பிரேசில் நாட்டில் மனைவியை ஓட ஓட விரட்டி சுட்டுக்கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரேசில் நாட்டில் உபேர்லாந்தியா நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வெர்டினா ரோட்ரிக்ஸ் கேர்னிரோ என்ற 36 வயது பெண் தனது கணவருடன்(46) வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
திடீரென கணவர் அந்த பெண்ணை நடுரோட்டில் துப்பாக்கியுடன் விரட்டி உள்ளார். அந்த பெண் கீழே விழுந்ததும் கணவர் துப்பாக்கியால் சுட்டு உள்ளார். மொத்தம் 11 முறை அவர் துப்பக்கியால் சுட்டு உள்ளார்.
பொலிஸ் அதிகாரியான இவர், மனைவியை ஏன் கொலை செய்தார் என்ற விவரம் தெரியவில்லை இந்த சம்பவம் பட்டபகலில் நடந்து உள்ளது.தற்போது இந்த வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.தற்போது அந்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்