உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- Krishnapillai Ampikkumar on பணமா ? பாசமா ?
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Loganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Logan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (51)
- அம்மன் கோவில் (118)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (34)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (58)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (14)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (11)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (205)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (468)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (21)
- சாந்தை சனசமூக நிலையம் (25)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (104)
- சிந்திப்பவன் (16)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (26,092)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (19)
- திருமணவிழா (36)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (182)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (20)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (65)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (21)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (182)
- முத்தமிழ் (32)
- எம்மவர் ஆக்கங்கள் (20)
- மெய் (24)
- வர்த்தக விளம்பரம் (34)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (92)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (25)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் கிடையாது; ரணில்
- மட்டு – புதுக்குடியிருப்பு கடற்கரையிலிருந்து ஆஸிக்கு செல்ல முற்பட்ட 21 பேர் கைது!
- இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை – ஐ.நா.கண்டனம்
- நியூயோர்க்கில் துப்பாக்கி சூடு 10 பேர் பலி
- மே 18 முன்னாள் போராளிகள் தாக்குதல் முயற்சி – த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கண்டனம்!
- வடக்கு , கிழக்கில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி
- கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 13 பேர் படுகாயம்
- ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி காலமானார்
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
எனது கருத்தை கொஞ்சம் வித்தியாசமாகக் கூறுகின்றேன் .
பாசம் என்பதற்கு ஆசை ,அன்பு ,பற்று என்னும் பொருள்கள் உண்டு .இங்கு பாசம் என்பது இப்பொருட்கள் மூலம் ஆராய்ந்தால் பணம் பாசத்தின் ஒரு நுகர் பொருளே .எனவே ஒருவனுக்கு நிம்மதி எப்போ எனில் அவன் பாசத்திலிருந்து விடுப்படும்போதே .
இதை ஆன்மீக வழியில் நோக்குவோமானால் அழியா முப் பொருள் கூறும் உண்மை ,பதிபசு பாசம் என்பவற்றில் பசு (உயிர் )இறைவனை அடைய விடாது தடுப்பது பாசமே (உலக இன்பம் ).
இப் பாசத்தை விலக்கினோம் ஆனால் உயிர் இறைவனை அடையும் .அப்போதே அது நிம்மதி அடைகிறது .எனவே உயிருக்கு நிம்மதியைக் கொடுப்பது அவனை விட்டு விலகும் “பாசமே “என்பது பொருத்தம் .
[youtube https://www.youtube.com/watch?v=sEZQQLNBq_o?feature=player_detailpage&w=640&h=360%5D
இங்கு உங்களுக்குப் பணம் நிம்மதியைக் கெடுப்பதாக இல்லையா ?ஆனால் பாசம் நிம்மதியைக் கேடுபதில்லை .மாறாக ஒரு ஆறுதலைக் கொடுக்கும் .
போதைக்கு அடிமையானால் பணம் கொடுத்து வாங்கிவிடலாம்….
பாசத்திற்க்கு அடிமையானால் தவிப்பதை தவிர வேற வழி இல்லை..
பணமும் பாசமும் சுலபமாக கிடைத்தால் அதன் மதிப்பு தெரியாது…
உண்மையான பாசத்திற்க்கு தவிக்கும் உயிர் நான்.
வெளி நாடுகளிலுள்ள உங்களை பிறந்த ஊருக்கு வரவைப்பது பணமா ?பாசமா ?
பெருந்தொகையைச் செலவு செய்து ஊருக்கு ஓடி வருகிறீர்களே ,பணத்துக்காகவா ?
உங்கள் பெற்றோரை உயிருடன் பார்க்கவேண்டும் என்ற பாசமல்லவா .உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு துன்பம் ஏற்ப்ப்படும்போது வேதனைப் படுகிறீர்களே ,பணத்துக்காகவா ?
பாசத்தை விலைக்கு வாங்கினால் அது பாசமல்ல.அது பணத்துக்காகப் போடும் வேஷம் .
தானாடாவிட்டாலும் தசை ஆடும் தன்மை கொண்டது பாசம் .ஆனால் தானாடினால் மட்டுமே கையில் வந்து அமர்வது பணம் .இதையே தம்பி இராவணனுக்கும் கூறிவைக்க விரும்புகிறேன்
வெளிநாட்டில் இருப்போர் எல்லோர் வீட்டிலும் பணம் நிறையவே இருக்கிறது .அந்தப் பணத்தை
அவன் கட்டிக்காப்பதில் மன அமைதியை தொலைக்கிறான்.ஆனால் இவர்கள் வீட்டில் பாசத்தை
காட்டிலும் பணமே சற்று மிஞ்சி நிக்கிறது .காரணம் எத்தனை பெற்றார்கள் தங்கள் பிள்ளைகளுடன் அன்பாகப் பேசி நேரத்தைக் சந்தோசமாகக் களிக்கிறார்கள் என்று பார்த்தல் சற்று
குறைவே.அதிகாலை பெற்றார்கள் வேலைக்கு செல்லும்போது பிள்ளைகள் நித்திரையில் இருப்பார்கள் .வேலையால் வரும் போது பிள்ளைகள் திரும்ப நித்திரைக்கு சென்று விடுவார்கள் .இதனால் பிள்ளைகளுக்கும் பெற்றார்களுக்கும் இடையில் சற்று இடைவெளி.ஆகவே பணம் என்னடா பணம் !பணம்!!உண்மையானபாசம் தான் நிரந்தரம்.எனவே நிம்மதியைக் கொடுப்பது பாசமே என்பது என் தாழ்மையான கருத்து.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று (மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.)
உங்களிடம்
அதிகம் இருந்தால்
பிறருக்கு கொடுக்க
மறுவாதீர்..
பணத்தை அல்ல
பாசத்தை…
• உறவினால் வருவது அல்ல பாசம்
நல்ல உள்ளத்தினால் வருவது பாசம்
• வயதினால் வருவது அல்ல பாசம்
நல்ல நடத்தையினால் வருவது பாசம்
• வீண் பேச்சினால் வருவது அல்ல பாசம்
அன்பு பேச்சினால் வருவது பாசம்
• பழிப்பதினால் வருவது அல்ல பாசம்
பாராட்டினால் வருவது பாசம்
• மிரட்டினால் வருவது அல்ல பாசம்
பணிவான பண்பினால் வருவது பாசம்
• பணத்தைக் கொடுத்து வாங்குவது அல்ல பாசம்
பாசத்தைக் கொடுத்து வாங்குவது பாசம்
• ஒருவழிப் பாதை அல்ல பாசம்
இருவழிப் பாதை தான் பாசம்.
என்னுடிய கருத்து பாசம் ..பணம் என்பது ஒரு குடுன்ப வண்டிய இழுத்து
செல்வதற்கு தேவை யான .சக்தி வாங்குவதற்கு தேவை ஆனது
பாசம் என்பது தேவை ஒரு குடுன்பம் உருவாகுவதற்கு
பணத்தைக் கொடுத்து பாசத்தை வாங்கலாம்.ஆனால்
பாசம் ஒரு 2 கிலோ தருகிறேன்.ஒரு 10 ரூபாய் தருவியா என்று கேட்டால் தர ரெடி யா?யாராவது
வெளி நாடுகளிலுள்ள உங்களை பிறந்த ஊருக்கு வரவைப்பது பணமா ?பாசமா ?
பெருந்தொகையைச் செலவு செய்து ஊருக்கு ஓடி வருகிறீர்களே ,பணத்துக்காகவா ?
உங்கள் பெற்றோரை உயிருடன் பார்க்கவேண்டும் என்ற பாசமல்லவா .உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு துன்பம் ஏற்ப்ப்படும்போது வேதனைப் படுகிறீர்களே ,பணத்துக்காகவா ?
பாசத்தை விலைக்கு வாங்கினால் அது பாசமல்ல.அது பணத்துக்காகப் போடும் வேஷம் .
தானாடாவிட்டாலும் தசை ஆடும் தன்மை கொண்டது பாசம் .ஆனால் தானாடினால் மட்டுமே கையில் வந்து அமர்வது பணம் .இதையே தம்பி இராவணனுக்கும் கூறிவைக்க விரும்புகிறேன் .
பாசத்துக்காகத் தான் ஓடி வாறோம்.அதுக்காக பிளேன் காரனிட்டை எங்கடை பாசத்தை விளக்கிச் சொல்லி ஒரு டிக்கெட் தாறியோ எண்டு கேட்டால் தரவே போறான்?காசு அது தான் இன்று
பாசம் இல்லை என்றால் நீங்கள் ஏன் பிலேன்காரனிடம் பல்லுக் காட்டவேணும் .அங்கேதான் நிம்மதி எங்கே என்பது வெளிப்படுகிறது .பணம் இல்லையென்றால் வரமுடியாது என்பது உங்கள் கருத்தானால் அந்தப் பணத்தின் தேவையை வரப் பண்ணுவது பாசம்தானே .பணம் இல்லாது ஊருக்கு வரமுடிய வில்லையே என என்குவதர்க்குக் காரண கர்த்தா பாசமே .
பாசத்தை பணத்தால் வாங்கலாம் இந்தகாலத்தில் பாசத்தைவைத்து என்னசெய்ய முடியும்?. பணம் தன் கடமையை செய்யும், பாசம் மனிதனை சுடுகாட்டுக்கு அனுப்பும். என்னைபொறுத்தவரை பணம்தான் முக்கியம்
[youtube https://www.youtube.com/watch?v=QBVKYfEyMeo?feature=player_detailpage&w=640&h=360%5D
“எத்தனை கோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே”
நிம்மதியைக் கெடுக்கும் ஒரு அரக்கனே பணம் .இறுதியில் கஞ்சி பருக்குவது பாசமே !
பணம் பாசத்தைப் பறித்துவிடும் .ஆனால் உண்மைப் பாசம் ஒருபோதும் அழியாது .எனவே நிம்மதியைக் கொடுப்பது பாசமே என்பது என் தாழ்மையான கருத்து.