உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

accident_batty_001மட்டக்களப்பில் நத்தார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த குடும்பமொன்று பயணம் செய்த முச்சக்கர வண்டி மட்டக்களப்பு வாவிக்குள் பாய்ந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பிய நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

நேற்று மாலை மட்டக்களப்பு நகரில் இருந்து குடும்பத்துடன் சென்ற முச்சக்கர வண்டி மட்டக்களப்பு நகர் புதுப்பாலத்தில் பாலத்தில் நீருக்குள் பாய்ந்துள்ளது.

இதன்போது குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் துரிதமான மீட்பு பணியில் ஈடுபட்டு குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களை மீட்டுள்ளனர்.சம்பவத்தின்போது முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு பெண் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் சாரதி ஆகியோரை மீனவர்கள் மீட்டுள்ளனர்.

புதுப்பாலப்பகுதியில் முறையான வாவியோர பாதுகாப்பு தடுப்பு இல்லாத காரணத்தினால் குறித்த பகுதியில் விபத்துகள் நடைபெற்றுவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் முச்சக்கர வண்டியை மீட்டதுடன் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து