உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

imagesதேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நிபுணர் குழு ஒன்றை உருவாக்கவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.தமிழ் மக்கள் பேரவையின் 2 ஆவது அமர்வு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.இதன்போதே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நிபுணர் குழு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை ஒழுங்கமைப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமர்வில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வுத்திட்டத்தை தயாரிக்கும் நிபுணர்கள் குழு உருவாக்கப்பட்டு நிபுணர்கள் அறிவிக்கப்படுவதுடன், ஜ.நா தீர்மானம் நடைமுறைபடுத்தப்படுவதை அவதானிக்கும் குழு மற்றும் தமிழ் மக்களின் கலை, கலாசார விடயங்களை கண்காணிப்பதற்கான குழுக்கள் உருவாக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை நடைபெறும் அமர்வில் அந்த அமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கலந்துகொள்ள மாட்டார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து