உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

நல்லூர் வீதியில் 12 நாட்கள் நீராகாரம் கூட அருந்தாது உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த திலீபனுக்கு பிரான்சில் சிலை அமைக்கப்பட்டுள்ள விடயம் திவயின சிங்களப் பத்திரிகை நிறுவனத்துக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.பிரான்சின் தலைநகர் பாரிசில் அந்தஜோய் எனப்படும் பிரதேசத்தில் திலீபனுக்கான சிலை நிறுவப்படவுள்ளது. இதற்கு பிரான்ஸ் அரசாங்கமும் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தவிடயம் திவயின பத்திரிகை நிறுவனத்தின் ஆத்திரத்தைக் கிளறிவிட்டுள்ள நிலையில், திலீபனுக்கு சிலை அமைக்கப்பட்ட விடயத்தை காரசாரமாக விமர்சித்து செய்தியொன்றை திவயின பத்திரிகை பிரசுரித்துள்ளது.

இவ்வாறு சிலை அமைக்க அனுமதி அளித்ததன் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பிரான்சிய அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக குறித்த செய்தியில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு பிரான்சில் சிலை வைக்கவும் அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியிருப்பது குறித்தும் திவயின செய்தியில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து