உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Unavngivet

12 Responses to “”

 • Babuthurai:

  இல்லை இல்லை எங்கள் தானைத்தலைவன் மாவீரன் ,சூரிய புத்தல்வன் மறைவுக்கு எங்கள் அயல் நாடு இந்திய தான் காரணம் ….ஏன் என்றால் திருப்பதியில் தானே மயகள்வன் கண்ணன் குடிகொண்டு இருக்கிறான் .புரிந்ததால் சரி .

 • vinothiny pathmanathan:

  இதிகாசங்கள் மனிதருக்கான நீதி நெறிகளைப் பின்பற்றி நடக்கவே தோன்றியது என மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், இவற்றையெல்லாம் முற்றிலுமாக மறுக்க முடியாத அளவிற்கு பல ஆதாரங்கள் உள்ளன.இப்போது நாட்டில் முக்கியமான கண்ணுக்கு முன்னே நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்க முடியாமல் இருக்கும் போது கர்ணன் இறந்து போன காரணத்தை தேடி ஒரு விவாத மேடை தற்போது அவசியமா?

  • KUNATHTHILAKAM:

   இப்போது நடக்கும் அநியாயங்களை உறுதிப் படுத்த இப்படியான ஆதாரங்களை அறிந்திருப்பது நல்லதல்லவா !இது விவாதத்துக்கு மட்டுமல்லாது அறிவுக்காகவும் பயன்படும் என நினைக்கிறேன் .எனவே இப்படியான விடயங்களைத் தேவையற்றன என ஒதுக்கிவிடவும் முடியாது .

   • vinothiny pathmanathan:

    உண்மைதான். தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் .என் ஆதங்கம் என்னவெனில் இந்த இதிகாசத்திலேயே எத்தனை வஞ்சகங்கள் ,பொய்கள் .அப்போ நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம் ? இதிகாசங்களிலேயே ஏராளமான நீதியற்ற விடயங்கள் நிகழ்ந்திருப்பதாக இருக்கும் போது சாதாரண மானிடர்கள் நாம் ஏன் தவறு செய்யக் கூடாது?

    ஒரு சிறிய கதை ஒன்று நினைவுக்கு வருகிறது .மகாத்மாகாந்தியும் அவரது நண்பரும் அரிச்சந்திரன் நாடகம் பார்க்க போனார்களாம் .நாடகம் முடிந்து வெளியே வரும்போது அவர்களை கண்ட ஒருவர் இருவரும் அரிச்சந்திரன் நாடகம் பார்த்து விட்டு வருகிறீர்களே ,இதிலிருந்து எதை கற்றுக்கொண்டீர்கள் எனக் கேட்டாராம். அதற்குக் காந்தி சொன்னாராம் எப்போதும் பொய்யே பேசக் கூடாது என்பதைக் கற்றுக் கொண்டேன் என்றாராம். மற்ற நண்பரைக் கேட்க அவர் சொன்ன பதில் ,அந்தரம் ஆபத்துக்கு மனைவியை அடைய வைக்கலாம் என்பதைக் கற்றுக் கொண்டேன் என்றாராம்.இது போன்று தான் இதிகாசங்களும் ,அதன் புரிதல்களும் என நினைக்கிறேன்.

    • KUNATHTHILAKAM:

     வினோ ,உன் அறிவை மெச்சுகிறேன் .நீர் கூறும் காரணம் உண்மைதான் .ஏனெனில் இன்றைய இளையோர் பலர் நாடகங்களிலும் ,சினிமாக்களிலும் வரும் பல நல்ல கருத்துக்களை ஒதுக்கிவிட்டு அதில் வரும் காதல் முறைகளையும் ,சண்டைகளையும் ,களவுகளையும் மற்றும் சமூகம் வெறுக்கும் செயல்களையும் பின்பற்றி வருவதைக் காண்கிறோம் .அதற்க்குக் காரணம் இக் காட்சிகள் பகிரங்கமாக காட்சிப் படுத்தலாலேயே என்பது உண்மை .ஆனால் இக் காட்சிகள் தீயனவற்றை விலக்கி நல்லதைச் செய்யவே காட்சிப் படுத்தப் படுகின்றது .நாம்தான் அதில் தீயவற்றைத் தெரிவு செய்கிறோம் .எனவே நீர் கூறுவது போல் பல வஞ்ச னைகள் சூதுகள் இதிகாசங்களில் காணப்படுவது தவறைச் சுட்டி நேர் வழியைக் காட்டவே .
     நான் எனது சேவைக்காலத்தில் ஏற்ப்பட்ட ஒரு அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன் .நான் முரசுமொட்டையில் ஒரு பாடசாலையில் கற்ப்பித்த காலத்தில் ஒரு நாள் பாடசாலையில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடைபெற்றது .அக் கூட்டம் பாடசாலை வகுப்பறை ஒன்றினுள்ளேயே நடந்தது .அங்கு முதல் நாள் ஒரு ஆசிரியை கற்பிக்கும்போது கரும் பலகையில் எழுதியிருந்த பண்டி என்ற சொல் அழிக்கப் படாது இருந்தது .இதைப் பார்த்த ஒரு பெற்றார் ஆசிரியரில் பிழை பிடிப்பதற்காக அச் சொல்லை மற்றவர்களுக்குக் காட்டி இப்படி ஆசிரியர் பிழையாகப் படிப்பித்தால் எப்படி எம் பிள்ளைகள் முன்னேறுவது என்று ஒரு பெரும் பிரச்சனை ஆக்கினார் .இருந்தவர்களும் அதை ஆமோதித்து அந்த ஆசிரியரைக் குறை கூறினார் .அந்த ஆசிரியர் பேசாது இருந்தார் .ஆனால் அதிபர் சமயோசிதமாக “பெர்யவரே அது பிழை எனத்தான் எழுதப் பட்டுள்ளது ,பிழையை எழுதித்தான் சரியை எழுதிப் படிப்பிக்கும் முறையும் கற்பித்தல் முறையில் உள்ளது .நீங்கள் தான் இதைப் புரியாது பெரிது படுத்துகிறீர்கள் “என விளக்கினார் .எல்லோரும் ஒத்துக் கொண்டனர் .

     (ஆனால் இதைக் கற்ப்பித்த ஆசிரியர் அந்தக் கேள்வி கேட்டவரின் மகள் என்பது குறிப்பிடக் கூடியது .அடுத்தநாள் பாடசாலையில் நான் சும்மா அந்த வகுப்பறையில் மாணவர்களுடன் இதை அளவளாவலாம் என எண்ணி பண்டி என்ற சொல்லைப் பற்றி ஆராய்ந்தேன் .அங்கு ஒருவரும் பன்றி எனக் கூறவில்லை .எனவே ஆசிரியர் பிழையாகவே கற்பித்தார் என்பதே உண்மை .நான் அந்த ஆசிரியரைப் பிழை சொல்லவும் முடியாது அதிபரிடமும் உண்மையைக் கூறவும் முடியாது அதே வேளை மாணவர்கள் பிழையாக அச் சொல்லைக் கடைப்பிடிக்க வும் கூடாது என்பதற்காக பன்றிக் குட்டிகளுக்கு சிவபெருமான் பால் கொடுத்த கதையை அவர்களுக்குக் கூறி அவர்களைத் திசை திருப்பி சரியான சொல்லை உணர்த்தினேன் .இது எனது உண்மைச் சம்பவம் .)

     எனவே இதிகாசங்களில் வரும் அத்தனை சம்பவங்களுக்கும் அர்த்தம் உள்ளது .வாழ்க்கையி இப்படியான மனிதர்களை நாம் காணவில்லையா ?இவர்களை நெறிப்படுத்தவே இதிகாசக் கதைகள் .

 • kapildev:

  இது ஒரு கட்டுக்க்கதை இதை விவாதிப்பதில் ஒரு பலனும் இல்லை. இந்த நவீன உலகில் இதை யார் நம்புவர் இதில் கூறப்பட்ட கர்ணன் பிறந்த விதத்தினை எந்த மடையார் நம்புவர். இவர்கள் எய்தும் அஸ்திரங்கள் எதிரியை சுற்றி பார்த்துவிட்டு திரும்பி வருகிறது இது மிசைல் ச்டர்வர் விட பலம் மிக்கது இதை வாசிப்பது வீண் மினைக்கேடு .

  • nakkeeran:

   ஐயா ,கபில்தேவ் அவர்களே ,மகாபாரதம் மனிதரை நெறிப் படுத்த எழுந்த கதையே அன்றி உண்மைக் கதியென்று யார் சொன்னார் ?

   • kapildev:

    ஐயா நக்கீரன் அவர்களே இளம் வயதில் மாணவர்களுக்கு இதை கட்டுகதை என்று சொல்லி கற்பிப்பது இல்லை இதை நிஜம் என்று கூறி மாணவர்களை இதில் சூது, வாது, பொய், வஞ்சகம், சகோதர பிரிவு பொறாமை இவற்றை தான் விளக்குகிறார்கள். இது தேவையா. இந்த அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இளம் சமுதாயத்திற்கு இப்படியா கட்பிகிரார்கள்.

    • nakkeeran:

     இது கட்டுக் கதையானாலும் இன்றும் பலர் இதை உண்மைக் கதையாகவே நம்பிக் கடைப் பிடிடிக்கிரார்கள் ,இதனால் நீதி சாகாது உயிர் வாழ்கிறது .நீங்கள் கூறுவதுபோல் இன்றைய குட்டிச் சுட்டிகளுக்கு இப்படியான கதைகளை கூறுவது கஷ்டம் .இருந்தும் இவற்றையும் பஞ்ச தந்திரக் கதைகளையும் கூறப் பட்டுக் கொண்டே வருகிறது .அவர்களும் ஆர்வமுடன் கேட்பதைக் காணமுடிகிறது .தமிழே கற்க விரும்பாத புலம்பெயர் சாதி இவற்றை வெறுப்பது வியப்பில்லை .

 • மாவீரன் கர்ணனின் மரணத்திற்குக் காரணம் அமெரிக்காதான்.அமெரிக்காவின் முழுச்சதியால்த்தான் கர்ணன் கொல்லப்பட்டான்.அன்றைய காலங்களில் அமெரிக்காவின் புலனாய்வுத் துறைக்குப் பொறுப்பாகச் செயல்பட்டவர் எங்கள் கண்ணன்தான்.

  • Aruchunan:

   இந்த கெங்கவிட்கு அமரிக்கா என்றாலே அலர்ஜி.அந்த காலத்தில் அமரிக்காவை விட யப்பான் முன்னின்றது. இது யப்பான் விட்ட தூது.

 • kunathilagam santhai:

  என் பார்வையில் இங்கு மூவருக்கும் பங்கு உள்ளதாகவே தெரிகிறது .அருச்சுனன் கர்ணன் வில்லால் இறப்பான் என்ற உண்மை கண்ணனுக்கே தெரியும் .அப்போ தன எண்ணம் ஈடேறா என்ற கண்ணனின் நோக்கம் அருச்சுனனைக் காக்க வேண்டும் .இதனால் அவன் குந்தியிடம் கர்ணன் குந்திமகன் என்ற உண்மையை வெளியிட்டு குந்திமூலம் கர்ணனிடம் வரம் பெறுகிறான் .இது கர்ணனின் முதல் சூழ்ச்சி .அடுத்து போரில் அருச்சுனனின் தேரைப் பதித்து நாகாஸ் திரத்தை செயலிழக்கச் செய்கிறான் .அடுத்து கர்ணனின் தேரைப் புதைத்து கர்ணன் நியாயம் கூறவும் கேட்காது போர் முறை தவறி நிராயுதபாணியாக நிற்கும் கர்ணனில் அம்பெய்யத் தூண்டுகிறான் .இது கன்னநின்பங்கு .
  குந்தி கர்ணன் தன மகன் எனத் தெரிந்தும் அர்ருச்சுனனால் கர்ணன் அழிவான் எனத் தெரிந்தும் கண்ணனின் சூழ்ச்ச்சிக்குட்பட்டு கர்ணனிடம் வரம் வாங்குகிறாள் .குந்தி கர்ணனும் தன்மகனே என எண்ணியிருந்தால் கர்ணனுக்கு மரணம் ஏற்ப்படாது .
  அருச்சுனனுக்கு கர்ணன் தன அண்ணன் எனத் தெரிந்தால் அவன் கர்ணன் மீது அம்பெய்யான்.அதற்க்காககர்ணன் குந்தியிடம் அந்த உண்மையை அருச்சுனனுக்குக் கூற வேண்டாம் என்ற வரத்தை வேண்டுகிறான் .குந்தி அதற்க்கேற்ப்ப இறுதிவரை அதை வெளியிட்டாது காக்கிறாள் .இருந்தும் அருச்சுனன் போர் முறை தவறிக் கர்ணன் மீது அம்பெய்தமையே கர்ணனின் மரணத்துக்குக் காரணம் .
  இது ஒரு தர்ம யுத்தம் என்பதால் இவை நியதிக்குட்பட்டதாகும் .மற்றும் உலகை நெறிப்படுத்த எழுந்த போரானதால் இங்கு நீதி அநீதிகளைக் காட்டப் பட்டுள்ளது .

Leave a Reply for Aruchunan

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து