் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து அழுகுரல்கள் கேட்பதாக எகிப்திய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.விபத்து நடந்ததாக கூறப்படும் பகுதியானது ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நடமாட்டம் மிகுந்த பகுதியானதால் மீட்பு குழுவினர் அப்பகுதியை நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏர்பஸ் A320 நிறுவனத்திற்கு சொந்தமான ரஷ்ய நாட்டு விமானம் Kolavia Flight 7K9268, 217 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன், எகிப்து நாட்டில் உள்ள ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து ரஷ்யா நாட்டிற்கு சென்றது.

அப்போது, எகிப்தில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

செங்கடலை ஒட்டியுள்ள கடற்கரை நகரமான ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து திரும்பிய அந்த விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணிகள் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்தை எகிப்து பிரதமரும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக, எகிப்து பிரதமர் ஷரிப் இஸ்மாயில் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய சினாய் பகுதியில் ரஷ்ய பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்டுள்ளது

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து