உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனிதவுரிமை விவகாரங்கள் தொடர்பில் அளித்த வாக்குறுதிகளின் படி, வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் சட்ட நிபுணர்களை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றத்தை இந்த ஆண்டு இலங்கை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று சிவில் அமைப்புகளும், மனிதவுரிமை செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொறுப்புக்கூறல் மற்றும் நல் லிணக்கம் தொடர்பில் ஐ.நா மனி தவுரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை மீது தீர்மானம் நிறை வேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில், இத்தீர்மானம் தொடர்பில் இலங்கை  அரசாங்கம் கடந்த ஆண்டு அளித்த வாக்குறுதி களை இவ்வாண்டில் நிறைவேற்று வதற்கான முக்கிய நடவடிக்கை களை வலியுறுத்தி சிவில் அமைப் புகளும், மனிதவுரிமை ஆர் வலர்களும் கூட்டாக வெளி யிட்டுள்ள அறிக்கையிலேயே இவ் வாறு கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.
இவ்வறிக்கையில், இலங்கை யில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து கடந்த ஓராண்டில் மேற்கொண் டுள்ள சில அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர் பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, சுயாதீன ஆணைக் குழுக்களின் நியமனம், 19வது அர சியலமைப்புத் திருத்தம், வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் சில காணி கள் விடுவிக்கப்பட்டமை போன்ற சில முன்னேற்றங்களை கடந்த ஓராண்டில் இலங்கையின் புதிய அரசாங்கம் வெளிப்படுத்தியுள் ளது.
அதேவேளை, ஐ.நா மனித வுரிமைகள் ஆணைக்குழுவில்  அளித்திருந்த வாக்குறுதிகளை முழுமையாக இலங்கை அரசாங் கம் நிறைவேற்ற வேண்டும் என் றும் கோரிக்கை விடுத்துள்ள இவ் வறிக்கை, உண்மையான அமைதி யும் நல்லிணக்கமும் ஏற்பட இன் னும் அதிகம் செய்யப்பட வேண்டி யிருக்கின்றது என்று தெரிவித் துள்ளது. பொறுப்புக்கூறல், நல் லிணக் கம் மற்றும் மனிதவுரிமை விவ காரங்கள் தொடர்பில் அளித்த வாக் குறுதிகளின்படி, வெளிநாட்டு நீதி பதிகள் மற்றும் சட்டநிபுணர் களை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன் றத்தை இந்த ஆண்டு இலங்கை  அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றும் சிவில் அமைப்புகளும், மனிதவுரிமை செயற்பாட்டாளர் களும் இவ்வறிக்கையில் கோரி யுள்ளனர்.
அத்துடன், காணாமல்போன வர்கள் தொடர்பான அலுவலகம், உண்மை கண்டறிதல், நீதி மற் றும் நல்லிணக்கம், பாதிக்கப்பட்ட வர்களுக்கான இழப்பீடு போன்றவற் றுக்கான நிறுவனங்களை நிறு வுதல் போன்ற நடவடிக்கைகளும் இலங்கை அரசாங்கம் இவ்வாண் டில் நிறைவேற்ற வேண்டும் என் றும் இவ்வறிக்கையில் வலியுறுத் தப்பட்டுள்ளது.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து