உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

imagesயாழ் திருநெல்வேலி சந்தியில் உள்ள தனியார் வங்கியொன்றின் இலத்திரனியல் இயந்திரத்தில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 

குறித்த நபர் இலத்திரனியல் இயந்திரத்தை உடைத்து 40 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக தெரியவருகின்றது.பணத்தை கொள்ளையிட்ட பின்னர் இயந்திரத்தை பொருத்தும் போது இயந்திரத்தின் அபாய எச்சரிக்கை ஒலித்ததாகவும்,

இதனையடுத்து இயந்திர அறைக்கு விரைந்த வங்கி முகாமையாளர் மற்றும் காவலாளி ஆகியோர் குறித்த நபரை பிடிக்க முற்பட்ட போதும் சந்தேக நபர் தப்பியோடியதாகவும் வங்கி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரின் முதுகுப்பை மற்றும் மோட்டார் சைக்கிள் சாவி என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், கொள்ளையிட்ட நபர் விட்டுச் சென்ற சாவிக்குரிய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட அவரது முதுகுப்பையினுள் வேறு சில இலத்திரனியல் அட்டைகளும் இருந்ததாகவும், சம்பவம் தொடர்பாக வங்கிக்கு அருகில் உள்ள கடையொன்றின் கண்காணிப்பு கமரா மூலம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு மற்றுமொருவர் உதவி செய்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து