உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

45 Responses to “”

 • urimai:

  மன்றத்தை ஆள புலம்பெயர் வாழ் மக்களே வரி கட்டினீங்களா?
  என்றாலும் அந்த அழ என்பவரது பெயருக்கு உள்ள நல்ல பெயரை மாசு படுத்தும் அழவுக்கு பகீர் திகீர் என கருத்தை அள்ளி மாசுபடுத்துகிறார்.மன்றத்தில் வேர்வையை பணமாக்கி அள்ளி வழங்கிய கொடையாளிகளே உங்களது உதவிகளை பெறாமல் தங்களால் மட்டுமே கட்டி ஆள்வதாய் பகீர் பகிர்கிறார்.இவர் பல சந்தர்ப்பங்களில் பல கருத்தாடல்களில் நான் என்ற அகங்காரத்துடன் கருத்தாடல் செய்வதை இணையங்களிலும் முகப்பக்கங்களிலும் அவதானிக்கலாம்.இவரது கருத்தின் விளைவும் பலனும் எனிமேலும் மன்றத்துக்கு நிதி வளங்குவதை நிறுத்தவேண்டும் என பகிர் கூறுகிறாரோ?

  • ஒருவன் ????::

   தயவு செய்து திருந்த முயற்சி செய்யுங்கள்…..

   முதலில் படித்தவர்கள் நிங்கள் திருந்துங்கள்…

   புலம்பெயர் நாட்டில் உள்ளவர்கள் உங்களை

   விட உலகத்தை நன்கு படித்தவர்கள்….

   அவர்கள் இல்லாது விட்டால் உங்கள் நிலை ??????

   • ஊர்விழும்பி:

    கல்வி மேலாளர்கள் என தம்மை தாமே அடையாளப்படுத்துபவர்கள் எல்லோருமே கல்வியாளர்களாக முடியாது.கல்வி என்பது கற்றதை நன்மயப்படுத்தலை நோக்கி நகர்த்துபவனே சிறந்த கல்வியாளன்.இதே கல்வி கவிதைகள்,கதைகள்,கருத்தாடல்களோடு மட்டும் மட்டுப்படுத்தி பொதுநிறுவன நிர்வாகிகளாக மட்டும் அடையாளப்படுத்துபவர்கள் எல்லாருமே பொதுநலவாதிகளாவர்கள் என நினைத்தால் அது அவர்களது அறியாமையாகும்.இன்றைய புலம்பெயர் ஊரவர்களது வாரிசுகள் பெரிய கல்வியாளர் சமுதாயமாக மாற்றமடைகின்றது.இவர்கள் மண் நோக்கி பயணிக்கவைக்கவேண்டுமானால் மண்ணின் மைந்தர்களாய் தங்களுக்கு தாங்களே மாலையும் பொன் ஆடையும் அணிந்து திரிபவர்கள் தங்களது தவறுகளையும்,கல்விமான்கள் என்ற உடையையும் களற்றி எறிய முனையவேண்டும்.இந்த காலணிக்கு உரியவர்கள் தமக்கு அளவானால் அணியுங்கள் இல்லையேல் அளவானவர்களை அணிந்து தொடர்ந்து பயணிக்கவிடுங்கள்.காலணிகள் தொடந்து குடைச்சலை தரும்.

 • paramakuru panippulam:

  அனைத்து அபிமானிகள், அனைத்து உபகாரர்கள், அனைத்து தொந்தரவாரர்கள், பொது உடமைகளின் ஆட்சியாளர்கள் ஒரு பொதுவன கருத்து மட்டுமே.அவரவர் கால்களின் அளவுக்கே அகட்டவேண்டும் இல்லை நான் அகலத்தான் அகட்டுவன் எண்டு அகட்டியவர்கள் கெதி தெரியாதா? சொத்துக்கும்,பதவிகளுக்கும் பினாமிகள் இருப்பது உண்டு. ஆனால் அற்ப்புதமான அறப்புத எழுத்துக்களுக்கு அற்புதரே உரிமையும் பாராட்டு பெறுவதும் இணையங்களின் வாசகர்களுக்கு விளங்காமையும் இருக்கலாம்.பதவிகளை பாமர மக்களது தேவைகளுக்காய் பயன்படுத்துபவர்கள் துரகிகளாகமுடியாது.எல்லைகளை தமக்கு தாமே வகுத்து நம்பகச்சொத்து எனும் போது அதில் பயனாளிகளே இருக்கமுடியும் இலங்கைத் திருநாட்டில் இருக்கும் எவரும் இச்சொத்தை தகுந்த முறையில் பயன்படுத்துவதற்கு நம்பகப் பொறுப்புச் சபை என்றும் ஒத்திசையும் இருக்கமுடியுமானால்.அன்ரி கூட ஒரு காலத்தில் உங்கள் பார்வையில் எப்படி என நினைத்தாலே பயமாக உள்ளது.ஒரு சில மாதங்களுக்கு முன் அமரராகிய கந்தையா பரமானந்தம் அவர்களது நினைவு அஞ்சலியை ஞாபகமுண்டா.இவரது மூத்த மகளது இறப்பால் வந்த பணத்தில் மன்றத்தில் பாரிய கட்டிடம் உண்டு.ஆனால் இவர் ஒரு நிரந்தர வாசகர் என மட்டுமே நினைவு அஞ்சலியில் துயர் பகிரப்பட்டது.கவி அவர்களே புலத்தில் பலரது வேர்வைத்துளிகளின் மறு உருவமே இன்றையமன்றம் ஆகவே இவை அனைவரையும் தூக்கி எறிய முனைவதுபோல் கருத்துரைதல் உங்கள் கவிக்கும் எதிர்கால வளர்பிறைகளை தேய்பிறையாக மட்டுமே மாற்றத்தூண்டுகிறீர்கள்.

 • ஒருவன் ????:

  தம்பி பகீ நீர் கீ கீ கீ என்பதில் தெரிகிறது பயம்.அது
  வந்து விட்டாது உமது சட்ட ஆலோசகருக்கூறவும்
  மிகவிரைவில்

  ம ம மன்றத்தை புட்டுவதற்கு
  நல்ல பூட்டை வேண்டி வைக்கவும்.
  காரணம் எத்தனைவருடம் பூட்டுவது என்பது
  நிதிமன்றம் தான் முடிவெடுக்கும். நன்றி

 • nakkeeran:

  நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்களா என முதலில் தீர்மானித்துக் கொண்டு எமது ஊரை நேசியுங்கள் .

  • பண் மக்கள் ஒன்றிய அங்கத்தவரில் ஒருவன்:

   இவர்கள் உத்தமர்கள் இல்லை ஊரில் உள்ள

   பொது இடங்களை தங்கள் பெயரிற்கு

   மாற்றும் உணம் உற்றவர்கள் ……..

   இப்படியான ஊணம் உற்ரவரை மதித்தாது

   புலம்பெயர் மக்களை எதல் அடிப்பது ?????

 • sasikaran:

  ஊரில் இருந்து கிடைத்த சில உண்மைத் தகவல்களை பகிர்கின்றேன். இந்நிலயத்தில் 200 பேர் படிக்கிறார்கள் என்பது பொய்யாம். 80 பேர்தானாம் படிக்கிறது. பிழையான ஆசிரியர்களால் 2014 ஓ எல் கணக்கிலை இஞ்ச படிச்ச கன பிள்ளையள் பெயிலாம் மூன்டு நாலு பேர்தான் ஓயெல் பாசாம். மன்றம் இதை நடத்திறவரிட்ட கணக்கறிக்கை கேட்டதாலை தானாம் அவர் மன்றத்தை விட்டு வெளியேறினவர். மன்றத்தாலை ஒருத்தரும் இந்தப் படிப்பை வெளிக்கிடச் சொல்லிச் சொல்லேல்லையாம். பள்ளிக்குட நேரத்திலை பிள்ளையளைப் பள்ளிக்கூடம் போகவிடாமல் மறிச்சதாலை ஆறுமுக வித்தியாலையப் பிறிஞ்சிப்பல் டிஎஸ் இட்ட முறைப்பாடு சொல்லித்தான் பிள்ளையளைப் பள்ளிக்கூடம் வரப் பண்ணிணவராம்.

  • இளைஞன்:

   சசிகரன் உங்களின் ஊமைத்தகவல்களிட்க்கு நன்றி

   நாங்கள் பலமுறை ஊர் சென்று நேரடியாகப் பார்த்தோம்
   . புலம்பெஜர் நாட்டில் இருந்து சென்று பார்த்து வந்து பலரும் நன்றாக பாரட்டியுள்ளர்கள்
   ol படித்து பாஸ் பண்ணின பிள்ளைகளின் படங்கள் நீங்கள் பாக்கவில்லைய மன்றம் கணக்கு கேட்டு பிரச்சனை பண்ணவில்லை தங்களிடம் தரச்சொன்னத்தால் தான் பிரச்சனை மன்றத்துக்கு கணக்கு காட்டவேண்டிய அவசியம் பண் கல்விக்கூடத்திற்கு கிடையாது
   இங்கே மாலை நேரத்தில் தான் வகுப்புக்கள் நடைபெறுகின்றது இது குழப்புவதட்க்காக உங்களுக்கு மன்ற விசுவாசி தந்த கருத்துக்களே …………………….. .
   தயவு செய்து அடுத்தவரின் கததையை முழுதாக நம்பி ஏமாறதிர்கள் சுஜமாக நேரில் அறிந்து செயற்படுங்கள்
   நன்றி

 • அ. பகீரதன்:

  நம்பகச் சொத்தாக மன்றம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

  • பண் இளைஞன்:

   வணக்கம் அண்ணன் அ. பகீரதன் அவர்களுக்கு எனது முதற் கண் வணக்கம்.

   நம்பகச் சொத்தாக மன்றம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

   இந்த பிரகடனம் தற்போது செய்யவேண்டிய அவசியம் எதற்க்கு ?

   இந்த பிரகடனம் செய்யச்சொல்லி உங்களுக்கு முன்மொழிந்தவர்கள் யார் ?

   • அ. பகீரதன்:

    மன்றத்தை பாதுகாக்கின்ற பொறுப்பும் பராமரிக்கின்றபொறுப்பும் உடைய நாற்பதுவருடங்களாக அதனை சமூக நோக்கோடு அமைத்துவருபவர்கள் தான் முன்மொழிந்தார்கள்

 • அ. பகீரதன்:

  உருப்படியாக இயங்கக்கூடிய ஒரே ஒரு அமைப்பாக இன்று விளங்குவது காலையடி மறுமலர்ச்சி மன்றம் ஆக இருக்கின்றது. அவர்கள் இப்போது மன்றத்திற்கான ஏழுபேர் கொண்ட நம்பகப் பொறுப்புச் சபை ஒன்றை அமைத்துச் செயற்படுகின்றார்கள். தலைவர் செயலாளர் பொருளாளர் மேலும் ஐவர் இவர்கள் சு சுந்தரசிவம், கோ சுதாகரன், ந சுப்பிரமணியம், சு யாதவன் ச தனுஜன் சோ தேவராஜா அ பகீரதன். இவர்கள் ஆயுள் பூராவும் அவர்கள் விரும்பி விலகினாலோ அல்லது வெளிநாடு ஒன்றுக்கு சென்றால் ஒழிய இதன் நம்பகப்பொறுப்பாளர்களாக இருப்பார்கள். புதிதாக ஒருவரை நம்பகப் பொறுப்பாளராக இணைந்து கொள்ளவேண்டும் என்றால் அது இந்த ஏழுபேரும் சம்மதத்தின் பேரில் தான் சேர்த்துக்கொள்ளமுடியும். எனவே சுவிஸ் பண் மக்கள் ஒன்றியத்திற்கு மன்ற நிர்வாகம் மாறும் என்ற சந்தேகங்கள் தேவையில்லை கிராம முன்னேற்றம் கருதி எமது கிராமத்தின் எல்லாப்பகுதியையும் உள்ளடக்கிய இந்த ஏழுபேரையும் பயன்படுத்தி நாளைய சந்தத்தியை நல்லமுறையில் வழிநடாத்த சுவிஸ் பண் கல்விக்கூடத்தை உடனடியாக மன்றத்திற்கு மாற்றுவதற்கு சுவிஸ் பண் மக்கள் ஒன்றியம் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக தொலைத்தொடர்பு அல்லது வீடியோ தொடர்பு மூலம் இன்றே தொடர்புகொள்ளுமாறு வேண்டுகின்றேன். இதைப்பார்க்கும் பெற்றோருக்கு, மன்றம் என்றும் உங்கள் பக்கமே இருக்கின்றது. கற்பிக்கும் ஆசிரியர்களிடம் சொல்லுங்கள் சுவிஸ் பண் மக்கள் ஒன்றியம் மன்றத்திற்கு உடனடியாக மாற்றிக்கொள்ள சம்மதிக்காத பட்சத்தில் மன்றம் இந்தவகுப்புக்களை சிறப்பான முறையில் நடாத்த சித்தமாக இருக்கும். எனவே ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்காது என்று குழம்பாமல் நாளையிலிருந்து மன்றத்தில் தொடர்புகொண்டு மன்றத்தில் படிப்பிக்க முடியும். ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களான உங்கள் பிள்ளைகளுக்கும் என்றென்றும் உறுதுணை நிற்க சித்தமாக உள்ளார்கள்.

  • vasan-canada:

   எழுத்தாளர் அ. பகீரதன் அவர்களுக்கு வணக்கம்

   1 .உருப்படியாக இயங்கக்கூடிய ஒரே ஒரு அமைப்பாக இன்று விளங்குவது காலையடி மறுமலர்ச்சி மன்றம் ஆக இருக்கின்றது.—-ஊருக்குள் பிளவை மேலும் விரிவடயசெய்துள்ளது உங்கள் கருத்து. ஒருவருக்கு மதிபளித்தால் தான் மற்றவர்களும் உங்களை மதிப்பார்கள் நீங்கள் ஒரு ஆசான் ஆகா இருந்துகொண்டு இப்படி எழுதியது தவறே …….

   2. நம்பகப் பொறுப்புச் சபை ஒன்றை அமைத்துச் செயற்படுகின்றார்கள். தலைவர் செயலாளர் பொருளாளர்———–இந்த மன்ற நிர்வாகசபை எந்த பொதுக்கூட்டத்தில் எப்போது தெரிவு செய்யப்பட்டது

   3. நம்பகப் பொறுப்புச் சபை ஒன்றை —- இது தற்போது அமைக்கப்படவேண்டிய தேவை
   என்ன ??
   4.சுவிஸ் பண் மக்கள் ஒன்றியத்திற்கு மன்ற நிர்வாகம் மாறும் என்ற சந்தேகங்கள்
   தேவையில்லை —-சுவிஸ் நாட்டில் உள்ள பண் மக்கள் ஒன்றியத்தினர் உங்கள்
   நிர்வாகத்தை மாற்றச்சொல்லி உங்களிடம் அதிகரபூர்வமாக்க கேட்டார்கள ??

   5.கிராம முன்னேற்றம் கருதி எமது கிராமத்தின் எல்லாப்பகுதியையும் உள்ளடக்கிய இந்த
   ஏழுபேரையும் —–ஒவ்வொரு கிராமத்திலும் இருந்து அந்த கிராம மக்களால் தெரிவு
   செய்யப்பட்டவர்களா இவர்கள் ??? எப்போது ?
   6. நாளைய சந்தத்தியை நல்லமுறையில் வழிநடாத்த——–இன்றைய சந்ததிஜினரின் நிலை ?

   7.சுவிஸ் பண் கல்விக்கூடத்தை உடனடியாக மன்றத்திற்கு மாற்றுவதற்கு சுவிஸ் பண் மக்கள்
   ஒன்றியம் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக தொலைத்தொடர்பு அல்லது வீடியோ தொடர்பு
   மூலம் இன்றே தொடர்புகொள்ளுமாறு வேண்டுகின்றேன்———–இத் தகவலை மன்றம்
   அதிகரபூர்வமாக்க அறிவிக்கும் முறையா இது ?

   8. சுவிஸ் பண் கல்விக்கூடத்தை ——-தவறான விளக்கம் —————————சரியான பதில் –
   “” பண் மக்கள் இலவச கல்விக்கூடம் “”(எமது ஊர் மக்களின் இலவச கல்விக்கூடம் )

   9.மன்றத்தில் தொடர்புகொண்டு மன்றத்தில் படிப்பிக்க முடியும்.———இவ்வளவு காலமும்
   அந்த ஆசிரியர்களை படிப்பித்தல் முறைஜை பிழை எனக் சொன்னீர்கள் ..இப்போது ?

   இதற்கான பதிலை உங்களிம் இருந்து எதிபார்க்கின்றேன்

   நன்றி வணக்கம்

   • அ. பகீரதன்:

    இதற்கு பதில் எழுதுவதற்கு முதல் நீங்கள் யார் என்பது எனக்கு தெரியவேண்டும்
    பதில்..பதிலுக்கு பதில் என்று எழுதும் நோக்கில் நான் இதில் எழுதவேண்டிய அவசியமில்லை. அவ்வாறாக எழுதுவதற்கு நான் பணியெதுவும் செய்யாமல் இருப்பவனுமல்ல இத்தகைய தகவல்களை நான் எப்போதாவது தான் பார்ப்பதுண்டு. நான் திரும்பத்திரும்ப உங்களுக்கு சொல்வது என்ன என்றால் நீங்கள் நினைக்கின்ற மாதிரி மன்றத்தை உருவாக்கியது பொதுமக்கள் அல்ல.அது எப்படி தோன்றியது என்பதற்கு வரலாறு இருக்கின்றது. அந்த முன்னோடிகள் தான் தீர்மானிக்கமுடியுமே ஒழிய பொதுமக்கள் அல்ல. இது எந்த ஒரு சங்கத்திற்கும் பொருந்தும்.
    நிற்க இப்படியொரு மாற்றத்தை அபிவிருத்தியை இலங்கையில் எங்காவது ஒரு இடத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் யாராவது நிகழ்த்திக்காட்டியிருக்கின்றார்களா. இந்த அபிவிருத்தி நிலைக்கவேண்டும் என்பதற்காக தான் இந்த நம்பிக்கை பொறுப்புச் சபை. வெளிப்படையாக பேசுவதற்கும் வெளிப்படையாக கை குலுக்குவதற்கும் வெளிப்படையாக பாராட்டுவதற்கும் நல்லமனம் வேண்டும் திறந்த மனம் வேண்டும். நீங்கள் கேள்வி கேட்பதற்கும் நான் பதில் கூறுவதற்குமான காலம் அல்ல இது. நாம் தலைநிமிர்ந்துள்ளோம் என உரத்து உரைக்கும் காலம்

    • பண் மக்கள் ஒன்றிய அங்கத்தவரில் ஒருவன்:

     இப்படியொரு களவை இலங்கையில் எங்காவது ஒரு இடத்திலும்
     ஏதாவது ஒரு கிராமத்தில் யாராவது நிகழ்த்திக்காட்டியிருக்கின்றார்களா.????

     இல்லாவே இல்லை

     நம்பிக்கை பொறுப்புச் சபை. என்ற பெயரில் எமது விளையாட்டு திடலை தங்கள் பெயரிற்கு மற்றியதை ….. தலை நிமிர்ந்து உரத்து உரைப்பவர்களை
     பார்துக்கொண்டு இருப்பவர்களும் எமது கிராமத்தில் தான் இருக்கிறர்கள்…..

     என்பதும் உண்மைதான் ….. பகீ

    • canada vasan:

     வணக்கம்

 • vaasakan:

  அற்புதனின் அனைத்து கருத்துக்களும் யதார்தமானதும் உண்மையானதும் .
  நன்றிகள் அற்புதன். ந்ல்லமுறையில் தெளிவாக கருத்து தெரிவித்தமைக்கு மேலும்,
  அன்பான ஊர் உறவுகளே விதண்டாவாத கருத்துக்களால் விளைவது வீணான பகைமைகளும்
  ,பிரிவுகளும் நீங்கள் ஊருக்குள் விளைவிப்பது நிரந்தர பிரிவுகளும் , முரண்பாடுகளும், முட்டுக்கட்டையும்என்பதை மறந்து விடாதீர்கள்.
  தயவு செய்து நான் சொல்வதை நம்பாது நீங்கள் ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்ற‌வும்.

  .

  • vasan:

   வணக்கம் விசாகன் அவர்களே

   விதண்டவாத கருத்துக்களை முன் வைபவர்கள் ஜார் . இன்றைக்கு ஊரில் உள்ள 8 அமைப்புகளில் இன்று பிரிந்தது நின்று செயற்படுவது ஜார் மற்றைய 7 அமைப்புகளும் ஒற்றுமையாகத்தான் செயற்படுகின்றது இதை அண்மைகாலங்களில் நடந்த நிகழ்சிகள் எடுத்துக்காட்டுகின்றன எதையும் ஆழமா ஆராய்ந்து கருத்துக்களை எழுதவும்

   நன்றி விசாகன் அவகளுக்கு .

   • அ. பகீரதன்:

    ஒற்றுமையாக இயங்குவதற்கு ஏன் ஏழு அமைப்புக்கள். மறுமலர்ச்சி மன்றம் தன்னளவில் தோன்றி தனித்து இயங்ககூடிய ஆற்றல் இருப்பதால் அது ஏனைய அமைப்புக்களை அண்டி அவற்றின் அடிவருடி நிற்கவேண்டிய அவசியமில்லை. ஏழு அமைப்புக்களும் பிற்போக்காக இருப்பதற்காக மறுமலர்ச்சி மன்றம் பிற்போக்காக போக முடியாது. முற்போக்காக இயங்கி வடமாகாணத்திலே பலகிராமங்களிலும் முற்போக்கு நாடகங்கள் மேடையேற்றி பெயர் பெற்ற அமைப்பு ஏன் ஊரிலுள்ள மற்றைய அமைப்புக்களை நாடவேண்டும்.

 • எம்மூர் சிறார்களின் வளர்ச்சிக்காக ஐநூறு மாணவிகளுக்கும் மேலாக கல்வியை கற்கும் அளவுக்கு மிகப் பெரிய நவீன வசதியுடன். புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எம் ஊர் சமூக நலன் விரும்பிகள் மனங்களில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ள.மறுமலர்ச்சி மன்றம் அமைந்துள்ளது. என்பதை உணர்ந்தவர்கள் எத்தனை பேர்?

  ஊர். மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தி, நம்மூருக்குள் பல திறமையான மாணவர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள. பண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின். செயல்ப்பாடுகள் இன்று வரை. வரவேற்கப்படவேண்டியது. இனி முன்னேடுக்கப்போகும் கட்டிட திட்டங்கள் மட்டும் பாராட்டக் கூடிய விஷயமும் அல்ல. இத்திட்டம் வெற்றறிகரமாக செயல்பட வேண்டுமென்று வாழ்த்தக் கூடிய விஷயமும் அல்ல.

  ஏனென்றால். எம்மூர் இளைஞர்களுக்கு இடையே. வேற்றுமை என்ற பகையுணர்ச்சி விரிந்து. எங்கள் கிராமத்தின் மீது சிறிதும் அக்கறையின்றி. தங்களுக்குள் வேறுபட்டு ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு எம்மூர் இளைஞர்கள் முயன்று கொண்டிருக்கின்றனர்.ஏற்கனவே பிளவு பட்டு கிடக்கும் எமது இளைஞர்களை பண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின். இத்திட்டம் மேலும் பிளவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே மேற்கூறப்பட்டுள்ள இத்திட்டம் கூட ஒரு வகையில் பழிவாங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமே..!

  • அபிமானி:

   மிகவும் யதார்த்தமான வகையில் எல்லோரும் புரிந்து கொள்ளும்படி விளக்கமாக தனது கருத்தினை வெளிப்படுத்திய அற்புதன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.விதண்டாவாதமும்,வீண் விரயங்களையும் செய்வதை விடுத்து நாளைய எம் சமுதாயத்தின் நலனை முன்னிறுத்தி ஊருக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எல்லோரும் ஒற்றுமையாக வாழ வழி செய்யுமாறு உரிமையுடனும்,பணிவுடனும் கேட்டுக்கொள்கிறேன்.இலவச கல்விச் செயற்பாடுகளை மறுமலர்ச்சி மன்றத்தில் நடாத்தி அதன் மூலம் ஒற்றுமைக்கு வித்திடுங்கள் என மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கின்றேன்.

   • பண் இளைஞன்:

    இதை நீங்கள் நடுநிலை நின்று முன் எடுத்துச் செல்வீர்களா ??

    இதற்கான முஜர்ச்சி பலமுறை மேற்கொண்டும் பஜனளிக்கவிலை . காரனம் நாங்கள் அதன் அங்கத்தவர்கள் இல்லையாம்

  • வாசன்:

   வணக்கம் திரு அற்புதன் அவர்களே !

   உங்களின் கருத்துக்கள் பலவற்றை சில காலம் தொடர்ந்து பார்த்திருக்கின்றேன் நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளர் உங்களின் மனதில் பட்டத்தை அப்படிஜே எழுதுகிறீர்கள் .அதற்கு இங்கு உங்களுக்கு சுதந்திரம் இருக்கின்றது .ஆனால் அந்த சுதந்திரத்தினை நீங்கள் தவறாக பயன்படுத்துகின்றீர்கள் இதுவரை காலமும் நான் பார்த்தவரையில் உங்கள் கருத்துக்கள் ஒருதலைபச்சமகத்தான் அமைகின்றன.. பொதுநோக்கம் கொண்டதாக அமையவில்லை ஏன் ? எதற்காக ?

   சில கேள்விகளுக்கு உங்களின் பொதுநோக்கம் கொண்ட பதிலை எதிர்பார்க்கின்றேன்

   1. ஐநூறு மாணவிகளுக்கும் மேலாக கல்வியை கற்கும் அளவுக்கு மிகப் பெரிய நவீன
   வசதியுடன்.———–இது சாத்தியமா ???
   2.புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எம் ஊர் சமூக நலன் விரும்பிகள் மனங்களில் பெரிய
   அளவில் வரவேற்பை பெற்றுள்ள.மறுமலர்ச்சி மன்றம்—— எந்த நாட்டில் எத்தினை வீதம் ???
   3. பண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின். செயல்ப்பாடுகள் இன்று வரை.
   வரவேற்கப்படவேண்டியது.—————இதன் செயற்பாட்டை பற்றி உங்களின் விளக்கம் ???
   4. இனி முன்னேடுக்கப்போகும் கட்டிட திட்டங்கள் மட்டும் பாராட்டக் கூடிய விஷயமும் அல்ல—-
   ——– இவர்கள் எதற்காக இத் திட்டத்தை முன்னேடுத்த்ர்கள் –நீங்கள்
   விலங்க்கிகொண்டது ????
   5. எம்மூர் இளைஞர்களுக்கு இடையே. வேற்றுமை என்ற பகையுணர்ச்சி விரிந்து———யாருக்கு
   இடையே பகையுணர்ச்சி எதற்க்காக வந்தது ????
   6. பிளவு பட்டு கிடக்கும் எமது இளைஞர்களை- பண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின்.
   இத்திட்டம் மேலும் பிளவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது——நீங்கள் இங்கே எதை
   கருத்தில் கொண்டு குறிப்பிடுகின்றீர்கள் ???
   7. ஒரு வகையில் பழிவாங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமே..—-
   யார் யாரை பழிவாங்குவது ???
   8.புலம்பெஜர் தேசத்திலும் புலத்திலும் நடக்கும் பண் நிகழ்சிகளுக்கு இனைஜத்தலங்களில்
   பண் மக்களின் கருத்துக்கள் பரிமாறலாம் ஆனால் நீங்கள் குறிப்பிடும் பெரிய
   இடங்களில் நடக்கும் நிகழ்சிகளுக்கு கருத்து சுத்தந்திரம் இல்லையே ஏன்??? உங்கள் பதில்

   வாசன்

   • ஊரபிமானி:

    வாசனின் நியாயமான கேள்விகளுக்கு தகுந்த பதில் அளிக்க வேண்டியது அர்ப்புதனன்னனின் கடமை என நினைக்கிறேன் .பதில் கொடுப்பீர்களா ?குறிப்பாக மக்களின் கருத்துக்கு அஞ்சும் மன்றத்தால் யாருக்கு நன்மை ?இதே இணையத்தில் காணப்படும் ஒரு மன்றத்தின் பதிவுக்கு ஏன் கருத்துத் தடை விதிக்கப் பட்டுள்ளது என்பதற்கு உங்களால் பதில் கூற முடியுமா ?

   • RAVI:

    “செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
    காணின் கிழக்காம் தலை. ”
    பொருள் -பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.

  • RAVI:

   “செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
   காணின் கிழக்காம் தலை. ”
   பொருள் -பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்

   • அ. பகீரதன்:

    இதனை இவன் முடிக்கும் என ஆய்ந்து
    அதனை அவன் கண்விடல்

  • அ. பகீரதன்:

   அற்புதன் அவர்களுக்கு நன்றியும் அன்பும் உரித்தாகுக. இன்று சரியாகச் சிந்திக்ககூடியவர்களில் ஒருவராக தாங்கள் இருக்கின்றீர்கள். இவ்வாறான ஆற்றலும் சிறப்பும் வாய்ந்தவர்களை இப்போது சந்திப்பது அரிதாகவே உள்ளது. வாழ்த்துக்கள்.
   ஐநூறு பேர்கள் படிக்கமுடியும் என்பதில் நம்பிக்கை இல்லை. ஆனால் மாணாக்கரின் ஆற்றல்களை வெளிக்கொணரும் நிகழ்வுகளை ஐநூறு பேர் இருந்து இரசிக்கமுடியும். திறந்த வெளியரங்கில் மாணவர் நிகழ்ச்சிகளை நடாத்தும் போது இந்த பேறு கிடைக்கும்.
   நம்பகமானவர்களுடனேயே இணையமுடியும் நம்பகமானவர்களே ஒன்றிணைந்து செயற்படமுடியும். அனுபவமே சிறந்த ஆசான். மறுமலர்ச்சி மன்றத்தில் இருந்து நாலு பேரோடு பழகி செல்வாக்கு பெற்று சான்று பெற்று அரச தொழில் ஒன்றில் இணைந்துகொண்ட நபர் ஒருவராலேயே ஊரில் ஒற்றுமையீனமும் ஒத்துசைவின்னைமையும் ஏற்படுத்தப்படுகின்றது.
   இதில் வேடிக்கை என்ன வென்றால் குறிப்பிட்ட அந்த நபர் பற்றியும் அவரது ஊழலைப்பற்றியும் அவரது நடவடிக்கை பற்றியும் எமக்கு எடுத்துக்கூறி எம்மைத் தடுத்தாட்கொண்டவர்கள் இப்போது அவருடன் இணைந்து செயற்படுவது தான். காலம் தான் ஆட்களை எவ்வாறெல்லாம் மாற்றுகின்றது.

   • அ. பகீரதன்:

    ஒத்துசைவின்மை என்பதனை ஒத்திசைவின்மை என வாசிக்கவும்

   • vasan-canada:

    வணக்கம் அ. பகீரதன் அண்ணன்
    உங்களின் கவிதை தொகுப்புகளின் ரசிகன் நான் எனது நன்றியும் வாழ்த்துக்களும் …நிற்க .

    விசுவாசிகளுக்கு விசுவாசிகள் வாழ்த்துக்கள் சொல்வது இயற்கையே ……………………… .
    மாணாக்கரின் ஆற்றல்களை வெளிக்கொணரும் நிகழ்வுகளை ஐநூறு பேர் இருந்து இரசிக்கமுடியும்———இது எப்போது மன்றத்தில் நடைபெறும் ?
    நம்பகமானவர்களுடனேயே இணையமுடியும் நம்பகமானவர்களே ஒன்றிணைந்து செயற்படமுடியும்………..எமது ஊரிலே நம்பகமானவர்கள் இருக்கினமா ? இல்லையா ?
    அந்த நபர் பற்றியும் அவரது ஊழலைப்பற்றியும் ………உலகத்திலே தப்பு செய்யாத ஒரு மனிதனை உங்களால் காட்டமுடியுமா ?

    • அ. பகீரதன்:

     உலகம் வேறு ஊர் வேறு
     தப்பு செய்தவரை மன்னிக்கலாம்
     தப்பை உணர்ந்து திருந்தினால் மட்டுமே
     ஆனால் திருந்திவிட்டார் என நாம்நினைத்த பின்பும்
     தவறான கோணத்தில் மக்களை ஆட்டுமந்தைகளாக நினைத்து அரச பதவியை பாவித்து தூண்டிவிடுபவரை என்ன செய்வது

     • .canada vasan:

      வணக்கம்

      உலகம் வேறு ஊர் வேறல்ல
      பல மனிதர்கள் சேர்ந்தது குடும்பம் -கிராமம் -நகரம் -நாடு -உலகம் எல்லாமே ஒன்றுக்குள் ஒன்று இதை பிரித்து பார்த்தல் அதற்க்கு வேறு பெயர் உண்டு

      முதல் நீங்கள் எமது மக்களை மதியுங்கள் அதற்க்கு பிற்பாடு மற்றவர்களை குறை சொல்லுங்கள்

      நன்றி

 • ஊரபிமானி:

  இது ஒரு நல்ல முயற்ச்சி .ஆனால் பின்னர் இங்கு சர்வாதிகாரம் ஆட்சி செய்யக் கூடிய வாய்ப்பு உண்டு .காரணம் இதன் நிர்வாகிகள் சிலரின் கடந்த கால நடத்தைகள் அப்படியானவை .எனவே நிர்வாகசபை சொந்தமாக இருக்காது பதவிகள் மாற்றப் படவேண்டும் .ஆயுள் பதவிகள் நீக்கப் பட வேண்டும் .மற்றும் இங்கு பதவியே நோக்கமாகக் கொண்டவர்களும் காணப் படுகின்றனர் .சுய நல நோக்குடையவர்களை நீக்க வேண்டும் .இங்கு காணப் படும் பேர்வழிகளில் சிலர் கடந்த காலங்களில் பெரும் ஊழல்களில் சம்மந்தப் பட்டவர்களும் உள்ளதாகக் கூறப் படுகிறது .எனவே தயவு செய்து நிர்வாகம் திறம்பட இயங்க நேர்மையானவர்கள் இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்படவும் .இனி வரும் காலம் கட்டடம் அமைக்கும் செயல்பாடுகள் நடக்கும் .அப்போது பல ஊழல் நடைபெற வாய்ப்பு உண்டு

  பிமானி .

 • sasikaran:

  எத்தின நாளைக்கு தி க சு ன்ர கையிலையே இடுமங்கோயில் பொதுச்சொத்தா இருக்கும். அம்மங்கோவிலும் மடமும் வாசியசாலையும் சங்கக்கடையும் மன்றமும் பொதுச்சொத்துத்தான். ஒராளே எத்தின பேரில எழுதுவீங்க. ஆறுமுக வித்தியாலைய அபிவிரித்திக்கெதிராப் போட்டிருக்கிற துருப்புத்தான் இந்தக் காசடி விளையாட்டு.

 • பண் மக்களின் ஒற்றுமை நலன்விரும்பி:

  அங்கத்தவருக்கு வணக்கம் !!!

  எமது ஊரில் அம்மன்கோவில் , ம.ம.ம .இவை இரண்டையும் தவிர மற்றவை எல்லாம் அன்றில் இருந்து இன்று வரைக்கும் பொதுச்சொத்துத்தான் இதை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை
  வரலாற்றை ஆராய்ந்து சிந்தித்து எழுதவும்

  • பண் மக்கள் ஒன்றிய அங்கத்தவரில் ஒருவன்:

   தயவு செய்து எமது ஊரில் இருக்கும்
   பொதுச்சொத்து எது ???

   • ஊரவன்:

    என்னண்ணை விளங்காத மாதிரிக் கேட்கிறியள் ……ஏன் நீங்கள் சொந்தம் கொண்டடப்போகிரியளோ ……….ஊரில் ஏதாவது உருப்படியாக நடக்க விடுங்களேன்
    மனிசன் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரமாவது செய்யாது இருக்கணும் அவன் தான் மனுஷன் பாருங்கோ ……

   • அ. பகீரதன்:

    பொதுச் சொத்தாக எதுவுமில்லை. வேண்டுமானால் தெருக்கள் பொதுச்சொத்தாக இருக்கமுடியும் ஆனால் அவ்வாறாக இல்லை. தெருக்களுக்கு கூட பொறுப்புள்ளவர்கள் இருக்கின்றார்கள். சில விடயங்களை எல்லா இடங்களிலும் செய்யமுடியாது. எல்லாவற்றுக்கும் நம்பக பொறுப்பு சபை அல்லது நிறுவனம் அல்லது அரசு அல்லது சங்கம் இருக்கும் எல்லோருக்கும் பொதுவாக ஒன்றுமே இருக்கமுடியாது.

 • பண் மக்களின் ஒற்றுமை நலன்விரும்பி:

  பண் மக்கள் கவிக்கூடத்தின் இத் திட்டத்தை நான் மிகவும் பாராட்டுகின்றேன் . உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் . ஊரில் எவ்வளவோ பெரிய கட்டடங்கள் இருந்தும் எங்கள் ஊர் மக்களின் தேவைக்கு கிடைக்காததை இட்டு மனம் வருந்துகின்றேன் ,காரணம் தெரிஜவில்லை
  இவை பொதுஇடம் தான் என்று நினைத்தேன் . உங்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்

  நன்றி

  பண் மக்களின் ஒற்றுமை நலன்விரும்பி

  • பண் மக்கள் ஒன்றிய அங்கத்தவரில் ஒருவன்:

   எமது ஊரில் இது வரைக்கும் இடுமன் கோவில் தான்
   பொதுச்சொத்து அதுவும் தி.கரசு ஐய்யா இருக்கும்
   மட்டும் தான்….
   இந்தப்பாடசாலையும் பணம் கிடைக்கும் வரைக்கும் தான். பொதுச்சொத்து
   பண் மக்கள் ஒன்றியம் -சுவிஸ்——–
   இப்ப இதன் பெயர்
   பண் மக்கள் ஒன்றியம் ????
   இதில் இருந்து எனக்கு விளங்குவது இதுதான்————-

   • பண் மக்களின் ஒற்றுமை நலன்விரும்பி:

    இதன் கருத்து உங்களுக்கு மட்டும் தான் விளங்குகின்றது மற்றவர்களுக்கு விளங்கவில்லை ???

    • பண் மக்கள் ஒன்றிய அங்கத்தவரில் ஒருவன்:

     வளவு வேன்டி கட்டிடம் கட்டும் வரைக்கும்தான்
     இது பொதுச்சொத்து .

     அதன் பிறகு ம.ம.மன்றத்தில் நடப்பதுதான் இங்கும்

     • அ. பகீரதன்:

      பொதுச் சொத்தாக எதுவும் இருக்கமுடியாது. பிழையான புரிதல். கண்ணியம் கட்டுப்பாடு ஒழுக்கம் என்பவற்றுக்கு பொறுப்புக்கூறக்கூடிய நம்பகச் சொத்துக்களே இருக்கமுடியுமே ஒழிய பொதுச்சொத்து என்ன ஒன்று இருக்க முடியாது. மன்றம் ஒருகாலத்தில் திறந்த வெளியாக மதில் இல்லாத போது இந்த நிலைமை காணப்பட்டது. ஆனால் இப்போது அது நம்பகச் சொத்தாக குடித்துவிட்டுவரமுடியாது. சண்டை பிடிக்கும் நோக்கத்தில் வரமுடியாது. அல்லது சொத்துக்களைச் சேதமாக்கும் நோக்கத்துடன் வரமுடியாது. அல்லது நிகழ்ச்சிகளைக் குழப்பும் நோக்கத்தில் வரமுடியாது. அல்லது தேவையற்ற உரத்த குரலொலிகளை ஏற்படுத்துவதற்கு வரமுடியாது. நம்பகச்சொத்து எனும் போது அதில் பயனாளிகளே இருக்கமுடியும் இலங்கைத் திருநாட்டில் இருக்கும் எவரும் இச்சொத்தை தகுந்த முறையில் பயன்படுத்துவதற்கு நம்பகப் பொறுப்புச் சபை என்றும் ஒத்திசையும்

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து