உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

anigif

5 Responses to “இணைய உறவுகள் அனைவருக்கும்இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்”

 • GOPAL:

  தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும்
  கூற்று உண்மையானால் இனி வரும்
  காலங்களில் எம் ஊரில் போட்டி,பொறாமை ,ஈகோ,பிரிவு
  இவை எல்லாம் நீங்கி ஓர் ஊர் மக்கள் நாம் என்போம்
  ஒன்றே எங்கள் குலம் என்போம் என்ற உணர்வுடன்
  ஒற்றுமையாக இருப்பதைக் கொண்டு
  இன்பம் பொங்க வாழ்த்துகின்றென்…

  • kaalaydi murukan:

   அண்ணா கோபால் அண்ணா ,கொஞ்சம் நின்று பாருங்கள் .இங்கு யாரும் பிரிவை விரும்ப வில்லை .ஒற்றுமையையே அனைவரும் விரும்புகின்றனர் .ஆனால் நாங்களே இந்நாட்டு மன்னர் எனக் கூறும் சமூகத்தாலேயே சமூக ஒற்றுமை சீர்குலைகிறது .எல்லா நிறுவனங்களும் பொதுவாக இருக்கும்போது மன்றம் மட்டும் ஏன் தனியுடைமையாக இருக்க வேண்டும் ?இதற்குப் பதில் தர உங்களால் முடியுமா ?ஊர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை ஒருநாளும் மறுக்க வில்லை .ஆனால் இன்று இங்கு ஒரே இனத்துக்குள் ஏற்றத் தாழ்வுகள் .நான்படித்தவன் எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்போரால் வளரும் சமுதாயத்துக்கு வழி அடைக்கப் படுகிறது .நாங்கள்தான் மன்றத்தை ஆரம்பித்தவர்கள் ஆகவே நாங்கள்தான் அதை நிர்வகிக்க வேண்டும் என உடும்புப் பிடியில் நிர்ப்பது சரியா ?

 • Ratnarajah:

  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

 • அ பகீரதன்:

  தைத்திருநாள் வாழ்த்து
  தரணியில் உயர்ந்தே
  பரணி பாடுவோம்
  உழவர் ஏற்றம் பெறவே
  உற்றவழி செய்குவோம்
  மானுடம் தளைக்கவென
  மார்க்கங்கள் கண்டுகொள்வோம்
  ஊனுடம் பாலயம் என
  உணர்ந்து போற்றுவோம்
  முருகனை தொழுதிடுவோம்
  ஞாயிறே முருகனாய்
  தோன்றியது அறிந்திடுவோம்
  அருட்பெரும் சோதியே
  அருணனாய் காட்சியே
  பேரின்ப நீட்சியே
  பேரருள் காட்சியே
  கூடிடில் மாட்சியே
  தேடிடில் பொதுமையே
  நாடிடில் நன்மையே
  வேலினை வணங்கிடில்
  வேதனை மாறுமே
  நூலகம் சென்றிடில்
  தெளிவது பெறுவமே
  பாலகரும் முதியரும்
  பயனுற சிறக்குமே
  வியனுறு உலகினில்
  விருத்தி பெறுவமே
  மதங்கள் ஒன்றுபட
  மன்றம் சிறக்குமே

 • தி.முரளி....சுவிஸ்:

  அனைத்து அன்பு உறவுகட்க்கு எனது இனிய
  தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

  தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும்
  கூற்றுக்கிணங்க தமிழர் ஆண்டின் தொடக்கம்
  எனப்படும் தை மாதம் முதல் நாளிலே
  தமிழர்களினதும் உழவர்களினதும் திருநாளாம்
  தைப் பொங்கல் தினமாம் இன்று நமது
  இலங்கை திருநாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும்
  வாழ்ந்து வருகின்ற தமிழர்கள் அனைவரதும்
  இல்லங்களில் பொங்கல் பொங்கி…..
  உள்ளங்களில் இன்பம் பொங்க வாழ்த்துகின்றென்…
  தி.முரளி….சுவிஸ்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து