உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பணிப்புலம் வாசிகசாலை நிர்வாகம் அன்றாடம் சந்திக்கும் சில இடைஞசல்கள். நிர்வாகத்தினர் வாசிக சாலையில்(மட்டும்) எந்த விடயங்களை செய்ய முனையும் போதும் ஆலயத்தினர் மூக்கை நுளைப்பது மட்டுமல்ல ஏன் எங்களை கேட்க்கவில்லை என கேட்டு குடைகிறார்கள்.எதை செய்தாலும் இந்த மூக்கை நுளைக்கும் செயலை எமது ஊரில் வாழும் மக்கள் தட்டி கேட்டால் வாசிகசாலை முன்றலில் ஒரு ஓலம் கேட்கும்.ஐயோ ஐயோ அம்மாள் ஊரைக் கொழுத்தப்போறா என்று.

என்ன அநியாயம் நடக்குது வெளிநாட்டிலை தங்கராசின்ர பொடியும் கொஞ்ச வேலை வெட்டி இல்லாததுகளும் அம்மாள் ஆச்சியின்ரை சாபத்தாலை அலையப்போகுதுகள்.எல்லாத்தையும் கேட்டுக்கொண்டு இஞ்சை இளசுகள் துடிக்குதுகள்.இப்படி பல திட்டுக்கள்.இதில் எனது சந்தேகம் என்றால் அம்மாள் என்ன சமூகவிரோதியா இல்லை தீவிரவாதியா நல்லது செய்பவருக்கு அம்மாள் துணை போகாதா அப்படியாயின் அம்மாள் எதற்கு என தோன்றாதா இதே அம்பாள் ஒரு தனி நபர்களின் முன்னேற்றத்துக்கும் அவர்கள் பொதுவானதை தனதாக்கி ஊரை பயமுறுத்தி சுறண்டி நல்லாய் வாழ்கிறாரர்களே. அதை ஏன் அம்மாள் கண்டு  கொள்ளவில்லை.  இது இப்படி இருக்க ஏன் பொதுமக்கள் பயப்பட வேண்டும்.

வாசிகசாலையில் நடைபெறும்    பொதுக்கூட்டங்களில் பொதுமகனாக பாலு பேரின்பம் என்பவர்கள்  எல்லோரும் போன்று தங்களும் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை வினாவலாம். உண்மையில் பேரின்பம் ஐயர், பாலுஐயர் என்பவர்கள் அம்மாள் ஆலய முதலாளிகள் என்று அவர்கள் சொல்கிறார்கள். அப்படியாயின் அவர்கள் அதிகார எல்லைக்கோடு அதோடு முடிவடைகின்றது.

நாங்கள் இப்போது பொதுமக்களால் பொதுமக்கள் நலன்களை கருதி, அவர்கள் நலன்களை நோக்கி செயற்படும் பொது நோக்கை கருத்தில் கொண்ட ஒரு புனர் நிர்மான வேலையை தொடங்கியுள்ளோம். இதற்கு அவர்கள் நேரடியாகவே ஒரு தடுப்பு கதியால்களை வாசிகசாலை முன்றலை ஊடறத்து நட்டு பின்னர் தற்ப்போது அகற்றியுள்ளார்கள். இது பொதுச்சொத்தை அபகரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு தடுப்பு கதியால்களா? இவர்கள் எமது எதிர் கால சந்ததியினர்க்கு வாசிகசாலை பற்றிய ஒரு தவறான வரலாற்றை சொல்லி உண்மையாக்க முனைகிறார்கள் போல் தெரிகின்றது..ஆனால் வாசிகசாலை பற்றிய ஒரு ஆராய்வு மற்றும் ஆவணங்கள் யாழ் தொல் பொருள் ஆராட்ச்சி மையம் உள்ள யாழ்பல்கலைக்கழகத்தில் உண்டு.இதை விட மேலதீக ஆவணங்கள் கிராமசபை அலுவலகங்களில் உண்டு.

65 வருடமாக ஒரு பொது ஸ்தாபனமாக அரசாங்க மானியம் பெற்று வரும் எமது வாசிகசாலை.இலங்கையிலேயே 183 வது சனசமூகநிலையம் ஆகும். யாழ்மாவட்டத்தின் இரண்டாவது சனசமூகநிலையம்.தரத்தில் ஏ.இதன் பெருமைகளும் ஆவணங்களும் இன்னும் பல உண்டு.இதைவிட முக்கியமாக பிரித்தானியர் ஆட்ச்சியாளர்களின் போது கட்டப்பட்டதால் அவர்களின் காலனித்துவ நாடுகள் பற்றிய ஆவணங்கள் ஆராய்வு மையத்தில் இலங்கைப்பிரிவில் யாழ்மாவட்த்தின் பகுதியில் பணிப்புலம் சனசமூகநிலையம் பற்றிய ஆவணம் பிரித்தானியாவில் உண்டு.இதன் பெருமைகள் எங்களால் ஏன் உணர முடியவில்லை.பெருமைகள்பாதுகாக்கப்படவேண்டியவை.

எனிமேல் ஆதல் வீண் வாதங்களை விலக்கி புனர்நிர்மான வேலைகளை தொடருவோம்.தடைகள் கொடுப்பவர்கள் எல்லைகளை மீறி பொதுச்சொத்துக்களை உரிமை கோரும்போது ஒட்டு மொத்த பொது இடங்களும் பொதுவாக்கும் முயற்ச்சிகளை நோக்கி செல்லவேண்டி வரலாம் இது எங்கள் கையில் எதுவுமே இல்லை அம்மாள்தான் இவர்களை பாதுகாக்க வேண்டும். நாங்கள் மனிதனையும் அவனது மனச்சாட்சிகளையும் நம்பியே ஆரம்பித்த திட்டம் எந்த இடையூறையும் தகர்த்து வாசிகசாலை கட்டப்படும்.எங்கள் பின்புலம் பலமாக இருக்கும்போது நம் பணிகள் தொடரும்.வரும் நாட்க்களில் இணையத்தில் வாசிகசாலை நிர்வாகத்தின் கடிதம் வெளியிடப்படும். நன்றி.ப.ச.ச.நிலையம் வெளிநாட்டு தொடர்பாளர் த.பாலகுமார்

26 Responses to “ஏன் எங்களை கேட்கவில்லை ?”

 • manithan:

  கோபுரம் தேவையா இல்லையா என்றால் அது தேவைஇல்லை என்பதுதான் உண்மை.கடவுள் மக்களுக்கு நலன் செய்வார் என்பதை பல மகான்கள் கூறுகிறார்கள்.ஆனால் அதே கடவுளை வணங்காவிட்டால் அல்லது குருவை மதிக்காவிட்டால் கடவுள் அழித்துவிடுவாராம்.இது அம்பாள் ரசிகர்கள் வாதம்.என் வாதம் அழிக்கும் கடவுளை இவ்வளவு பணத்தைக்கொட்டி பாதுகாக்கவேண்டிய அவசியம்.ஊரை நோக்கி படை எடுக்க இருக்கும் ஊரவரே தனிய திருவிழா என்னும் பெயரில் வசூல்ராசாக்கள் உங்களை மொட்டைபோட காத்திருப்பதோடு, உங்கள் பணத்தில் ஊரில் விற்க்க இருக்கும் வீடுவளவுகள் பேரம் பேசி முற்ப்பணம் கொடுக்கப்பட்டுள்ளது.தம்பி கங்கா சொன்னது போல் மட்டைஅடி அடித்து உழைத்தபணம் எங்கு கொடுக்க கனா காணுகிறீர்கள்.விமர்சனம் வியாக்கியானம் நம்பிக்கை மூடநம்பிக்கை தர்மம் தானம் இப்படி எதற்க்கும் உங்களை நீங்களே கேள்விகள் கேட்டால் என்ன பதில் வரும் என சிந்திக்கவேண்டும்.சிவா அவர்கள் உங்கள் கருத்தின் படி பல முட்டாள்கள் இணையம் நடத்த உலகத்தின் அதி புத்திசாலியாக உங்களை நீங்களே விமர்சனம் செய்கிறீர்களே. மனிதன்

 • நண்பனே ! நல்லவன் யார் என்றால் உம்மைபோன்ற நல்லவர்களில் ஒருவன்
  ! நல்லவன் கேட்ட நாலு வரிக்கு பதில் இல்லாமல் எதோ எல்லாம்
  எழுதுகிறீகள்.திரும்பவும்திரும்பவும் எழுதுகிறேன்.ஒன்றுக்கும் உதவாத கோபுரம் என்ற சொல் தவிர்க்கப்ப்ட்டு இருக்கவேண்டும் என்று எழுதினீர்கள்.தயவு செய்து கோபுரத்தினை வைத்து என்ன ஊருக்கு உதவக்கூடிய் பிரயோசனமான வேலை என்ன நடக்குது.கடவுள் கேட்டதா கோபுரம் கட்டினால்த்தான் இருப்பன்.சுற்றி உள்ள வீடுகளுக்கு அருகில் கோபுரம் உயர்ந்ததினால் அண்ணாந்து பார்க்கவேண்டியதினால் அயலில் உள்ள வீடுகளில் இருப்பவர்களுக்கு ஊரிலோ,வெளிநாட்டிலோ கஷ்டம்,வருத்தம் ,வழக்குகள் ஏதன் வரலாமோ? ஊர்ச் சனங்களைப் கடவுளைக் சொல்லி பயமுறுத்தி காசு சேர்த்து கோபுரம் கட்டி சிலர் ஊர் மக்களின் பணத்தில் வாழவில்லையா பதில்? கூறத்தயக்கமா,பயமா

  Reply

  • இளையவன்:

   ஐயா நல்லவரே ஒரு கோபுரம் ஒரு ஊருக்கு என்ன செயஜமுடியுமோ அதை இந்த கோபுரம் சிறிதளவேனும் செய்யும் என்று நான் கருதுகிறேன் . ஒரு கோபுரம் ஊருக்கு என்ன செய்யவேண்டும் என்று எதிர்பர்கிரிர்கள் ,உங்களுக்கு திருப்தி இல்லமைகை வருந்துகிறேன் .இதற்கு மேல் எனிடம் பதில் இல்லை.மன்னித்துவிடுங்கள் இந்த சின்ன கலைரசிகனை
   என்றென்றும் அன்புடன்
   உங்கள் இளையவன்

 • manithan:

  சகலரின் வாதபிரதிவாதங்கள் கவனத்தில் எடுக்கப்படவேண்டியதே.ஆனால் எனது சில கருத்துக்கள் அதாவது வாசிகசாலை பற்றிய விபரம் பல முறைகள் பாலா அவர்கள் விளக்கமாக எழுதியுள்ளார்.அவரிடம் இருக்கும் ஆவணங்களை நன்கு அவதானமாக படித்துள்ளேன்.அந்த ஆவணங்கள் நீதிமன்றம் போகவேண்டிய அவசியமே இல்லை.இந்த ஆவணங்கள் அவர் கையளிக்கவேண்டிய இடத்தில் சமர்ப்பிப்பார் ஆனால் ஆலயம் அதன் சொத்துக்கள், தங்களது என சொல்லிக்கொண்டு இருக்கும் வாசிகசாலை உட்ப்பட பொதுவாக்கமுடியும்.குறைந்தது மூன்று மாதம் கூட தேவை ஏற்ப்படாது அவருக்கு.அவருடைய பொறுமை ஏன் இவ்வளவுகாலம் என தெரியவில்லை. மனிதன்

 • konesh:

  வணக்கம் எல்லோருக்கும் உங்கள் கருந்துக்கள் எல்லாம் கேக்க நன்றாக இருக்கிறது வாதங்களை விட்டு நாங்கள் எமது சமூகத்துக்கு என்ன செய்யவேணுமோ அதை செய்வோம். எப்போதும் சொல்லுக்கு முன் செயல் இருக்கவேண்டும். முதலில் நாம் சொந்த பெயரில் கருந்துக்கள் எழுதவேண்டும். அது மிகவும் சிறந்தது. எல்லோரும் நல்லதை நினைப்போம் நல்லதை செய்வோம்.

 • UMA:

  அம்மனுக்கு யார் பூசை செய்தால் என்ன????
  அவரவர் தமக்கு என்னென்ன தேவையோ அல்லது என்ன குறையை அதை அவர்களே அம்மனிடம் கேப்பார்கள்
  {; அதர்க்குத்தான் அம்மனிடம் செல்கிறார்கள் ;}
  இங்கு என்ன கேக்கப்பட்டதோ அவைக்கு பதில்ல்ல்ல்??????????????
  அன்பு உள்ளங்களே மனதை அலையவிடாதீர்கள்
  பதிலை மட்டும் தேடுங்கள்!!!!!!!

 • அவதானி.:

  பலதரப்பட்ட கருத்துக்களும் ஆலோசனைகளும் இங்கு உள்வாங்கப்பட வேண்டும். இவ் இணையத்தில் ஆராயப்படும் அனைத்து விடயங்களையும் ஒன்றும் விடாமல் படிப்பதுடன் அவ்வப்போது பொது இடங்களில் விமர்சனம் மாத்திரம் செய்துகொண்டிரப்பவர்களும் அத்துடன் இவ்விடையத்தில் அக்கறை உள்ள அனைவரும் இங்கு தமது கருத்துக்களைத் தெரிவிப்பது நன்று. தமக்கு நெற்றில் எழுதுவதற்கு வரமாட்டாது அல்லது தெரியாது என்று கூறுபவர்களில் பலர் பிறந்தநாள் வாழ்திற்கு மட்டும் பிழையின்றி எழுதிவருகின்றனர்.

  பாலகுமாரும் அவரின் நண்பர்களும் மாத்திரம் இவ்விடையத்தில் ஈடுபட்டு நல்ல தீர்வைத் தருவார்கள் நாங்கள் நல்ல பிள்ளைகளாக வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கலாம் என்று நினைப்பவர்கள்தான் இன்று அதிகமாக உள்ளது.
  சிந்தியுங்கள் செயற்ப்படுங்கள்.

 • நண்பர்களே!! நல்லவன் கேட்ட நாலு வரிக்கு பதில் இல்லாமல் எதோ எல்லாம்
  எழுதீர்கள்.திரும்பவும் எளுதுகிறேன்.ஒன்றுக்கும் உதவாத கோபுரம் என்ற சொல் தவிர்க்கப்ப்ட்டு இருக்கவேண்டும் என்று எழுதினீர்கள்.தயவு செய்து கோபுரத்தினை வைத்து என்ன ஊருக்கு உதவக்கூடிய் பிரயோசனமான வேலை நடக்குது.ஊர்ச் சனங்களைப் பயமுறுத்தி காசு சேர்த்து கோபுரம் கட்டி சிலர் ஊர் மக்களின் பணத்தில் வாழவில்லையா பதில்? கூறத்தயக்கமா,பயமா

  Reply

  • Sivanantham.S:

   நல்லவனே!
   நான் ஒரு வினாவை தங்கள் முன் வைக்கின்றேன். அதற்கு தாங்கள் தரும் பதிலைக் கொண்டு ஆலய கோபுரத்தின் அவசியம் பற்றியும், அம்மாளின் பிள்ளைகளால் எதற்காக கோபுரம் கட்டப்பட்டது என்பதற்கான விளக்கத்தையும்ங விரிவாகத் தருகிறேன்.
   *நல்லவன்* என்று நல்ல நாமத்தை தங்களிற்கு தாங்களே சூட்டிக் கொண்டீர்களா? அல்லது
   மக்களால் தங்கள் சேவையைப் பாராட்டி *நல்லவன்* என பெயர் சூட்டிக் கௌரவிக்கப்பட்டீர்களா? இவ்விணையத்தில் இவ் விடயத்தை தயக்கமின்றி மக்கள் முன்
   கொணர்ந்த திரு.பாலகுமார்* அவர்களே தன்னைப் பெற்றெடுத்த பெற்றார் அன்புடன் சூட்டிய நாமத்தை முன் நிறுத்தி தன்னை யாரென மக்களுக்கு அறிமுகம் செய்த பின்னரே விடயத்தை முன் வைத்துள்ளார். இது அவர் தன் பெற்றார் மீது வைத்திருக்கும் அளப்பரிய அன்பையும்,மதிப்பையுமே எடுத்துக் காட்டுகிறது. ஆனால் தாங்கள் தங்களை அறிமுகம் செய்துகொள்ளாது, தங்களுடைய பெற்றார் அன்புடன் சூட்டிய அரிய நல் நாமத்தை அகற்றிவிட்டு *நல்லவன்* என நாமம் சூட்டிக்கொண்டதேனோ?
   வினாவிற்கான விடையைத் தாருங்கள் தங்கள் வினாவிற்கான விடையை விரிவாகத் தருகிறேன். எனது வினாவிற்கான விடையைத் தாங்கள் தேடும்போதே தங்களுக்கான விடை கிடைத்தாலும் கிடைத்து விடலாம். இது தங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்தத விடயமாகும்.
   நன்றி!

 • Sivanantham.S:

  மேற்படி விடயத்தில் திரு. கெங்கா அவர்களின் கருத்தே எனது கருத்துமாகும்.
  இவ் விடயமானது நீதி மன்றம் வரை செல்லுமானால் காலமும்,காசும் வீணாக்கப்படுவதுடன்,
  இரு தரப்பார் நோக்கங்களும் நிறைவேறுமா என்பது சந்தேகத்துக்குரியதேயாகும். ஏனெனில்
  சட்டம் என்பது ஒரு அரிதட்டைப்போல் ஓட்டைகள் பல நிறைந்ததாகும். இந்த ஓட்டைகள் சாதாரண மக்கள் கண்களிற்குத் தெரிவது அரிதான விடயமாகும். சட்டங்களில் இருக்கின்ற ஓட்டைகளைக் கண்டுபிடித்து, தத்தமது கட்சிக்காரர்கள் தரப்பு வாதங்களை நியாயப்படுத்தி,
  உண்மையான ஆவணங்கள்,சாட்சியங்கள் என்பவற்றைப் பொய்யாக்கி, பொய்யான சாட்சியங்கள், ஆவணங்களை உண்மையாக்கி தமது வாதத்திறமையால் தத்தம் கட்சிக்காரருக்கு சார்பான தீர்ப்புகளை வாங்கிக் கொடுக்கும் திறமைமிகு சட்டத்தரணிகள் பலர் இருக்கின்றனர். 1970-80களில் ஆலயப் பிரச்சினை சம்பந்தமான வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் மிகக் கடினமான நிதி நெருக்கடிகளிற்கு உள்ளாகியிருந்தார்கள். இதனாலேயே அன்று ஆலய வழக்கினை மல்லாகம் மஜிஸ்திரேட் நீதி மன்றத்தை விட்டு மேல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று விரைந்த தீர்வைப் பெறமுடியாமல் போனது. ஆனால் இன்று இருதரப்பாரிடமும் நிதி வளம் நிறைந்திருந்தாலும்
  நீதி மன்றம் சென்று விரைந்த நல்ல தீர்ப்பு பெற்றுக்கொள்ளலாம் என்ற நோக்கம் நாட்டின் தற்கால சூழ்நிலைகளை முன்னிறுத்திப் பல்வேறு கோணங்களிலும் ஆராய்ந்து முடிவு செய்யப்பட வேண்டிய விடயமாகும். கடந்த 30 ஆண்டு காலமாக நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் தற்போது அரச, அரசியல், நீதி,நிர்வாக மாற்றங்கள் சிலவற்றை ஏற்படுத்தியிருப்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். அடுத்து வெளி நாடுகளில். வெளி நாட்டுப் பிரசாவுரிமைகளைப் பெற்று வாழ்பவர்கள் இவ் விடயத்தில் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்வது சம்பந்தப்பட்டவர்களுக்கு சில பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.
  *தீயினாற் சுட்ட புண் ஆறினும் ஆறாது
  நாவினாற் சுட்ட வடு* எனும் வள்ளுவரின் குறளையே மேற்படி விடயத்தில் சம்பந்தப் பட்ட இரு தரப்பாருக்கும் நினைவு படுத்த முடியும்.
  அன்பான அரவணைப்பு, பணிவான கருத்து,பண்பான பேச்சு, விசுவாசமான விட்டுக்கொடுப்பு,
  இதய சுத்தி நிறைந்த இறை பக்தி, முதலியனவே மேற்படி தகராறுக்கு நல்ல தீர்வைக் கொடுக்கக் கூடிய நல் வழிகளாகும்.
  நன்றி!

 • இளையனே!ஒன்றுக்கும் உதவாத கோபுரம் என்ற சொல் தவிர்க்கப்ப்ட்டு இருக்கவேண்டும் என்று எழுதினீர்கள்.தயவு செய்து கோபுரத்தினை வைத்து
  என்ன ஊருக்கு உதவக்கூடிய் பிரயோசனமான வேலை நடக்குது.

  • இளையவன்:

   வணக்கம் உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கமுன் திரு அழ சந்திரன் ஐய அவர்களுக்கு நன்றிகள் பலகோடி.அவர் குறிப்பிடுவது மிகவும் சரியானதே .புதிய பொது திட்டங்களுக்கு ஆலோசனையை பெறுவது எமது உறவரின் கடமை இலைஜேல் அவர் எமது உரியவர் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை என்று கருதுகிறேன் ,
   நல்லவனே !!! ஒரு ஆலய கோபுரம் செய்யகுடியத்தை இக் கோபுரம் சிறிதளவேனும் செய்யும் என்று கருதுகுறேன் ,குறைகள் இருக்கத்தான் செயஜ்கிரடு இருபினும் இனி அதில் செய்வதற்கு ஏதுமில்லை . உங்கள் அனவநிரின் அன்புக்கும் நன்றி

 • எமது ஊரின் சிறப்பு எங்கள அம்மன் ஆலயம்தான்.நாங்கள் சிறுவயதில் கூட எங்கள் அம்மன் கோயில் திருவிழாவைக் காணவேயில்லையென்றுதான் கூறவேண்டும்.காரணம் ஆலயம் பல வருடங்களாக பூட்டப்பட்டுத்தான் இருந்தது.தற்போது எமது ஆலயத்தின் புகைப்படத்தை பார்க்கும்போது எவ்வளவு ஆசையாகவிருக்கின்றது.ஆலயத்தின் வளர்ச்சிகள் அனைத்தும் எங்களைப் போன்ற பொதுமக்களின் பணத்தின் உதவியுடன்தான் கட்டப்பட்டது எல்லோரும் விரும்பித்தான் பண உதவியை அளித்தார்கள்.அதே போன்று எங்கள் சனசமூக நிலய கட்டிட நிதிக்கும் மக்களின் ஆதரவும் அவர்களின் உதவியும் தேவைப்படுகின்றது.எல்லோரும் அம்மனின் கோபுரத்தைப்பற்றித்தான் குறையாக சொல்லுகிறார்கள்.இப்படிக் குறைகூறுவது தயவு கூர்ந்து நிறுத்தப்படவேண்டும்.ஒரு சிலரே குறை கூறுகிறார்கள்.எவருக்கும் மீண்டும் எமது ஆலயம் சிக்கலில் செல்வதை விரும்பமாட்டார்கள்.ஆகையால் நான் தயவாகக் கேட்டுக்கொள்வது என்னவென்றால் தாங்கள் இன்னொருமுறை அவர்களுடன் பேசிப்பார்ப்பது நல்லதென்று தென்படுகின்றது.சனசமூகநிலயமும் கட்டாயம் புணரமைக்கப்படவேண்டும் அதேநேரத்தில் அம்மன் ஆலயமும் பாதுகாக்கப்படவேண்டும்.
  கனடாவில் இருப்பவர்கள் எவ்வளவோ சிரமப்பட்டு இரவுபகலாக வேலைக்குச் செல்கிறார்கள்.அவர்கள் தங்களுக்கு ஏதாவது சுகயீனம் என்றால்க்கூட ஓய்வு எடுப்பது குறைவு.ஆனால் அம்மன் ஆலய திருவிழாவிற்று போவதற்கு இப்பவே ஒழுங்குகள் செய்கிறார்கள்.இவர்களின் இந்த விடுமுறைக்கு பணம் கிடைப்பதில்லை.அப்படியிருந்தும் அவர்கள் விடுமுறையெடுத்து திருவிழாவிற்குப் போகின்றார்கள்.காரணம் எங்கள் ஊர் எங்கள் ஆலயம் எங்கள் உறவினர்கள் என்று நல்ல பற்று வைத்திருக்கிறார்கள்.எங்கள் மக்களின் முழு ஆதரவுடன் தான் சனசமூகநிலயம் புணரமைக்கப்படவேண்டும் அத்தோடு எமது ஆலயமும் பாதுகாக்கப்படவேண்டும்.இவ்வளவும் என் மனதில் தோன்றியவைகள்.பரந்துபட்டு வாழ்கின்ற எம்மக்களின் ஆதரவுடன் எம் பணிகளை முன்னெடுத்துச் செல்வோம்.மக்களின் இதைப்பற்றிய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

  • இளையவன்:

   வணக்கம் கெங்கா அண்ணன
   நீங்கள் குறிபிடுவது உண்மை .
   உங்கள் கருத்தை நான் வாழ்த்தி வரவேற்கிறேன்

   அன்புடன் இளையவன்

  • Toronto news::

   என்ன கெங்கா இந்தமுறை சமருக்கு ஊருக்குப் போறாப்போல கிடக்கிது. போவிட்டு வரும்வரையிலையாவது பிளேற்ற மாத்திக் கதைக்கிறது நல்லதுதான்.

   • ரொரன்ரோ நியூஷ் ஆசிரியர்கட்கு நான் எனி வரும் காலங்களில் அரசியலில் குதிப்பதாக எண்ணியுள்ளேன் அதற்கான சில முன்னேற்பாடுகள் தான் இவைகள்.
    மனிதன் கடவுளாக இருக்கலாம் ஆனால் மனிதனால் என்றைக்குமே மனிதனாக இருக்கமுடியாது.-சுவாமி கெங்கானந்தா

 • நிச்சயம் உண்மை கடவுள் என்பதை விவாதிப்பது தான் இன்று வரை நடைபெறுகின்றது. என்பது அதைவிட திட்டங்களை நிறை வேற்றுவதற்கான எந்தவித வேலைகளும் ஆமை ஊர்வது போலே நடை பெறுகின்றது. தனிப்பட்டவர்களின் பிரச்சனையை நீங்களே அவர்களுடன் கதைத்துத்தீர்கவும்.
  சில சந்தர்ப்பங்களில் எங்கள் கைகளில் ஊர்வருமாயின் நிச்சயம் கல்வி கலை இலக்கியம் விளையாட்டு என்பவற்றுடன் கட்டடங்களை எழுப்பவதையும் முன்னொடுப்போம் என்பதில் ஐயமில்லை

 • Chandrahasan:

  கடவுளோடு வாதம் செய்வதில்லை என்ற எழுதப்படாத ஒப்பந்தம் எங்களுக்குள் உண்டு. ஆனால் அது கடவுளின் ஏஜென்றுகள் சப்ஏஜென்றுகள் பற்றி விமர்சிப்பதை கட்டுப்படுத்தாது என்பதால் சிலவிசயங்களை எழுத முனைகிறேன். எதுவுமறியாமல் கல்லாய் உறைந்திருக்கும் கடவுளுக்கு உதவுவதே எனது நோக்கு என்பதை சத்தியமாக நம்புங்கள்.

  முதலில் அம்பாள் வெறும் கல்லு என்ற நம்பிக்கையில்தான் இந்த ஏஜென்றுகள் அம்பாள் ஊரை எரித்துப் போடுவாள் குடியறுப்பாள் என்று சாபமிடுகிறார்கள் என்பதை அம்பாள் புரிந்து கொள்ளவேண்டும். அம்பாள் இருப்பது உண்மையானால் தங்களுடைய நலன்களுக்காக அம்பாளை அரக்கியாகக் காட்டுவதற்கு என்ன தண்டனை கிடைக்கும் என அவர்களுக்குத் தெரியும். ஆக அம்பாள் வெறும் கல்லுத்தான் என்று அவளின் ஏஜென்றுகள் பூரணமாக நம்புகிறார்கள். தாங்கள் அம்பாளின் பெயரில் என்ன செய்தாலும் சொன்னாலும் இந்தக் கல்லால் ஒன்றும் பண்ணிவிட முடியாது என்ற தைரியம் அவர்களுக்கு.

  அல்லது அம்பாளுக்கும் ஏஜென்றுகளுக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கலாம். நாங்கள்தான் முட்டாள் சனங்களைப் பேய்க்காட்டி காசு சேர்த்து கோயில் கட்டி ஒண்டுக்கும் உதவாத கோபுரமும் கட்டி உன்னை குடி வைச்சிருக்குறோம். ஆனபடியால் நாங்கள் உன்ரை பேரிலை செய்யிற திருவிளையாடல்களை கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டும் என்று அம்பாளை வெருட்டி பணிய வைத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் அம்பாளின் நிலை மிகப் பரிதாபகரமானது. இந்த நிலையில் கடவுளோடு நான் செய்த ஒப்பந்தத்தை மீறி கடவுளை காப்பாற்ற களத்தில் இறங்குவது பற்றி சிந்திக்கத் தலைப்பட்டுள்ளேன்.

  எதற்கும் அம்பாள் தனது கையறு நிலையை கருத்தில் கொண்டு ஏஜென்றுகள் சப்ஏஜென்றுகளின் லைசென்சுகளை ரத்து செய்துவிட்டு சுயமாக இயங்க முயல்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

  • இளையவன்:

   வணக்கம் ஐயா. உங்கள் கருத்துகள் அருமை இருபினும் ஒன்றுக்கும் உதவாத கோபுரம் தவிர்க்கபடிருகவேனும் என்பது ஒரு கலை ரசிகனின் வாதமாகும்
   நன்றி ஐயா உங்கள் முஜர்சிக்கு
   அன்புடன் இளையவன் .

   • chandrahasan:

    நீங்கள் குறிப்பிட்ட அதே கலையுணர்வின் காரணமாகத்தான் அவ்வாறு குறிப்பிடவேண்டியதாயிற்று. மேலும் அக்கலையை கற்று முப்பது வருடங்கள் அக்கலையையே தொழிலாக வரித்துக்கொண்டதால் கொஞ்சம் தைரியமாக கருத்துச் சொல்ல லைசன்சை நானே எனக்கு வழங்கிக்கொண்டேன். கட்டுவது எல்லாம் கலை அல்ல. மாறி வரும் சூழலும் மக்களும் ஏற்கும் தனித்துவமான கலைத்துவமான கட்டடத்தை உருவாக்குவது அத்தனை இலேசானதல்ல. சூழலையும் மக்களையும் காலத்தையும் பொருட்படுத்தாமல் ஊரெல்லாம் கார்பன் கொப்பிகள் போல கிட்டத்தட்ட ஒரே அமைப்பில் கட்டித் தள்ளுவது கலையல்ல. கண்ராவி. பாரிசுக்கு போனால் ஐபில் ரவரை சின்ன அளவில் அலுமாரியில் வைப்பதற்கு செய்த விற்பார்களே அது போல. அந்தப் பொம்மைகளை தங்கள் கலை என்று அவர்கள் சொல்லுவதில்லை. அதை சின்ன சைசில் ஊரூராக கட்டி வைக்கவுமில்லை. இந்தக் குத்திகளை எமது கட்டடக்கலை எனக் பாராட்டுவது தற்காலத் தமிழரின் கலை வரட்ச்சியையே பறை தட்டுகிறது. மன்னராட்சிக்குப் பின்னர் திராவிடக் கட்டடக் கலை செத்துவிட்டத என்றே சொல்ல்லாம். அது ஏன் நடந்தது. அதை மீட்டெடுக்கத் தடை என்ன என விரவாக ஆராய இது களமல்ல.

    • இளையவன்:

     உங்கள் வாதம் வரவேற்கதக்கதே ,இருபினும் எதோ ஒரு வகையில் கலையம்சம் வாய்ந்த கட்டிய கோபுரம் மிது சொல் எரிவதை தவிர்திருகல்ம் என்பதே என் வாதம்.
     திராவிடர் கடிடகலையின் அழிவும் மிட்டுடுபதில் உள்ள சிக்கலையும் விளகிடுமாறு அன்புடன் வேண்டுகின்றேன் .
     என்றென்றும் உங்கள் மீது மதிப்புள்ள இளையவன்

     • chandrahasan:

      ஏற்கனவே குறிப்பிட்டது போல இத்தளத்தில் விரிவாக ஆய்வு செய்வது சாத்தியமில்லை. எனினும் உங்கள் ஆர்வத்திற்காக சில சிந்தனைச் சிதறல்கள். இது எங்களூர் கோயிலுக்கு என மட்டுப்படுத்தாத பொதுவான கருத்துக்கள்.
      1. அண்ணாந்து பார்ப்பதற்காக கோபுரங்கள் கட்டப்படுவதில்லை. எவ்வளவு தூரதிலிருந்து பார்க்க இயலுமோ அவ்வளவுக்கே அதன் உயரம் அமைய வேண்டும். இப்போது கட்டியுள்ள கோபுரங்களின் உயரத்திற்கு பல வீடுகள் உடைபட வேண்டும்.
      2 கட்டடக் கலை வடிவங்கள் கட்டப்பட்ட காலத்திற்குரிய மக்களின் பண்பாடு அரசியல் தொழில்நுட்பத்தை பிரதிபலிக்க வேண்டும். கல் கொங்கிறீற்றானதை தவிர பல்லவர் காலத்துக் கோயிலுக்கும் இப்போது கட்டும் கோபுரங்களுக்கும் வடிவத்தில் வேறுபாடில்லை. கிறீஸ்த்தவ பௌத்த ஏன் அடிப்படைவாத இஸ்லாமிய கட்ட்டக் கலையில் கூட இந்தத் தேக்கமில்லை. தமிழர்கள் இஸ்லாமியர்களை விட தீவிரமான அடிப்படைவாதிகளாக இருக்கலாம்.
      3 புதிய யாழ் மாநகர சபையை வடிவமைக்கும்படி யாழ் மேயர் கேட்டுக்கொண்டார். திராவிடக் கட்டடக்கலை மரபில் புதிய ஜனநாயகத்தையும் புதிய கலாசாரத்தையும் புதிய தொழில் நுட்பத்தையம் உளவாங்கி இதன் வடிவம் அமைய வேண்டுமென்ற எனது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவைக்க இன்றுவரை முயல்கிறேன். மக்கள் பழையதை இம்மியளவும் மாற்றுவதை ஏற்கமாட்டார்களாம். ஆக கட்டடக்கலை பற்றிய தமிழர்களின் அறியாமையே அது வளராது தேங்கியதற்கு அடிப்படை காரணி. தமிழில் கட்டடக் கலை சம்பந்தமாக புத்தகங்களோ கட்டுரைகளோ கூடக்கிடையாது. கட்டடக்கலை எனத் தனியாக ஒரு தொழில் இருப்பது பல தமிழ் இன்சினியர்களுக்கே தெரியாது.
      4. ஒரு கட்டட திட்டமிடலின்போது அதனோடிணைந்த வெளிகளும் கட்டடத்திற்கமைய கவனமாக திட்டமிடப்பட வேண்டும். தஞ்சை பெரிய கோயிலை தாஜ்மகாலை பார்த்தால் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்தக் கோபுரங்களோ வெளியோடு மட்டுமல்ல அதனோடு ஒட்டியுள்ள கட்டிடங்களோடே ஒத்திசைய மறுக்கிறது. இக் குத்திகளை வடிவமைப்பவர்கள் அதுபற்றி எந்த அக்கறையும் எடுத்துக்கொள்வதிலை என்பது வெள்ளிடை மலை.
      5. கோயிலின் வடிவம் அதன் தேவைகள் மாறும்போது மாறவேண்டும். பயத்தினூடாக பக்தியை வளர்த்து மக்களை தங்களுக்கெதிராக மாறாமல் மந்தைகள் போல் வைத்திருக்க மதங்கள் ஆட்சிலுள்ளவர்கட்கு உதவியது. உயர்ந்த கோபுரங்கள் சாதாரண மனிதனை பயப்படுத்தி அடங்கியொடுங்கி இருக்க வைத்தது. இன்றைய ஊனநாயக உலகில் கோயல்கள் உள்ளத்திற்கு அமைதியையும் ஆத்ம பலத்தையும் தரவேண்டும். மேலும் ஆசைகளை ஆணவத்தை அகற்ற உதவ வேண்டும். ஆதலால்தான் மன்ற திட்டத்தில் கோயிலை ஒரு மூலையில் அமைதியான ஆத்மீக உணர்வூட்டக்கூடிய சூழலில் அமைத்திருந்தேன். ஆனாலும் கடவுளின் ஏஜென்றாக தம்மை நியமித்தவர்கள் அதை முன்னே கொண்டுவந்து தெருக் கோயிலாக்கிவிட்டார்கள்

      இப்போது புரிந்திருக்கும் திராவிடக் கட்டடக்கலையின் தேக்கத்திற்கு காரணம். அறியாமை. நாம் அறிந்திருக்கவில்லை என்பதையே அறியாத அறியாமை

 • அவதானி:

  இதனால்த்தான் நான் ஆரம்பத்திலேயே கூறியிருந்தேன் பணிப்புலம் வாசிகசாலையைப் பொதுவானதாகவே தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டுமாயின் அதற்காக கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமாக இருக்கும். அதற்காக ஆலயத்தின் பூசகர்கள் எனக் கூறிக்கொண்டிருப்பவர்கள் தமது பூஙூலையும் களட்டி எறிந்துவிட்டுக் கத்தியையும், பொல்லையும் தூக்குவதற்குத் எப்பொழுதும் தயங்கமாட்டார்கள். இன்றையசூழலில் இலங்கையில் சட்டம் ஒழுங்குகள் மீண்டும் படிப்படியாக வழமைக்கு வந்துகொண்டிருப்பதனால் அதுபற்றிச் சிந்தித்துச் செயற்ப்படுவது நல்லதே.

 • r.suki:

  ஏகனின் கருத்து மிகவும் வரவேற்கிறேன் அம்மன் கோவில் பொதுமக்களின் கைகளில் வத்தல் மிகவும் நல்லது முயச்சிக்கவும்

 • nisanthan:

  சட்டநடவடிக்கை பற்றி ஏகன் எழுதியிருந்தீர்கள்.எனது கருத்துமே அதுவே.ஏன் பாலா அண்ணர் அமைதிகாக்கிறார்.இவர் தனிய இந்த முயற்ச்சி எடுக்கமுடியாது தானே.எங்களைப்போல் பலரும் அவருக்கு கைகொடுக்கும்போதே அவர் இந்த முயற்ச்சி எடுக்கலாம்.வேதாளங்கள் மீண்டும் மீண்டும் முருங்கைமரம் ஏறுகிறது என்பதால்.பொதுக்கோயிலை பொதுமக்கள் பார்வைக்குள் கொண்டுவந்தால் மட்டுமே பணிப்புலம் அபிவிருத்துக்கு விடிவு. நிஷந்தன்

 • Egan:

  வணக்கம்

  பணிப்புலம் கிராம முன்னேற்றச்சங்க சனசமூகநிலைய அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் நல்லுறவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வேலையைத் தொடங்கி சமூக துரோகிகளை இனம் கண்டு அவர்களின் முகத்திரையைக் கிழியுங்கள். ஏன் கோயில் கூடப் பொதுமக்களின் பணத்தில் கட்டப்பட்டது என்பதை சிலர் வசதியாக மறந்துவிட்டார்கள் போல் தெரிகின்றது. அம்மன் கோவிலையும் சனசமூகநிலையத்தைப் போல் பொது மக்கள் சொத்தாக மாற்றுவதற்கான நடவடிக்கையை துணிந்து மேற்கொள்ளுங்கள். பல சிக்கலுக்குள் இருக்கும் இந்த விடயங்களை முதலில் கருத்தில் கொண்டு, இவற்றுக்கான நல்ல முடிவுடன் தீர்வு கண்டு கிராம அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும்.
  மீண்டும் அம்மன் கோவில் பொது மக்கள் சொத்து என்பதை எமது ஊரவர்களுக்குத் தெளிபடுத்துங்கள். சனசமூக நிலையம் மக்கள் சொத்து என்பதைத் தெளிவுபடுத்தி நீதி மன்றக் கண்காணிப்போடு அபிவிருத்தி முயர்ச்சிகளை மேற்கொள்வது நல்லது என்று நினைக்கின்றேன்.

  ஏகன்

Leave a Reply for nalavan

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து