உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

 இன்றும் சரி அன்றும் சரி ஒரு பிள்ளை பிறக்கும்போது அந்த நேரம் கணிக்கப்பட்டு அவர்கட்க்கு குறிப்பு எழுதப்படும்.இது எமது மூதாதயர்கள் தொட்டு வந்த பழக்கங்களில் ஒன்று.அப்படிப் பார்த்தால் அன்று பிள்ளை பிறப்பை வயோதிப பெண்களே (பாட்டிகள்) கவனித்தார்கள்.இவர்கள் மணிக்கூடு கட்டிக்கொண்டா செல்வார்கள் இல்லை அங்கு தாயும் சேயும் நலனுடன் இருக்கவே போராட்டமான நிலையில் தான் பெண்களின் பிரசவம் நடைபெறும்.வேதனைகளிலேயே பெரும் வேதனை பிரசவவேதனை என்பார்கள்.இந்த சூழலில் யார் அந்த சரியாக நேரம் கணிப்பீர்கள்.

மணிக்கூடுகளின் நேரம் ஒவ்வருவருடையது வேறுபட்ட நேரங்களைகாட்டும்.குறிப்பு எழுத நேரத்தை சரியாக கணக்கிடவேண்டும் என்றால் எந்த பிள்ளையும் பூ உலகை தொடும் நேரம் கணக்கிடமுடியாது.இன்றும் கூட பிரசவ காலத்தில் நேரம் கணக்கிடுவதற்க்கு முடியாது இவை எல்லாம் கிட்டத்தட்டவே நேரம் கணக்கெடுக்கப்பட்டு குறிப்பு எழுதுகிறார்கள்.இதிலும் ஒரு ஆச்சரியம் குறிப்பு எழுத ஒரு நாலு சாஸ்திரியிடம் கொடுத்தால் நாலு கணிப்பும் மாறுபடும்.சாஸ்திரங்கள் பார்க்க பல முறைகள் இதில் எது உண்மை.அப்போ நாம் ஒரு குழந்தை பூ உலகில் பிறக்கும்போதே அதன் வாழ்க்கை சாஸ்திரிகள் மூலம் குறிப்பிலே பல குளப்பத்தில் கொண்ட வாழ்க்கை ஆரம்பம்.அதற்க்கு பரிகாரம்.அதே குறிப்பை கவனமாக ஒரு பாதுகாப்பாக வைத்திருப்போம்.பொய்யான சாஸ்திரம் அந்த பிள்ளையின் வரும்கால கணக்கிடும் என நம்பி பிள்ளையை வளர்க்கும் போதே மூட நம்பிக்கை ஊட்டப்பட்டே வளர்க்கின்றோம்.இது நானும் நீங்களும் தெரிந்து செய்யும் மகாபெரும் தப்பு.அந்த பிள்ளைகளின் ஒவ்வொரு பருவ மாற்றங்களின் போதும் தப்பானகுறிப்பை மீண்டும் ஒரு முறை சாஸ்திரியிடம் கொடுத்து மீண்டும் ஒரு தப்பான கணிப்புடன் மீண்டும் ஆவணம் பத்திரப்படுத்தப்படும்.அடுத்து கல்யாணம் இதற்க்கு மீண்டும் தப்பானகுறிப்பு திருமணப்பொருத்தம் பார்க்க சாஸ்திரியிடம் இரண்டு குறிப்பை பொருத்தம் பார்ப்பார்கள் பொருந்தவில்லை என்றால் பொருந்தும் வரை பார்ப்பார்கள்.ஆனால் அந்த மணமக்கள் மனங்கள் பொருந்துமா என பார்ப்பார்களா இல்லை இதே குறிப்பு சாஸ்திரம் பொருத்தம் என சக்கரமாக பழக்கவளக்கங்கள் தொடர்கிறது.எல்லாமே நேரம் கணக்கிடுவது முக்கியம் என்றால்.இப்பொழுதே ஒரு பரிசோதனை உங்கள் வீட்டில் இருக்கும் எல்லாமணிக்கூட்டையும் ஒரு இடத்தில் வைத்த்தவிட்டு ஒரே நேரத்தில் எல்லாமணிக்கூட்டையும் பார்த்தால் ஒவ்வொரு மணிக்கூடும் ஒவ்வொரு நேரத்தை காட்டும் அப்படி என்றால் எந்த மணிக்கூட்டின் நேரம் சரி என சிந்தியுங்கள்.இந்த நேரம் கணக்கெடுத்து குறிப்பு எழுதி சாஸ்திரம் பார்த்து பொருத்தம் பார்த்து வளர்ப்பது தப்பான முறைகளே.தப்பான நேரம் கணிப்பு,தப்பான நேரத்துக்கான குறிப்புக்கு சாஸ்திரம்,தப்பான நேரத்துக்கு கணித்த குறிப்புக்கு தப்பான சாஸ்திரம் பார்த்து.தப்பாக எழுதிய சாஸ்திரத்துக்கு பொருத்தம் பார்த்து,தப்பாக பார்த்த பொருத்தத்தை நம்பி திருமணபந்தத்தில் சேர்த்து,சில பந்தங்கள் பிரிவு,சில பந்தம் நீடிக்க அவர்களின் பிரசவமும் மீண்டும் தப்பான நேரம்————–இன்னும் சில கணிப்பின் தப்புக்கள் தமிழர்கள் பொங்கல்,வருசம்,விரதங்கள் ஏன் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு திகதியில் இந்த குளப்பங்களுக்கு யார் காரணம்.வித்தியாசமான கலண்டர்கள்,வித்தியாசமான பஞ்சாங்கங்கள்,வித்தியாசமான சாஸ்திரங்கள்,சாஸ்திரிகள்,பல்லாயிரம் சமய போதனைகள், எல்லா மூடப்பழக்கவளக்கங்களை நம் சமயம் சொல்கிறதாய் சொல்லி மக்கள் பழகிவிட்டார்கள். திருந்துவோமா,திருத்துவோமா, அல்லது எழுதியவன் ஒரு நாஸ்திகன் என ஒரு பட்டப்பெயரை சூட்டலாம்.இதை எழுதக்காரணம் சிந்திக்கமட்டுமே செயற்ப்படுத்துவது உங்கள் விருப்பமே.நம்புபவர் நம்பிக்கையுடன் நம்பினால் ஏமாற்றுபவர்கள் ஏமாறுவர்கள் இருக்கும்வரை ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்.     பாலா

One Response to “சாஸ்த்திரம்,குறிப்பு,பொருத்தம்”

  • அன்பான பாலகுமார் அண்ணர் அவர்கட்கு.
    தங்க்ளின் சமூக சேவைகளை கண்டு பலதடவை மிகவும் மகிழ்சி அடைந்தேன். தாங்கள் மிகவும் துணிச்சலுடன் பலகட்டுரைகள் பல உரையாட்ல்கள்.பலமுயர்சிகள் நம் சமூகத்துகாக தாங்கள் நேரத்தையும் சிரமத்தையும் கருத்தில் கொள்ளாது சமூக முனேற்ற சிந்தனையுடன் செயல்படுகின்றீர்கள்.நன்றி தங்கள் சமூக சேவைகள் அனைத்தும் இனிதே நிறைவேற எல்லம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.

    மேலும் தாங்கள் தப்பான சாஸ்திரிகள் பற்ரி ஓர் கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது. இருத்தும் ஓர் சின்ன நெருடல். தப்பான சாஸ்த்திரிகளின் தப்பான சாஸ்திரத்தை வைத்து நீங்கள் சாஸ்த்திரத்தை முளுமையாகத்தப்பு என்று சொல்வதை சிறியேன் மனம் ஏற்க்க மறுக்கின்றது.என்னை விட மிகவும் அனுபவசாலி நீங்கள். சாஸ்த்திரம் பற்றி ஆய்வு செய்திருந்தால் அதை தயவுசெய்து அறியத்தரும் படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். இதில் தப்பேதும் இருந்தால் சிறியேனை மன்னிக்கவும்.
    அன்புடன் நா.சிவாஸ்

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து