உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கடவுள் உண்டா ?  இல்லையா ?  அவர் எப்படி இருக்கிறார் ?  எங்கே இருக்கிறார் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பாரோ ? இவன் என்னடா உளறுகிறான். விஞ்ஞானம் விண்ணைத் தொட்ட நேரத்தில் பகுத்தறிவு இல்லாமல் மூடநம்பிக்கை பற்றி எழுதுகிறான். தத்துவமேதை சோக்கிரட்டீஸ் சொன்னார் எதிலும் சந்தேகம் கொள். ஏன் எப்படி எதற்காக என்று பல கேள்விகள் உன்னுக்குள் வரட்டும். எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார் வள்ளுவர் ..கண்ணீருக்கு பதிலாக புரட்சியை விதை என்றார் .மாமேதை மார்க்ஸ் .

மறுமலர்ச்சி மன்றத்தில் நடந்த

காகிதப் புலிகள் நாடகத்தில் ஒரு காட்சியில்
மிகவும் பசியோடு பெற்ற தாயினைப் பார்த்து
அழுதவண்ணம் குழந்தை கேட்க்கும்
அம்மா பசி தாங்கேல்லை அம்மா பசி தாங்கேல்லை

 அடுப்படியில் என்ன இருக்கிது
( வறுமையின் கொடுமையில் வாழ்ந்துகொண்டிருக்கும் தாய்கூறுவாள் )

அடுப்படியில் பூனை இருக்குது பூனைக்கு கீழை சாம்பல் இருக்குது
பூனை எப்ப எழும்பும் என்று புரிசனத்தான் கேட்க்கவேணும்
(கோவத்தோடு புருசன் மனைவியைப்பார்த்து)

என்னை என்ன கேட்கிறது ?என்னை என்ன கேட்கிறது
(பரிதாபமாக கட்டி குழந்தையை அணைத்து)
ஏழைகளுக்கு இதுதான் வழி கடவுள் விட்ட வழிஅப்பா
காரணம் நீ கேட்டிடாதை.

(அப்போது பிள்ளை பசியில் அழுதுகொண்டே தகப்பனைக் கேட்க்கும்)
கடவுள் எங்கே உள்ளார் அப்பா? கடவுள் எங்கே உள்ளார் அப்பா? ?
கஞ்சி அவரை கேட்டு வாறேன்
கஞ்சி தரமறுத்து விட்டால் கடவுள் மண்டை உடைத்துவாறேன்
(தகப்பன் கோவத்தில் பிள்ளைக்கு அடித்து)

வாய் உனக்கு வைத்துவிட்டு வரம்பு மீறிபோவிட்டது
இப்படியாக தொடர்ந்து போகும் நாடகம்
இவன் என்ன எதிர்மாறான கருத்துகளை சொல்லப்போறானோ?
தொடர்ந்து சிந்திப்போம் . பகவற்கீதையை உண்டாக்கியவர் கடவுளா?மனிதரா?

பைபிளை உண்டாக்கியவர் கடவுளா?மனிதரா?
குர்ரானை உண்டாக்கியவர் கடவுளா?மனிதரா?
ஏழை,பணக்காரன் அல்லது வர்க்கவேறுபாட்டை உண்டாக்கியவர் கடவுளா?மனிதரா
சமுதாயத்தினை சாதிபோட்டு பிரித்தவர் கடவுளா? மனிதரா?
எல்லாம் வல்ல இறைவனை கல்லிலும் மண்ணிலும், உலோகங்களிலும்

மனிதரால் செய்யமுடியுமா?முடியாதா?
பகவற்கீதையை பகவான் (கடவுள்) கிருஸ்ணன் தான் தான் படைத்தாக கூறுகிறார்.
பைபிளை 40ஆட்கள் எழுதினதாகவும்.66 புத்கங்களாகவும்,கடிதங்களாகவும் குர்ரானும் பைபிளிலும் ஒன்றில் இருந்து ஒன்று வந்தாக சிலர்,பைபிள் முதல் வந்தாக சிலர் குர்ரான் முதல் வந்தாக கூறுகிறார்கள்

பகவற்கீதையில் நானே நான்கு வித சாதிப் பிரிவுகளை பிரித்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்

சாதிப் பாகுபாடு வகுத்து வர்ணாச்சிரததர்மக் கொள்கைப்படி

தலையில் இருந்து பிராமணன்,தோளில் இருந்து சத்திரியன் ,வயித்தில் இருந்து வைஷ்ணவன் காலில் இருந்து சூத்திரன், பஞ்சமன் எங்கு இருந்து குறிப்பிடப்படவில்லை பாரதியார் கோவத்தோடு குறிப்பிட்டு இருந்தார் இவன் ஒருத்தான் உண்மையாக தாயின் வயிற்றில் இருந்து பிறந்தவன்.

பைபிளை, குர்ரானை படிக்க சொல்லுகிறார்கள் மக்களை வீடு வீடாக சென்று புத்தகங்களை கொடுக்கிறார்கள், பகவற்கீதையை எல்லாரும் படிக்ககூடாது என்றும் பகவற் கீதையிலே இருக்கிறது. பிராமணர்கள் மட்டும்தான் படிக்கவேண்டும்..மற்றவர்கள் படித்தால் கண்ணைகுற்றி குருடாக்கவேண்டும்.

கேட்டாலே காதுக்குள் ஈயம் உருக்கி ஊற்றவேண்டும்.என்று பகவற்கீதையிலே

இருக்கிறது..நீங்களே சிந்தித்து பாருங்கள் உங்கள் வீடுகளில் சிலசமயம் பைபிள்

இருக்கலாம்.படித்தும் இருக்கலாம். பகவற்கீதை அருமையாகவே வீடுகளில் இருக்கும்

பகவற்கீதையில் சொன்ன தத்துவங்கள் சில (சுலோகங்கள்)

கடமையை செய் பலனை எதிர்பாராதே

யாராவது ஐயர் பூசை பண்ணிப்போட்டு வருமானம் வாங்காமல் போகிறார் என்றால் சரி பகவற்கீதையில் சொன்ன தத்துவங்களை அவர் கடைப்பிடிக்கிறாரர்.நாமும் கடைப் பிடிப்போம்

எது கொண்டு வந்தாய் நீ கொண்டு செல்ல இதைக் கடவுள் சொல்லவேணுமோ

பகவான் கிருஸ்ணன் (கண்ணன்,)

,திருட்டுகளும் பிரட்டுக்களும் செய்வதில் மன்னன்.

பெண்களை கண்டால் பிடித்து இழுப்பராம்

.ராமரின் (கடவுளின்) தந்தை தசரதனுக்கு ஏன் நான்கு பெண்டாட்டிகள்

.ராமரின் பெண்டாட்டி சீதையை ராவணன் கடத்திக்கொண்டு இலங்கைக்கு கொண்டு போவிட்டார். ராமர் இந்தியாவில் இருந்து பாலம் கட்டினாராம் இலங்கை போய் பெண்டாட்டியை மீட்டுவர யாராவது ஒருவர் தன்னுடைய பெண்டாட்டியை ஒரு அரை மணித்தியாலம் காணேல்லை என்றால் பதறி உயிர் துடித்து கொண்டு இருப்பார்கள். இவர் என்னவென்றால் உதவிக்கு அணிலை பிடித்து (கொய்யாப்பழம் தூக்கமுடியாத ஆள்)மெல்ல மெல்லமாக ராமர் பாலம் கட்டினாராம் இந்தியாவில் இருந்து இலங்கை போய் தன்னுடைய பெண்டாட்டியை மீட்டுவர! இப்படியாக கடவுளின் பகவற்கீதை சொல்லுகிறது

சீதையை அனுமன் மீட்ட பிறகு சந்தேகம் கடவுளுக்கு சந்தேகம் சீதை கற்புள்ளவளா கற்ப்பில்லாதவளா என்று பார்க்க நெருப்பில் எரித்து சோதனை கட்டின பெண்டாடியையே சந்தேகித்தவரை சாமியாக கும்பிடலாமோ? கடவுளே?

புவியியல் பாடத்தில் கங்கைஆறு இமயமலை இருந்து வருகிறது என்று பாடம் சொல்லித்தருகிறார். சில சமயம் ஒரே ஆசிரியர் அல்லது வேறு ஆசிரியர் சமய பாடத்தில் சிவனின் தலையில் இருந்துதான் கங்கைஆறு வருகிறது என்பார், சுகாதார ஆசிரியர் முட்டை,பால்,இறைச்சி வளரும் பிள்ளகள் சாப்பிடவேணும் என்று கற்பிப்பார். ஒரே ஆசிரியர் அல்லது வேறு ஆசிரியர் சமய பாடத்தில் சைவசமயத்தினர் அசைவம் சாப்பிடக்கூடாது என்பார். ஆனால் அவரே சாப்பிடுவார்.

ஏன் இந்தமுரண்பாடுகள்.மூடக்கொள்கைகளா?பகுத்துஅறிவின்மையா?

கடவுள் நம்மைக் காப்பார் என்றால் காவலும் ,ராணுவம் எதற்க்கு?

வருத்தம் வந்தால் ஏன் வைத்தியரிடம் செல்லவேண்டும்

கடவுள் காப்பாற்றுவார் என்றுவிட்டு விபூதியை அள்ளிப்

பூசிப்போட்டு வீட்டில் இருக்கவேண்டியதுதானே

அனைத்தையும் அறிந்தவர் கடவுள் என்றால் நாம் தினம் தினம் அல்லல்படுவதை அறியாரா?

போர்,கொடுமையான வியாதிகளை அறியாரோ?

இயற்கை அழிவுகளை அறியாரோ?

கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றால்

உயிர்களைக் கொல்லும் துப்பாக்கிரவையிலும் இருப்பாரா ?

அன்பே சிவன் என்றால் ஆயுதங்கள் ஏன் சிவனின் கையில்?,

?கடவுள்களின் கையில் கத்தி,வாள் சூலாயுதம்,,கோடரி,வில்லு,அம்பு கசாப்புக்கடைக்காரரின் கையில் இருப்பதுபோல் கடவுளால் எதையும்

அன்பால் சாதிக்கமுடியாதா? எல்லாக் கடவுளுக்கும் ஏன் பெண்டாட்டிகள். எல்லாக் கடவுளும் பெண்டாட்டிமாரோடும் பிரச்சனை.

எல்லாம் வல்ல இறைவனை கல்லிலும் மண்ணிலும், உலோகங்களிலும் சாதரண மனிதர்களால் உருவாக்கமுடிமா?

மனிதன் கல்லுக்குள்ளோ,மண்ணிலோ,உலோகங்களுக்கோ

கடவுளின் சக்தியை அடைப்பான் என்றால் மனிதன்தான்

கடவுளை விட வல்லமை உள்ளவன் என்ற முடிவுக்கு வரவேண்டும். கடவுள்தான் மனிதரை படைத்தாரோ?

மனிதன்தான் கடவுளை படைத்தாரோ.?

சிலைகள் எல்லாம் கடவுள் அல்ல அவை வெறும்

சிலைகள் மட்டுமே தான்.சிலைகள் உடைந்து விட்டால்

கடவுள் உடைந்து விட்டாரோ? சிலைகள் கடவுள் என்றால்

கோயில்களுக்கு ஏன் கதவும் பூட்டும்

தன்னையே காத்துக்கொள்ள முடியாதவர் என்னவென்று

சாதரண மனிதர்களை காத்துக்கொள்ளவார்.

கடவுளின் காலடியில் இருக்கும் உண்டியலை கடவுள் காக்கமுடியாமல் உண்டியலுக்கு பிரத்தியேகமான பெரிய பூட்டுப் போட்டும் அதைப் பாதுகாக்க முடியவில்லை களவு போனபிறகு கண்டுபிடித்துக் கொடுக்கிற காவல்தான் கடவுளை விட வல்லமையானதா?

எங்காவது ஒரு ஐயர் அங்கபிரதட்சணம்செய்தது கண்டதுண்டா?

காவடி எடுத்தது கண்டதுண்டா?

பறவைக்காவடி எடுத்தது கண்டதுண்டா?

அலகு குற்றியது கண்டதுண்டா?

ஐயர்ப் பெண் கற்பூரச்சட்டி தூக்கியது கண்டதுண்டா?அவர்களுக்குதான் கடவுள் இல்லை அங்கே என்று நன்றாகத் தெரியும்.

அப்பாவி நீயும் நானும் தான் அங்கே இத்தனையும் செய்கிறோம்.

அப்பாவி நீயும் நானும் தான் அங்கே இத்தனையும் செய்கிறோம்

பைபிளில் மற்ற பிராணிகளை கொன்று சாப்பிடு என்று இருக்கிறது.

கடவுள் தானே படைத்து இருக்கிறார் மனிதனுக்கு சாப்பாட்டுக்குஎன்று

ஏன் கதறலையும் ,வேதனயும் கடவுள் பிராணிகளுக்கு கொடுத்தார்

அப்படி என்றால் பைபிளில் உள்ள பத்து.கட்டளைகளில்

ஒரு கட்டளை பிற உயிர்களை கொலை செய்யாதே என்னாச்சு

யேசுவை யார் கொலைசெய்தார்கள்?தானாக இறந்தாரோ?

யேசுவை யூதர்கள் .கொலைசெய்திருந்தால்

யூதவர்கள் யேசுவைவிட வல்லமை உள்ளவர்களோ?

தானாக இறந்தால் அவர் பட்ட வேதனைகள் எல்லாம் என்ன?கடவுள் இல்லாத

உலகமாக இந்த உலகம் மூன்று நாட்கள் இருந்ததா?

யேசுவை சிலுவையில்த்தான் அறைந்து கொண்டார்கள்.அப்பிடி என்றால் சிலுவையை வணங்கலாமோ?அல்லது ஞாபகார்த்தபொருளாக வைத்து,அல்லது

களுத்தில் கட்டித் தொங்கவிடலாமோ?உதாரணத்திற்க்கு எங்கள் தகப்பனை கொண்ட கத்தியோ அல்லது,துவக்கினை நாம் வழிபடலாமோ ? ஞாபகார்த்தபொருளாக வைத்து,அல்லது களுத்தில் கட்டித் தொங்கவிடலாமோ?

கேளுங்கள் தரப்படும்!என்றால்! வாய்பேசாமுடியாதவர் எப்படிக் கேட்ப்பார்

தட்டுங்கள் திறக்கப்படும் என்றால்!!கை இல்லாதவர் எப்படித் தட்டுவார்

தேடுங்கள் கிடைக்கும் என்றால் கண் குருடானவர் எப்படித் தேடுவார்.

கடவுள் நம்மைக் காப்பார் என்றால் காவலும்,ராணுவமும் எதற்க்கு?

உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன்.

தொடரும்…….

38 Responses to “உண்மையைத் தேடி..”

 • ஒருவனுக்கு ஒருத்தியென்று சொன்னது இந்துசமயம்
  ஜவருக்கு ஒருத்தியென்று சொன்னதும் இந்துசமயம்தான் .பாண்டவர்களுக்கு திரெளபதிபோல்

  உண்மைக்கு உதாரணமாய் அரிச்சந்திரனை சொல்லி அரிச்சந்திரனை பொய்யனாக்கியதும்
  இந்துசமயச்சடங்குதான் இறுதி வரை இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து இருப்பேன்
  என்று திருமணச்சடங்கிலே ச்த்தியம் செய்த கணவன் ச்த்தியத்தினை மீறி அந்தணனுக்கு
  அடிமையாய் விட்டு கட்டிய மனைவியை கண்கலங்க விட்டு செனறான்

  கற்புக்கரசி கண்ணகியை வணங்கும் இந்துமதம் ஓருபாண்டியமன்னனின் பிழைக்காக
  கடவுள் கண்ணகியே அந்த மதுரையை எரித்தது சரியா?

  கட்டிய மனைவி சீதையை கடவுள் ராம்ர் சீதையின் கற்பின்மேல் சந்தேகபபட்டு
  தீக்குளிக்கவைத்தது கடவுளுக்கு நியாமா?

  • ARULAKAM WORDPRESS.COM
   முட்டாளாக்கியபகுத்தறிவு – தமிழர் உரிமையுடன் வாழ்வதற்கு தோழர் ஈ.வெ.ரா, என்னசெய்தார் ?
   முட்டாளாக்கியபகுத்தறிவு —
   –கடவுள் இல்லை என்று கூறுபவன் பகுத்தறிவாதி ஆகமாட்டான். இயற்கையின் நியதியை, இயற்கையின் ஒழுங்கமைப்பை உணர்ந்து, ,அவை அனைத்திற்கும் மூல ஆற்றலாக உள்ள கடவுளை
   ஏற்றுக்கொள்பவனே, உண்மையான பகுத்தறிவாதி.

 • அ ன்பான தேன்மொழிக்கு அதிக நாட்களின் பின்பு உங்களின் கருத்தை கண்டேன்
  கருத்துகளுக்கு நன்றி!
  உங்கள் கேள்விகளையே உங்களையே பார்த்து நீங்கள் கேட்டால் உங்களுக்கு சிரிப்பாக இருக்கும்.
  ஏனென்றால் ஒருவர் உயிரோடு இருக்கிறாரோ என்று என்னதை வைத்து நீமுடிவு எடுப்பாய் நீ இறந்தால் உன்னால் முடிவு எடுக்கவேமுடியாது. ஆனால் நான் இறந்தால் உன்னால் முடிவு எடுக்கமுடியும், எங்கள் உடல் இயக்கங்களை
  ஒரு கணம் நிறுத்தி வைக்க முடியுமா என்று கேட்டு இருந்தீர், ஏன்முடியாது ,நான் பேசுவதை பாடுவதை,ஓடுவதை,நடப்பதை,சிரிப்பதை,சிந்திப்பதை, எவ்வளவு நேரமும் என்னால்நிறுத்த முடியும்.
  இதைவிட தண்ணீரில் மூழ்கிய ஒருவர் தண்ணீருக்குள் சுவாசிக்க முடியாது, தண்ணீருக்குவெளியே வந்த பிறகு சுவாசிக்கமுடியும்,அல்லது நுரையீரலுக்குள் இருக்கும் தண்ணீரை அகற்றி செயற்கை சுவாசம் ,அல்லது முதலுதவி
  கொடுத்தால் சுவாசிக்கமுடியும், சிலபேருக்கு இதயம் கூட இயங்காமல் நின்றுவிடும், இதயத்துக்கான முதலுதவிகள்
  செய்து அல்லது மின் அதிர்ச்சி கொடுத்து இயங்க செய்வார்கள்.
  மேலும் கலைஞர்களின் கைவண்ணத்தில் கடவுளை செய்ய இயலாது,கடவுளை மனிதன் செய்வான் என்றால் மனிதன் தான் கடவுள்களை விட பெரியவன்

 • அன்பின் சிந்திப்பவனுக்கு வணக்கம்.
  .நீங்கள் உயிரோட இருப்பது உண்மையா? எதைவைத்து நம்புகின்றீர்கள்? நடப்பதை வைத்தா>……? இல்லைநீங்கள் கதைப்பதை வைத்தா? உங்கள் உடலுக்குள் நடக்கும் செயல்பாட்டை வைத்தா? உங்களால் உங்கள் உடலுக்குள் நடைபெறும் செயல்பாட்டை வைத்தா? உங்களால்? உமது உடலுக்குள் நடைபெறும் செயல்பாட்டை ஒரு நிமிடம் நிப்பாட்டமுடியுமா? ஏதாவது ஒரு உறுப்பை உமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா? இல்லைத்தானே? இதில் இருந்து என்னநினைக கிறீங்கள்.உங்களுக்குள் ஏதோ ஒரு சக்திஇருக்குதுதானே இதை நீங்கள் நம்புகீறீங்களா? அண்டவெளியிலிருந்து கடன்வாஃகி உள்ளெடுக்கிறீங்களெ காற்று அதில்லையெண்டால்உங்களால் உயிர் வாழத்தான் முடியுமா?இதிலிருந்து என்ன விளங்கிக்கொள்கிறீங்கள் எங்களையறியாமலே ஒரு சக்தி எங்களுக்குள்இருக்குதல்லவா? அந்த சக்தியைத்தான் நாங்கள் கடவுள் என்கின்றோம் என்றுசுவாமி விபுலானந்தர் போன்ற மகான்கள் கூறியுள்ளனர். கடவுள் வெவ்வேறு வடிவங்களா க இருப்பதற்கு யார் காரணம். மனிதன் தான் காரணம். தனது விருப்பத்துக்கு ஏற்ப வடிவங்களை அமைத்துள்ளான். அதாவது உங்களுக்கு விருப்பமான ஒருவருக்கு விதம்விதமான ஆடைஅணிகலன்களை பூட்டி அழகு பார்ப்பதில்லையா? அதைப்போலத்தான் யாரோஒரு கலைஞ்ஞர் உருவங்களை அமைத்துள்ளான். உங்களுக்கு எந்த்த்தோற்றம் விருப்பமோ அந்த்ததோற்றத்தை நீங்கள் விரும்புகிறீங்களோ அந்த்த்தோற்றத்தை விசுவாசியுங்கள் . அதுதான் நல்லது என நான் நினைக்கின்றேன். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

 • அன்புடன் இளங்கண்ணனுக்கு!கருத்துக்களுக்கு மிகவும் நன்றிகள். மிக நீண்ட விளக்கங்கள்.நல்லது. தொடரட்டும். வாழ்த்துக்கள். இது ஒரு கருத்துக்களம் மட்டுமேதான். நான் சொல்வது மட்டுமே சரி என்று ஒருபோதும்நான் சொல்லமாட்டேன்.எனது கருத்துக்களை நான் எழுதுகிறேன் உங்கள் கருத்துக்களையும் நீங்கள் எழுதுங்கள்.
  பைபிளில் முதல் அதிகாரம் முதல் வசனம் (ஆதியாகமம்) ஆதியிலே தேவன் வானத்தையும் ,பூமியையும் சிருஷ்டித்தார். அப்படி என்றால் படைத்த தேவன்எங்கே இருந்தார்.தேவன் ஆவியாக இருந்தாரோ? அல்லது வார்த்தையாக இருந்தாரோ? எனக்கு தெரியாது. கடவுளை எங்கே காணலாம் என்றால் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றீர்.நல்ல கருத்து
  பிரித்து பிரித்து எனி பிரிக்கமுடியாதுதான் அணுதான் கடவுள் என்று கூறுவது போல் .. . உங்கள் கருத்து இருந்தது.ஆனால் அயன்ஸ்ரைன் என்ற விஞ்ஞானி பிரிக்கமுடியாது என்று சொன்ன அணுவைப் பிரித்து பெரிய அணு சக்தியை பெறலாம் E=Mc2 பெறலாம் என்று காட்டியுள்ளார். அவதானியின் கருத்தும் அவதானிக்கப்படவேண்டிய நல்ல கருத்துக்கள்.

 • அவதானி.:

  இழங்கண்ணன் அவர்களின் வரவுக்கு நன்றி. ஏதோ கூறவந்து எழுதுவதில் ஏற்ப்பட்டதடங்கலினால் கருத்துக்களில் பல குளப்பங்கள் ஏற்ப்பட்டுள்ளன. மீண்டும் முயற்ச்சித்தால் நன்று.

  இயறக்கையை கடவுளாக்கினார்களா அல்லது கடவுள்தான் இயற்க்கையை உருவாக்கினாரா?.

  சித்தர்கள், நாயன்மார்கள், அதிசயங்கள், அற்ப்புதங்கள்,தேவார- திருவாசகங்கள் எல்லாம் ஏன் இந்து சமயத்தில் இந்தியாவில் மட்டும்தான் நடந்தேறியிருக்கின்றன? ஏன்?. வேறு நாடுகளில் இந்துக்கள் வாழவில்லையா?

  ஆங்கிலேயரின் வரவின் பின்னர் மேற்கண்ட விடயங்கள் ஏன் இந்தியாவில் நடைபெறவில்லை? அதற்கா வருமானம் கிடைக்காமை என்று கூறலாமா?

  இன்று மேலைத்தேச நாடுகளில் எவ்வித மதத்தையும் பின்பற்றாதவர்கள் குறிப்பிட்ட அளவில் இருக்கின்றார்களே? இவர்களைக் கட்டுப்படுத்துவதும் இக்கடவுள்கள்தானா?

  நீ விதைத்த்தைத்தான் நீ அறுவடை செய்கின்றாய்-இதற்கு எந்த இடைத்தரகரும் தேவை இல்லை?

  இந்து சமயத்தில் தான் தனக்கு ஒவ்வாத கருத்தைக் கூறுபவர்களை நிந்திப்பதற்கு பிறரைக் கோபமூட்டும் வார்த்தைகள்
  உபயோகிக்கப்படுகின்றன. மற்றைய சமயங்களில் இதைக்காண முடியவில்லையே? உதாரணம்-

  அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
  அன்பே சிமாவ தாரும் அறிகிலார்
  அன்பே சிவமாவ தாரும் அறிந்த பின்
  அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரெ
  என்று திருமந்திரம் சொல்கின்றதுஅண்மையில் கனடாவில் ஒருமத்த்தைச் சார்ந்தவர்கள் தம்முடைய மதவழிபாட்டின்போது கஞ்சா பாவிப்பதற்கான அனுமதியைக் கேட்டு தாக்கல் செஃத வளக்கு ஒன்று கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளதே- இதற்கும் மதங்களுக்கும் தொடர்புண்டா? அல்லது மனிதர்கள் தான் மதங்களை உருவாக்குகின்றார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சாட்ச்சியா?

  அரபுநாடுகளிலும் ஏனைய முஸ்லீம் நாடுகளிலும் ஸியா முஸ்லீம் சுனி முஸ்லீம் எனத்தமக்குள்ளேயே சண்டையிட்டு பல லட்ச்சக்கணக்கானோரைக் கொன்று குவிக்கின்றனரே-இதற்கும் மதம்தான் காரணமா? அல்லது அதைக்காட்டிப் பிழைக்கும் மனிதர்களா?.

  இராமாயணமே பல முறை பலரால் மாற்றி மாற்றி எழுதப்பட்டுள்ளனவே-இது மதங்களின் மேல் உள்ள பற்றுதலினாலா? அல்லது எழுதியவர்கள் தங்கள் புலமையை நிரூபிக்க விளைந்தமையினாலா?

  விடை தேடுவோம்.

  • ARULAKAM WORDPRESS.COM

   முட்டாளாக்கியபகுத்தறிவு —
   –கடவுள் இல்லை என்று கூறுபவன் பகுத்தறிவாதி ஆகமாட்டான். இயற்கையின் நியதியை, இயற்கையின் ஒழுங்கமைப்பை உணர்ந்து, ,அவை அனைத்திற்கும் மூல ஆற்றலாக உள்ள கடவுளை
   ஏற்றுக்கொள்பவனே, உண்மையான பகுத்தறிவாதி.
   பசுக்களைப் பலியிடுதல் பகுத்தறிவு–
   யோகா கலை சைவ மதத்தின் ஆன்மீக உடற்பயிற்சி”–(உடலுக்குள் நிகழவேண்டிய
   கிரியை ஆகும் .)
   (பசுக்களைப் பலியிடுதல் என்பது தந்திரீக சாஸ்திரங்களில் குறிப்பிட்டிருக்கக் கூடிய வசனங்களைத் தவறாகப் புரிந்துகொண்டே செய்யப்படுகின்றன .அதாவது சுவாதிட்டானச் சக்கரத்தில் சிவாமுது அருந்த வருகின்ற ஆன்மாக்களாகிய பசுக்களைப் பலியிட்டு சக்திக்கு படையல் இடுவதாகிய எமது உடலுக்குள் நிகழவேண்டிய
   கிரியை ஆகும் .)
   ARULAKAM WORDPRESS.COM
   மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
   நற்றவா! உனை நான் மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே! !
   PLESE PASS THE ABOVE MESSAGE TO YOUR FRIENDS WHO MAY BE INTERESTED ARULAKAM WORDPRESS.COM

 • ilankannan.navaradnam:

  உண்மையைத்தேடி என்னும் கட்டுரையை தந்து நல்ல பயனுள்ள கருத்து யுத்தத்தினை ஆரம்பித்து

  உண்மையைத்தேடி என்னும் கட்டுரையைத்தந்து நல்ல பயனுள்ள கருத்து

  யுத்தத்தினை ஆரம்பித்து வைத்த சிந்திப்பவன் அண்ணாவுக்கு எனது முதல்கண்
  நன்றிகலந்த வணக்கங்கள் .இங்கே எழுந்திருக்கும் கேள்வி கடவுள் இருக்கின்–
  _றாணா?அவனிருந்தால் உலகத்திலே எங்கேவாழ்கிறான்?எப்படியிருக்கிறான்?
  என்ன செய்து கொண்டு இருக்கிறான் எங்குபாத்துக் கொண்டு இருக்கிறான்.
  தூணிலுமிருப்பாரா?துரும்பிலுமிருப்பாரா?எத்தனைகேழ்விகழுக்கும் உங்களது
  விடை காகிதப்புலிகள் நாடகத்தில் இருந்துதான் ஆரம்பித்தது நானுமங்கிருந்தே
  ஆரம்பிக்கிறேன்
  மேல்கண்டநாடகத்தில் உருக்கமான காச்சி குளந்தைஒன்று மிகுந்த பசிஓடு
  தாயைக் கேக்கும் அம்மா பசிதாங்கேல்லை அடுப்படியில என்னைருக்குது அடுப்–
  _படியில பூனையிருக்குது பூனை எப்ப எழம்பும் எண்டு புருசனைதான் கேக்க_
  _வேணும் புருசன்பாவம் என்னை என்னகேக்கிறது ஏளைகளுக்கு இதுதான்கடவுள்
  விட்டவளியப்பா காரணம் ஏதும் கேக்காதை என்டுசொல்லுகிறார் இங்கைதான்
  அவர் தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தியிருக்கிறார்.யாரப்பா அந்தக்கடவுள்
  எண்டு அக்குளந்தை கேட்டிந்தால் நாடகாசியரின் கருத்துப்படி இல்லாத தொன்ரை
  உண்டுஎன்று சொல்லவேண்டி வந்துவிடுமோ எண்டுகூட எண்ணியிருக்கலாம் .
  ஏன் கடவுளை இல்லாத ஒண்டு என்று சொல்லவேணும் ,கடவுள் இருக்கின்றார்
  அது எங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை அதுவே என்கருத்தும் எதுஎது எப்படியோ
  அவரவரை பொறுத்தது.கடவுள் என்றால்யார்?என்று எங்கேயோ வாசித்தது எங்கை
  என்றுஞாபகமில்லை .இருந்தாலும் உங்களுக்கு மட்டும் சொல்லுகிறேன் தவறாக
  இருந்தால் இரகசியமாய் வைத்திருங்கோ யாருக்கும் சொல்லிக்கில்லிப் போடாதேங்கோ .
  இப்பிரபஞ்சத்தில் எதுமிகப் பெரியதோ அதையும் விடப்பல பில்லியனளவு பெரியது
  எதுவோ அதில் எது எந்தவிதக் குறைவும் இல்லாதோ உதாரணமாக சொல்வதானால்
  ஒரு அணுவைப் பலபில்லியனாகப் பிரித்து வரும் ஒருபகுதியை எடுத்து அதையும்பல
  பில்லியனாக பிரித்துவரும் ஒருபகுதியிலும் விடசிறிதளவேனும் எக்குறைபாடும்இல்லாதது
  எதுவோ அதில் எது எத்தாக்கத்தினாலும் பாதிப்படையாதது அதாவது ஒரு மெழுகுதிரியில்
  இருந்து இனோரு மெழுகுதிரியை கொழுத்தும்போது முதல் மெழுகுதிரியின் சுவாலையில்
  எப்படி பாதிப்பு எதுவும் இருக்கலையோ அதையும்விடத் துழியளவேனும் பாதிப்படையாதது
  எதுவோ அதில்எது அப்படி இருந்தால் நல்லாயிருக்கும் இப்படியிருந்தால் நல்லாயிருக்கும்
  என்று அப்படி இப்படி எப்படி என்று எதுவும் சொல்லமுடியாதது எதுவோ அதற்க்கு சமமாக
  யார் இருக்கிறாரோ அவர்தான் கடவுள். இப்போது இன்னொரு விடயத்தைப் பற்றியும்
  பார்க்க வேண்டி இருக்கிறது அது பூமிக்குள் கடவுள் இருக்கிறாரா அல்லது க டவுள்ளுக்குள்
  பூமி இருக்கிறதா என்னைக்கேட்டால் கவுளுக்குள் தான் பூமிஇருக்கிறது என்றுசொல்வேன்
  எப்படிஎன்றால் ஒருவாய்க்குள் மனிதன் இருக்கிறானா அல்லது மனிதனுக்குள் வாயிருக்கி
  றதா என்றுகேட்டால் மனிதனுக்குள் தானேவாய் இருக்கிறது.அப்படித்தான்.இது இப்படி இரு
  க்கையில் மனிதனின் ஒரு அங்கமான வாய்க்குள் மனிதனுக்கு எத்தனை வீடுகள் இதுஎவ்ளவு
  அசாதியமானதோ அந்தளவுக்கு அந்தளவு அசாத்தியமானது .

  கடவுளை எப்பேர்ப்பட்ட மாடமாழிகைக்குழ்ளோ அல்லது கூடகோபுரத்துக்குள்ளோ
  அடக்கிவிடமுடியுமா அதுமட்டுமல்ல அவரைமுழுகவார்க்க ஒருசமுத்திரம் தான்போதுமா
  அப்படியிருக்க கடவுளை எத்தனைகுடம் பாலினால் எத்தனைகூடைப் பழங்க்களால் அபிசகம்
  பண்ணமுடியும்?எத்தனை குடத்தினாலோ எத்தனைகூடையினலோ முடியவேமுடியாது,
  கடவுளுக்கு உருவமேகிடையது.அதுமட்டுமல்ல கடவுழுக்கு தேவையேதும் இருந்தால் அத்
  தேவையை இவ்வுலகத்தாரினால் நிறைவேர்றிவிடத்தான் முடியுமா.முடியவேமுடியாது
  இப்படி தேவையில்லாமல் தனதுபெயரைச் சொல்லி எவ்வெவ்வளவோ செல்வத்தை வீண
  டிப்பதை கடவுள்தான் விரும்முவாரா?இக்கேழ்விக்கு நீங்களே உங்கள் மனச்சாச்சியைத் தொட்டு
  ப்பதில் சொல்லுங்கள் உங்களிடமே விட்டுவிடுகிறேன்
  அப்படியானால் கடவுளைத் திருதிப்படுத்த எங்களால் முடியாதா?என்றகேழ்வி உங்கள்
  மனதில் எழுவது எனக்கிங்கு கேக்கிறது ஏன் முடியாது முடியும் எப்படி முடியும் சொல்கிறேன்
  பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம்மெல்லோர்க்கும் தந்தை இறைவன் இவ்வாசகம் எல்லோராலும்
  ஏற்ருக்கொள்ளப்பட்டது உண்மைதானே?இது உண்மைதான் என்றால் உங்களிடம் இப்போது
  நான் ஒருகேள்வி கேக்கப்போறேன்.நம்மெல்லோருக்கும் தந்தை இறைவன் என்றால் இவ்
  உலகில் வாழும் நாம்மேல்லோரும் சகோதரர்கள்தானே? இச்சகோதரில் சிலரோ அல்லதுபலரோ
  ஒருதொழிலும் இல்லாமல் தத்தமது தேவைகளை நிறைவேற்ற முடியாது இருக்கும்போது
  ஒருதந்தையானவர் இனிமேல் இல்லாதளவுக்கு செல்வந்தனாகிய மகநோருத்தன் வறுமையில்
  இருக்கும்தனது சகோதரர்களின் வறுமையைப் போக்குவதை விரும்புவாரோ அல்லது தனது
  அறுபதாம் கலியாணத்தை வெகுவிமர்சையாக பல்லாயிரக்கணக்கான போருழ்ச்செலவில்
  ஆடம்பரமாகச் செய்து தனக்கு தங்க முடிசூட்டிக் கெளரவிப்பதை விரும்புவாரோ இதில் எதை
  விரும்புவார்?நம் எல்லோருக்கும் தந்தையான இறைவனுக்கு எதில் திருப்தி ஏற்ப்படும்
  ஆகவே இறைவன் விரும்புவதேல்லாம் தனக்கெண்டு உந்த மாட மாளிகைகள் கூடகோபுரங்கள்
  மணிமண்டபங்கள் எதுவுமே தேவையில்லை அதற்காக செலவுசெய்யும் செல்வத்தினை
  வாழ வழியற்ற எனையவர்களுக்கு .நிரந்தரமான தொழில் வாய்ப்பினை ஏற்ப்படித்திக்
  கொடுத்து நல்லவழியில் அவர்களை வாழவைப்பதன் மூலம் இறைவனது மனதில் ningkaatha
  இடத்தினைப் பெறமுமுடிவும் இதனால்மல்டுமல்லதியனத்தில் ஈடுபடுவதன் கடவுளோடு
  தொடர்பினையும் வைத்துக்கொள்ளவும் முடியும்.தன்னை நேசிப்பது போல் இவ்வுலகதிளிருபவர்கள்
  அனைவர்களைவர்களையும் நேசித்தால் இவ்வுலகில் மட்டுமல்ல எவ்வுலகிலும் நீ நினைத்தை
  அடைய முடியும்என்பதனை விளங்கவைத்தல் எல்லோருடைய சந்தேகமும் திர்திருகும் அல்லவா
  சிந்திப்பவன் அண்ணா எதோ எனக்கு தெரிந்தை இயன்றவரை சொல்லியிருக்கிறேன்
  தெரிந்தும்தெரியாமலோ அறிந்தும்அறியாமலோ புரிந்தும்புரியாமலோ தவறுஏதும் விட்டிருந்தால்
  தவுசெய்து மன்னித்து தவறு ஏதுஎன்று சுட்டிக்காட்டவும் .
  ந,இளங்கண்ணன்.

 • அன்புள்ளவர் கையில் ஆயுதம் வைத்திருக்கலாமா?
  காலில் ஒருவரை போட்டு மிதிக்கலாமா?


 • சிவமயம்

  அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
  அன்பே சிமாவ தாரும் அறிகிலார்
  அன்பே சிவமாவ தாரும் அறிந்த பின்
  அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரெ
  என்று திருமந்திரம் சொல்கின்றது
  அன்பன், நா.சிவாஸ்

 • Egan:

  உண்மை தான் பணிபக்தா!. மனிதன் தனக்குச் சிக்கல் வரும் போது தான் கடவுள் என்பதைத் தேடுகின்றான். அந்தத் சிக்கல் துன்பத்திற்கு தன்னையும் மனித சக்திக்கு அப்பால் ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது என்று நம்பி அதையே கடவுளாக்கி கோவில் கட்டி அபிசேகம் செய்கின்றனர். மக்களும் உடல் வலி மன வலி பொறுக்காது உழைத்த பணத்தை வீணே செலவு செய்துவிடுகின்றனர். மனிதன் அறிவு சார்ந்து தெளிவு பெறும் போது கோவில் காவடிகளைத் தூக்கிப்பிடிக்கமாட்டான். அதற்கு பக்குவமும் வயதும பட்டறிவும் வேண்டும். அந்த பட்டறிவு வந்த பின்னர் தான் இதை எழுதவும் துணிவு வருகின்றது. நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் இந்த உரையாடலை யாரும் பொருட்படுத்தவில்லை என்று அதில் உண்மையில்லை. அதற்கு எடுத்துக் காட்டே நீங்கள் தான்.

 • Egan:

  பனிப்புலம் சனசமூக நிலையம் திருத்துவதற்கு எமது சமூகம் எதிர்நோக்கும் சிக்கல்களை தீர்ப்பதற்கு முடியாமல் இருக்கின்றது. சாந்தையில் கோவில் புனருத்தாரணத்திற்கு அடிக்கல் நாட்டுகின்றனர். கடவுள் கோவில் என்பது பற்றி வாதம் செய்து கொண்டு இருக்கின்றோம். பல தடவை இந்த கடவுள் கொள்கையின் நோக்கம் என்ன? இதனால் யார் நன்மை பெறுகின்றார்கள்? என்பதெல்லாம் பார்த்தோம். ஆயினும் எங்களுக்குள் பதிந்து விட்ட கடவுள் என்ற எண்ணக்கருவை மற்ற முடிவதில்லை.

  இந்த இடத்தில் சித்தர்கள் கூடத் தேடிக்கண்டு பிடிக்காத இடத்தில் எல்லாம் மனம் தான் என்று கூறிச்சென்றுள்ளார்கள். இந்தப்பாடலைப் பாருங்கள்.
  கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
  கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே (அடிமைகள்)
  கோயிலும் மனத்துளே குளங்களும் மன்த்துளே
  ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே
  – சித்தர் சிவவாக்கியர்

  • பணிபக்தன்:

   இதனுடைய பொருள் உங்கள் உரையாடலை யாரும் பொருட்படுத்தவில்லை என்பதுதான். நாளை உங்களுக்கு பிரச்சனை வரும் போது நீங்கள் காவடி எடுத்து ஊர் சுற்றி வருவீர்கள். அப்போது இந்த இடத்தில் பேசியதை உங்கள் வசதிக்கு ஏற்ற வகையில் அப்போது மறந்து விடுவீர்கள். இதுதான் நான் கண்ட உலகம். எப்போதும் தன்னுடைய பிரச்சனை என்று வரும் போது அவரவர் பிரதிபலிப்பது பலவிதமாக இருக்கும். எந்த சித்தர் என்ன சொன்னார் என்பது அப்ப உண்மையாக ஞாபகம் இராது. மேலும் வாசிகசாலையோ மன்றமோ கோயில் மாதிரி கடவுள் ஒன்றும் கிடையாது. முன்னுக்கு முரணாக பேசும் போது அதைப் பற்றி ஒருவரும் ஒன்றும் கேட்கமாட்டார்கள். எல்லாரும் தன்னுடைய அலுவல்..அல்லது அந்த வயதோடு முடித்து விடுவார்கள்.

   • அழ பகீரதன்:

    காவடி என்பது அற்புதமான கலை. அந்த கலையை கலைவிழாக்களில் பயன் படுத்துகின்றார்கள். காவடி ஆடுவதில் ஒருதவறும் இல்லை. அதற்கும் கடவுளுக்கும் முடிச்சுப்போட தேவையில்லை, பாற் காவடி, கலையாடல் எல்லாமே இரசிக்கும்படியான கலைகளாக பார்த்தால் இந்த விவாதம் தேவையில்லாத‍து. அக்கு பஞ்சர் மருத்துவத்தில் ஊசி குத்துகிறார்களே. அதுஅதை அந்த‍ அந்த கோணத்தில் வைத்து ஆராய வேண்டும். மேலும் இந்த பகுதியில் அய்யர் மார் காவடி எடுப்பதில்லை என சொல்லப்பட்டது. ஆதியில் தொழில் பிரிப்பு இருந்த‍து. அதன் படி பிராமணர் கோயிலில் பூசை செய்வது தொழிலாயிற்று. காவடி எடுப்பது பக்தியின் விளைவு. பிராமணர் பூசை செய்வது பக்தியின் விளைவல்ல. அது அவர்களது தொழில். காவடி எடுப்பது தொழில் அல்ல. அது கடவுளின் மேல் பக்தியால் செய்வது. ம‍த த‍த்துவங்களை பிராமணர் தான் உருவாக்கினார்கள் என பார்ப்பது பிளையானது. பிராமணரை பூசைக்கு வைத்த‍து நான் நினைக்கின்றேன் கோயிலை கட்டுவித்த அரசர்களும் அவர்களை அண்டிப்பிழைத்தவர்களும் தான்.

 • எனதன்பின் சந்திரகாஸன் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கருத்துக்கள் அனைத்தும் ஆக்கப்பூர்வமானவையும் உண்மையானவையும் கூட.!
  நெஞ்சுபொறுக்குதிலையேஇந்தநிலைகெட்டமாந்தரை நினைந்துவிட்டால்
  அஞ்சி அஞ்சி சாவார் இவர்கள் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே! கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றால் உயிர்களைக் கொல்லும் துப்பாக்கிரவையிலும் இருப்பாரா?
  கோயில்கள் கொள்ளையரின் கூடாரம்.!
  வியாபாரிகளின் விற்பனைக்கூடம்.!
  மதம் பிடித்த மதவாதிகளின் மறைவிடம்.!
  அரசியல் வாதிகளின் பதுங்குழிகள்!
  மனிதனை தான் சார்ந்தோ தன் சமூகம் சார்ந்தோ சிந்திக்க தடுக்கும் சிறைக்கூடங்கள்.!!
  • உங்கள் கருத்துப்படிஎங்கள் ஊர்களில் குச்சுக்கொரு கோயில் இன்றும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். நலிந்தோரை நலிந்தோராய் தொடர்ந்து வைத்திருப்பதற்காக
  கேட்டால் பழமொழி சொல்லுவார்கள்.கோயில் இல்லாத ஊரில் குடி இருக்கவேண்டாம் என்று பழமொழி எல்லாவற்றும் சொல்லாம்.உதாரணத்துக்கு தனக்கு மிஞ்சினதுதான் தானமும் தருமமும் என்றால் ஏன் எள்ளென்றாலும் எட்டாக பகிர்ந்து உண் இதில் எந்த பழமொழியினை நாம் கடைப்பிடித்து வாழ்வது?.
  காசியினைப் பாருங்கள் ஒருபுறம் பிரேதம் மிதக்க ,அதே தண்ணீரில் மறுபுறம் நின்று குழிப்பார்கள்.
  கஞ்சா குடித்துவிட்டு எரியும் பிரேதத்தினை பிய்த்து நரமாமிசம் உண்பார்கள் .அறிவுடைய சமூதாயமாக மக்கள்வரக்கூடாது என்று திட்டமிட்டு செய்த சதிதான் கோயில்கள் எல்லாம்.

  .
  .

  • அழ பகீரதன்:

   மரித்தபின் நரன் என்ன மிருகம் என்ன எல்லாம் ஒன்றுதான். காசியில் வேறு என்னத்தையாம் புசிப்பது. நான் சிறுவயதில் கலைமுத்துக்கள் கையெழுத்து பிரதியில் எழுதியதாக ஞாபகம். கடவுள் இருப்பதாகவும் இல்லையெனவும் விவாதிப்பது முட்டாள்தனம் என்று. கோயில் எமது அகத்தில் அமைதியை உருவாக்குதற்குத்தான். கோயில் கட்டுவதில் பணத்தை கொடுப்பவர்கள் கொடுக்கட்டும். விட்டுவிடுங்கள். ஆன்ம ஈடேற்றத்திற்கு அது உதவும். எங்களுக்கு அதனால் என்ன பிரச்சனை என்றுதான் கேட்கிறேன். அரசியல் வாதிகள் மக்களை ஏமாற்றுவதை விடவா கோயில் நடத்துபவர்கள் மக்களை ஏமாற்றுகின்றார்கள்.

 • Chandrahasan:

  கடவுள் எந்த வடிவிலும் இருப்பது பிரச்சனை இல்லை. அது இல்லாமல் இருப்பதும் பிரச்சனை இல்லை. ஆனால் கடவுள் என்ற கருதுகோளை வைத்து பிழைக்கும் மதங்களும் மனிதர்களும்தான் பிரச்சனை. கடவுளையே காப்பாற்றி வருவதாக பாசாங்கு பண்ணும் இந்த அமைப்புக்களும் ஆசாமிகளும் பிற்பட்ட சமூகங்கள் பொருளாதாரத்திலும் அறிவாற்றலிலும் முன்னேற விடாமல் தடுக்கின்ற பெரும் தடைக்கல்லாகும். மனிதர்களை குறிப்பாக நலிந்த மனிதர்களை மனிதர்கள் மதிக்கும் உயர்ந்த பண்பாடு கொண்ட இந்த நாடுகளில் தேவாலயங்களை இடித்து சொப்பிங் சென்ரர்கள் கட்டிக்கொண்டிருகிறார்கள். எளிந்த மனிதர்களை இழிவாக நடாத்தும் எங்கள் ஊர்களில் குச்சுக்கொரு கோயில் இன்றும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். நலிந்தோரை நலிந்தோராய் தொடர்ந்து வைத்திருப்பதற்காக.

  யேசுவும் புத்தரும் நபியும் அக்காலத்திலிருந்த சமூக ஒடுக்குமுறைக்கெதிராக நலிந்தவர் பக்கமே இருந்தார்கள். ஆனால் அவர்களின் பெயரில் உருவான மதங்களோ அதற்கெதிரான வேலைகளைச் செய்கின்றன. இலத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள கத்தோலிக்க அமைப்புக்கள் இதற்கு விதிவிலக்கு. இந்து மதத்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அதன் செல்வாக்கு அழியும்வரை இந்தியாவும் இந்தியர்களும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையாக வளரும் சாத்தியமே இல்லை.
  இந்த மதங்கள் எல்லாம் அழிந்த பின்னர் இந்து பௌத்த தத்துவங்களில் கடவுளை தேட முயற்சிக்கலாம். யேசுவும் நபியும் சமூக நெறியை உருவாக்க கடவுளை பயன்படுத்னார்களேயொழிய அவர்களால் கடவுளை தேடவோ அறியவோ இயலவில்லை. இப்போதே தத்துவங்களை ஆராய்ந்து கடவுளை தற்செயலாக கண்டுபிடித்தால் மதவாதிகளும் சாமியார்களும் அதை வைத்து பிழைத்து மக்களையும் நாட்டையும் உருப்பட விடமாட்டர்கள்.


 • சிவமயம்

  கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை மனதன். இதை உங்களால் உணர முடிகின்றதா?
  இது சினிமாப் பாடல் அல்ல உண்மை நிலைதானா என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன்
  அன்புடன், நா.சிவாஸ்

  • இளையவன்:

   நீங்கள் சொல்வதில் உண்மை இருபது போல் தான் தெரியுது .அதாவது மனிதனுக்குள் கடவுள் இருக்கிறார் ஆனால் மனிதர்களில் பலர் ……………….
   மனிதம் உள்ள மனிதர்களை தேடுவோம் (உருவாக்குவோம்),இவர்கள் கிடைத்துவிட்டால் கடவுளை கண்டுபிடிப்பது மிக மிக எளிது என நான் கருதுகிறேன்.
   அன்புடன் இளையவன்

 • Egan:

  கடவுள் இருக்கிறான் கடவுள் இருக்கிறாள் கடவுள் இருக்கிறார். தூணிலும் துரும்பிலும். எந்த வடிவில்? எப்படி?????????
  கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை
  கணடவர் யாரும் சொன்னதும் இல்லை சொன்னவர் யாரும் கண்டதுமில்லை
  கடவுளை உலகில் கற்பித்தவன தான் முட்டாள் மனிதனடா கடவுள் பெயரைப்
  பரப்புகின்றவன் யோக்கியன் இல்லையடா இது நான் சொன்னதில்லை
  இந்த நாடறிந்த உண்மை, கல்லாய் இருக்கும் கடவுளுக்கு ஏன்டா பாலால் அபிசேகம்
  இல்லாதிருக்கும் பிள்ளைகளுக்குத் தந்தால் ஏழையின் பசியாறும்
  பக்தி என்பது தனிச் சொத்தாகும் நமக்கது தேவையில்லை
  ஒழுக்கம் என்பது பொதுச் சொத்தாகும் காப்பது நம் வேலை
  இது நான் சொன்னதில்லை இந்த உலகறிந்த உண்மை கோயில் குளம் கோபுரத்தை
  கட்டியதெல்லாம் சுயநலக்காரன், பொது மக்கள் பணத்தில்- எழுப்படா கேள்விகளை
  கேட்டுக் கேட்டுக் குட்டை உடைப்பது சுயமரியாதையடா!
  இதை நான் சொன்னதில்லை நாடறிந்த உண்மை

  கேள்விகளால் வேள்வி செய்வோம், நியாயம் பிறக்கட்டும்

  தொடரட்டும் வாதம். வாழ்க

 • சிந்திப்பவன்
  எனதுஅன்புக்குரிய சிவாஸ் கடவுளுக்கு பகவற்கீதையோ,பைபிளோ,குர்ரானோ பாமாலை சூடவில்லை. ஆனால் இதுதான்கடவுள் என்று கடவுளுக்கு வரவிலக்கணம் கொடுக்கிறது.இப்படி வாழுங்கள்,இப்படியாக வாழாதீர்கள் என்று வழி சொல்கிறது .விளங்காத சில விடயங்களை விளங்க வைக்க முயர்ச்சி செய்கிறது அதாவது உண்மையான கடவுள் யார்?கடவுள் எப்படிப்பட்டவர்? அவருக்கு எதாவது பெயர் இருக்கிறதா?கடவுள் எவ்வாறு எம்மீது அக்கறை உள்ளவரா கடவுளிடம் நாம் எவ்வாறு நெருங்கிவருவது? ஏன் துன்பங்களையும் ,துயரங்களையும் வேதனைகளை எம்மை அணுக அனுமதித்தார்? ஏன் நாம் சாகவேண்டும் என்று பல சொல்லலாம். தேவாரம் ,திருவாசகம் போன்ற பாமாலைகள் கடவுளை வாழ்த்துகிறதுஅல்லது ,போற்றுகிறது… பைபிளின் நடுப்பகுதியில் இருக்கும் சங்கீதமும் இப்படியாக கடவுளை வாழ்த்துகிறது, அல்லதுபோற்றுகிறது.இதற்க்காக இவை எல்லாம் சொல்வது சரி என்ற வாதத்துக்கும் நான் வரவில்லை. அன்பின் ஏகன் எதற்க்கும் ஏன் என்று கேள்வி கேட்டு பகுத்தறிவினை வளர்க்கச்சொல்லி நல்ல விடயம் கூறிச் சென்றீர்.

 • Egan:

  கடவுள் என்பது என்ன? – பொருளா அல்லது கருத்தா?
  பொருள் என்றால் பொருளுக்குரிய தன்மைகள் பண்புகளோடு கடவுளை நிரூபித்துக்காட்ட வேண்டும். அது முடியாதது. எனவே கடவுளைப் பொருள் என்று சொல்ல மாட்டார்கள். அப்படியாயின் கடவுள் என்பது கருத்து என்று தான் சொல்வார்கள். அப்படியாயின் கருத்து என்றால், உலகம் தோன்றாத முன்பு பிரபஞ்சம் தோன்றாத முன்பு, இந்தக் கருத்து எங்கிருந்து தோன்றியது? எப்படித் தோன்றியது? எப்படி தோன்ற முடிந்தது?

  இப்படி ஒரு கருத்து எந்தப பொருளிலிருந்து தோன்றியது? இப்படி ஒரு கருத்து எந்தப் பொருளிலிருந்து தோன்றியது?
  இப்படிக் கேட்டால் அவர்கள் திகைத்துப் போவார்கள். குழம்பி, கடவுள் என்கிற கருத்து அதியுன்னதமானது. அற்புதமானது. அந்தக் கருத்துக்கு எந்தப் பொருளின் சார்பும் தேவையில்லை. அது எந்தப் பொருளிலிருந்தும் தோன்ற வேண்டிய அவசியமும் இல்லை. அது தோன்றுவதற்கு எந்தப் பொருளும் இருந்திருக்க வேண்டிய கட்டாயமுமில்லை என்பார்கள். இப்படி எந்தப் பொருளிலிருந்தும் தோன்றாத எந்தப் பொருளையும் சாராத ஒரு கருத்தே ‘கடவுள்’ என்பார்கள். அப்படி ஒரு கருத்து எதுவும் சுயேச்சையாய் தேன்றவும் முடியாது என்பதையே விஞ்ஞானம் நிரூபணம் செய்வதால் இந்த வாதத்pன் முடிபுகளை அறிய முடியும். ஏன் என்ற கேள்வியினூடாகவே பகுத்தறிவை வளம்படுத்தலாம்.

 • அன்பான சிந்திப்பவர்க்கு நான் எழுதிய ஆடை என்ற சொல் பருத்தியினாலோ பட்டினாலோ ஆன ஆடை இல்லை பாவினால் ஆன ஆடை என்பதை தாங்கள் அறிவீர்கள் இருந்தும் ஓர் விதண்டாவாதம்
  செய்யவிரும்புகின்றீர்கள் என்று நினைக்கின்றேன்
  நன்றி அன்புடன், நா.சிவாஸ்

 • கஞ்சி குடிப்பதிற்க்கிலார் அதன் காரணங்கள் எவையுமென்று
  அறிவுமிலார் தினம் பஞ்சமோ பஞ்சமென்று பரிதவித்தே
  துடி துடித்தே அஞ்சி மடிகின்றாரே இவர்
  துயர் துடைக்க வழி இல்லையா?
  அஞ்சுபவர்கள் இருக்கும் வரை அச்சப்படுத்துவர்கள் இருப்பார்கள்
  எமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்..
  பாலுட்டி இனம் இல்லாத பாம்பினால் பால் குடிக்கம்முடியாது .பிளவு பட்ட நாக்கு.உள்ள.பாலுட்டி இனம் இல்லாதது. பாம்பு பால் குடிக்கும் என்று எண்ணி பாம்புக்கு பால் வைக்கும் சனம் இருக்கும் வரை
  கல்லு பால் குடிக்கும் என்று எண்ணுபவர்கள் இருக்கும் வரை
  கல்லுக்கு பால் அபிசேகம் செய்து கொண்டு சுற்றாடலில் உள்ள குழந்தைகள்
  பசிக்கு பால் குடித்ததா என்று சிந்திக்காத சனம் இருக்கும் வரை
  பைபிளில் அப்பிளை ஆதாம்.,ஏவாள் சாப்பிட்டதாலை நாங்கள் சாகிறோம் என்றால் /சோதனை செய்த முக்காலத்தினையும் தெரிந்த கடவுளுக்கு தெரியாதா ஆதாம் ஏவாள் அப்பிளை சாப்பிடுவினம் என்று விபரம் இல்லாத சனம் இருக்கும் வரை … ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்..……..
  தொடரும்

 • அழ பகீரதன்:

  மதம் தான் அரசியல் அரசியல் தான் மதம் என்றும் சொல்ல‍லாம்

 • அழ பகீரதன்:

  ஆயுதம் பற்றி நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என நினைக்கின்றேம். ஆயுதம் இன்றி அரசியல் இல்லை என்பது போல் தான். ஆயுதங்களை வைத்து தான் மதங்கள் தோன்றின. மதங்களும் அரசியலின் வடிவம் தான். புத்தர் தான் ஆயுத‍த்தை எதிர்த்த ஒரே ஒரு மத வாதி. மற்ற எல்லா மதவாதிகளும் ஆயுத‍ம் ஏந்திய அரசர்களுக்கு பின் நின்றவர்கள். மாறாக புத்தர் மட்டுமே ஆயுதங்களை கைவிடுமாறு போதித்தவர். எனது கணிப்பில் புத்தரே புனிதராக இருக்கின்றார்.

 • அழ பகீரதன்:

  ஆக மொத்த‍த்தில் இயேசு சித்துவேலை செய்திருக்கின்றார். கழுதைகளை குதிரைகளாக மாற்றியது போன்றது தான். பிரபஞ்சத்திலுள்ள சக்தியை உள்வாங்கி அந்த சக்தியை பயன் படுத்தியே அவ்வாறு செய்திருக்கின்றார். இந்த ஞான‍ம் எல்லோருக்கும் வாய்க்கப்பெறாது. நாம் எம்மைவிட அதீத ஆற்றலுள்ளவர்களை தெய்வமாக்குகின்றோம். மனிதரில் மாணிக்கங்கள். 2010 ஆண்டுக்கு முன்பே இத்தகைய ஆற்றல் மிக்கவர்கள் இருந்திருக்கின்றார்கள். இதை கண்கட்டி வித்தை என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

 • . யூதருக்கு ராசாவாகப் போகிற ஒருவர் பிறந்து இருக்கிறார். வானசாஸ்திரிகள் செய்தி கேட்டு எருசலோமிருக்கும் ஏரோது ராஐ கலக்கம் அடைகிறார்.ஆசாரியர்களை கூப்பிட்டு இயேசு எங்கே பிறந்து இருக்கிறார் கண்டு பிடித்து கொலை செய்யகட்டளை பிறப்பிக்கிறார்.இயேசுவை ஒருவராலும் கண்டு பிடிக்கமுடியாத நிலையில் ஆத்திரம் அடைகிறார்.பின்பு பெத்லகேமில் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்குழந்தைகளை கொல்லும்படி கட்டளை பிறப்பிக்கிறார். காவலாளிகள் வீடு வீடாக நுளைந்து ஆண் குழந்தைகளை தாயின் கைகளில் இருந்து பறித்து கொல்லுகிறார்கள்.கனவிலே இதை அறிந்துகலிலேயோவில் உள்ள நாசரேத்துக்கு தப்பி செல்கிறார்கள்.இயேசுக்கு காலப்போக்கில் ஆறு சகோதரர்கள் யாக்கோபு, யோசே,சீமோன்,யூதா, மற்றும் பெயர் ஞாபகம் இல்லை இரண்டு பெண் சகோதரிகள்.
  தகப்பனார் யோசேப்பு ஒரு தச்சர் .மகன்மாருக்கும் தச்சு வேலை பழக்கி எல்லோரும் தச்சுவேலை செய்கிறார்கள். 12 வயதுள்ளவராக நாசரேத்திலிருந்து எருசலேமில்நடக்கின்ற பஸ்கா பண்டிகைக்கு போகிறார், திடீரென இயேசுவைக் காணவில்லை .எல்லா இடமும் தேடிகண்டு பிடிக்காமல் மூன்றாவது நாள் கண்டுபிடிக்கிறார்கள். ஒருஆலயத்தில் யூதபோதகர்கள் மத்தியில் பல கேள்விகள் கேட்டுக்கொண்டிந்தார்.இப்படியாக 17 வருடங்கள் கழிந்துவிட 30 வயதாகும்போது யோர்தான் நதிக்கரையில்யோவானால்முழுக்காட்டபப்படுகிறார். முழுக்காட்டப்பிறகு முதல் செய்த அற்புதம் 40லீட்டர்தண்ணீரை திராட்சைரசமாக்கி திருமணவீட்டில் கொடுக்கிறார்.இப்படி தொடர்ந்து பல அற்புதங்கள் செய்கிறார். மரித்தோரை உயிர்த்தெழுப்புக்றார்..நோயாளிகளை குணமாக்குகிறார். ஐந்து ரொட்டிகளையும்,இரண்டு மீன்களையும் 5000 ஆண்களுக்கும் திரளான சனங்களுக்கும் உணவு அளிக்கிறார். புயலை அடக்குகிறார்.கடலின் மேல் நடக்கிறார்.மலை பிரசங்கம் செய்கிறார். அதில் ஒரு வரி மற்றவர்கள் என்ன உனக்குசெய்ய வேண்டும் நினைக்கிறீயோ அதையே நீ அவர்களுக்கு செய். இயேசுவின் சரித்தில் இயேசு இமயமலை போனதாகவோ சித்தர்களிடம் கற்றதாக ஒன்றுமில்லை.இயேசு பிறந்து நடந்து திரிந்த தேசங்கள் எல்லாம் மத்தியதரைக் கடலை அண்டிய பகுதிகள் .இஸ்ரவேல்,எகிப்த்து,உள்ள நகரங்கள் மட்டுமே.( யூதேயா,பெத்லகேம்,எருசலேம்.நாசரேத்து,கானான் இப்படியாகபல) போக்குவரத்துக்கு களுதை,ஒட்டகம் போன்றவை தான் பாவித்தார்கள். இமயமலை இந்தியாவில் இருக்கிறது இவ்வளவு தூரம்நடந்து போகஇயலாது . முழுக்காட்டலுக்கு பிறகு பிரசித்திபெற்றவிடயங்கள் மட்டும் தான் பெரும்பாலும் புத்தகங்களில் குறிப்பிட்டு உள்ளது

  .

 • அழ பகீரதன்:

  அந்த சித்துவிளையாட்டுக்களை வைத்து தானோ யேசு நாதர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தவர், இருக்கலாம். மதக்கருத்துக்களை சித்தாந்த ரீதியா்க நோக்காமல் சடங்கு ரீதியாகவும் கோயில் சிற்பங்கள் என்ற ரீதியிலும் நோக்கி கேள்விகள் கேட்பதில் அர்த்தமில்லை. அத்வைதம் துவைதம் சைவசித்தாந்தம் என பல உண்டு. அவற்றினூடாகவே மத கருத்துக்கள் ஆராயப்பட்டு உண்மைப்பொருளை அடையவேண்டும். பத்தாம் வகுப்பில் திருவருட்பயனை படித்திருப்பீர்களே. சித்தாந்த கருத்துக்களை சாதாரண அறிவு படைத்தவர்கள் விளங்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதாலேயே கதைகள் உருவாக்கப்பட்டன.கதைகளை கதைகளாகவே பார்க்கவேண்டும். உலகியல் நடப்புக்களை தான் தெய்வங்களில் ஏற்றி கதை சொன்னார்கள். தெய்வத்தில் ஏற்றி அறத்தை வலியுறுத்தினால் மக்களிடம் எடுபடும் என்ற நோக்குடனேயே அவை புனையப்பட்டன. உண்மையில் புராணங்கள் எல்லாமே புனை கதைகளே.

 • chandrahasan:

  தற்காலத்தில் மிக சிறந்த விஞ்ஞானியான Stephen Hawking அண்மையில் வெளியிட்ட தன்னுடைய புத்தகத்தில் “Spontaneous creation is the reason there is something rather than nothing, why the universe exists, why we exist,” Hawking and Mlodinow announce at this point. “It is not necessary to invoke God to light the blue touch paper and set the universe going.” எனக் குறிப்பிடுகிறார். பிரபஞ்சம் பற்றிய பல வருட தீவிர ஆராய்ச்சின் பின்னர் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை புரிந்து கொள்ள கடவுள் தேவைப்பட மாட்டார் என மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். மனிதன் காரணங்கள் புரியாத நிகழ்வுகளின்போது கடவுளே காரணமென்றான். மின்னல் இடி வரும்போது ஏன் என்று புரியாமல் ‘அர்ச்சுனா காப்பாத்து’ என்று அலறினான். ஆனால் இன்று அவுஸ்திரேலியாவில் சூறாவளி வருவதற்கு முதலே அதை இனங்கண்டு முழு நகர மக்களையும் அப்புறப்படுத்தி காப்பாற்றியுள்ளார்கள். நாளை சூறாவளியை திருப்பி அனுப்பக்கூடியளவுக்கு விஞ்ஞானம் வளரலாம்.
  இந்தப் பிரபஞ்சத்தை இயக்க தேவைப்படாத கடவுள் ஏமாளிகளுக்கும் ஏமாற்றுபவர்களுக்கும் அவசியம் தேவைப்படுகிறார். ஏமாளிகளும் ஏமாற்றுபவர்களும் இருக்கும்வரை கடவுளை இந்த உலகிலிருந்து எவராலும் அகற்றிவிடமுடியாது.

 • அவதானி:

  யேசுநாதர் தனது 17ஆவது வயது முதல் 21ஆவது வயதுவரை இமயமலை சென்று அங்கிருந்த சித்தர்களிடம் மந்திரங்கள், தந்திரங்கள் மற்றும் சித்து விளையாட்டுக்களைக் கற்று வந்துதான் பின்னர் யெருசலேமில் அப்ப விளையாட்டுக்களைக் காட்டினார் எனக் கேள்விப்பட்டதுண்டு-இது உண்மை என்றும் இவை அவரின் சரித்திரத்திலிருந்து மறைக்கப்ப்டுள்ளன என்றும் கேள்வியுற்றள்ளேன். இதன் விளக்கம் யாராவது தரமுடியுமா?

 • எனதன்பின் பகீரதன் நன்றி உங்கள் கருத்துகளுக்கு! கருத்துகளை நாங்கள் ஆராய்வோம். நான் குறிப்பிடுவது கடவுள் உண்டா ?இல்லையா?கேள்வி மட்டுமே ஒழிய எனது பதில் விவாதம் முடியவரும். நீங்கள் குறிப்பிட்டது போல் யேசு,புத்தர்,முகமது எல்லோரும் தாங்கள் கடவுளில்லை. கடவுளின் தூதுவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.அப்படியானால் யார்கடவுள்? பைபிளில் யோவான் புத்தகத்தில் நான் கடவுளிடம் செல்லும் வழி என்னையன்றி வேறுஒருவர் மூலமும் கடவுளை அடையமாட்டீர்கள்.சிலுவையில் அறையும்போது யூதர்களை மன்னிக்குமாறு யேசு கடவுளிடம் மன்றாடியது..இப்படி பல உதாரணங்கள் உண்டு. யேசு,புத்தர்,முகமது அனைவரும் பெரிய மகான்கள்.போதனைகள் அனைத்தும் மிகவும்,மிகவும் சிறந்தது. மாற்றுக்கருத்துக்கே இடம் இல்லை.யேசுவின் மலைப் பிரசங்கத்தினை பலதடவை கேட்டும்,வாசித்தும் இருக்கிறேன்.மிக,மிக சிறந்த பிரசங்கம் புகழ என்னிடம் வார்த்தைகள் இல்லை. உலக சரித்திரத்தினையே கி.மு/கி.பி என்று பிரித்த மாகான். அற்புதங்கள் பல செய்தவர்.உன்னைப்போல் பிறரையும் நேசி. .பலவிடயங்கள் எழுதலாம். . சிலுவை பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். உதாரணமாக என்னை கொலைசெய்ய பாவித்த ஆயுதத்தை எனது பிள்ளைகள் வணங்குவார்களா? இதேபோல் எமதுபிதாவாகிய யேசுவைக் கொலை செய்த பாவித்த சிலுவையை (ஆயுதத்தை,) வணங்கலாமோ? .சிலுவையை வணங்கச்சொல்லி பைபிளில் எந்த அதிகாரத்தில் இருக்கிறது.இந்துத் தெய்வங்களிடம் ஆயுதங்கள் இருப்பது கொடியவரை அழித்து நல்லவர்களை காப்பாற்ற மேலோட்டமாக பார்க்கும் போது சரி.கடவுள் கொடியவர்களை படைக்காமல் தவிர்த்து இருக்கலாம்தானே.அன்பே சிவன் என்றால் ஆயுதம் ஏன் கடவுளின் கையில் கடவுளிடம் அன்பு பாசம்,கருணை,நட்பு தயவு இரக்கம் ஒன்றுமில்லயா?ஆயுதங்களில் மட்டும் தான் நம்பிஇருக்கிறாரோ? கடவுள் தங்கள் வல்லமைகளில் நம்பிக்கை இல்லையோ காளியின் கையில் பெரிய கத்தி ஒருவரை வெட்டி இரத்தம் ஓடிய வண்ணம் இருக்கும் படத்தினை இது தான் கடவுள் என்று சொல்லி பிள்ளைக்குகாட்ட முடியுமா?பிள்ளை பயந்து விடும் அல்லவா? நன்றிகள் தொடரட்டும் கருத்துக்கள்

 • அழ பகீரதன்:

  யேசுவோ புத்தரோ தாம் கடவுள் இல்லை என்பதை நன்றாக உணர்ந்துகொண்டே தமது போதனைகளை செய்தார்கள். நான் யேசுவின் போதனைகளால் இளவயதில் கவரப்பட்டவன். இந்து மத தெய்வங்கள் ஆயுதங்களை வைத்திருப்பது கொடியவர்களை அழித்து நல்லவர்களை காப்பதற்கு. சிலுவை என்பது யேசுவை அறைந்த ஆயுதமே தவிர யேசு மற்றவரை கொல்ல பயன்படுத்திய ஆயுதமல்ல. அந்தவகையில் ஒரு குறியீடாகவே சிலுவை பயன்படுத்தப்படுகின்றது.யேசுவின் போதனைகள் மனிதகுல உயர்வுக்கானவையாக பார்க்கப்படக்கூடாதா? கிறீஸ்தவர்களிம் மூட கருத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்பதற்காக யேசுவிடம் நல்ல அம்சங்கள் இல்லை என்று கூறிவிடமுடியாது.இந்து மதம் ராமரை தெய்வமாக கருதுகிறது. அவர் போரிட்ட இராவணனை சிவன் பக்தன் என கூறுகிறது. இராவணனுக்கு வரம் கொடுத்ததும் தெய்வம் இராவணனை அழித்ததும் தெய்வம்.அரக்கர்களுக்கு கொல்லும் சக்தியை வழங்குவதும் தெய்வம் அரக்கரை துவம்சம் செய்வதும் தெய்வம்.இயக்கம் என்பது கோடானு கோடி அணுக்களின் கலவையும் எதிர்நிலையுமாகும். ஒவ்வொரு அணுக்களும் சக்தியுடையவை. இது இடையறா போராட்டம். இந்த இயக்க வெளிப்பாடே பிரபஞ்சம். ஆக பிரபஞ்சம் ஒன்று அல்ல… வேறுவேறாய் விரிந்தன. பேரண்டம் கோடான கோடி அணுக்களின் கலவை. இவற்றை இயக்க ஒருவன் அல்லது ஒன்று இருந்தால் எல்லாம் நல்லபடி நடக்கும். ஆனால் அவ்வாறு இல்லை. உண்மை எப்போதுமே கசப்பானதாக தான் இருக்கும்

 • அன்புள்ளம் கொண்ட நண்பன் சிவாஸ்!உங்கள் கருத்துகளுக்கு நன்றி. இது ஒரு கருத்களம் மட்டுமேதான்.எனது கருத்து மட்டுமே சரி.உங்கள் கருத்து பிழையென நான் வாதாடமாட்டேன். எனது கருத்துகளிலும் பிழை இருக்கலாம் .எமது சமுதாயத்திற்க்கு தேவையான விழிப்புணர்வை நான் அல்ல
  நாங்கள் கொடுக்கவேண்டும்.அண்டசாராசரங்களை படைத்து கட்டிகாக்கும் பரம்பொருள் அழகு இல்லாதவர் என்றா எண்ணுகிறீகள். சாதாரண மக்களால் அவரை அழகு படுத்தமுடியுமா?சிந்திப்போம்!நீங்களே குறிப்பிட்டிருந்தீர்கள்.சாதிபாகுபாடு அசிங்கம் அது அழிக்கபடவேண்டும்.நல்ல கருத்து வரவேற்க்கிறேன். நான்தான் சாதிப்பாகுபாட்டை வகுத்தேன். எனி நானே மாற்ற வேணும் நினைத்தாலும் என்னால் அது முடியாது (ஒரு சில பிராமணர்களின் சிந்தனையோ) இது இப்படியாக பகவற்கீதையில் எழுதிஇருக்குது. எல்லா நாடுகளிலும் சாதிப்பிரிவு இல்லை.சமயப் பிரிவுகள் மட்டுமே உண்டு. நான் குறிப்பிட்ட விடயங்கள் புனித நூலில் இருக்கும் சில தூசுகள் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். புனிதநூலில் உள்ள தூசுக்களை ஏற்றுக்கொள்வதா?தூசுக்களை அகற்றி துப்பரவு செய்வதா நல்லது. இவை அழுகு படுத்தும் ஆடைகள் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். ரகசியமாக ஒரு விடயம் கூறுகிறேன்.கேளுங்கள் உடுப்பு போடுகிற அனைவரும் கடவுளின் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. கடவுள் உடுப்புடனா பிறக்கும்போதே படைத்தார். அவர் செய்தது சரியில்லை என்றுதானே கடவுளுக்கு எதிராக நாங்கள் உடுப்புபோடுக்கிறோம். எங்களை நாகரீகம் இல்லாமல் நாகரிகம் இல்லாத ஆள் படைத்தாரோ? சமுதாயத்திற்க்கு தேவையான விழிப்புணர்வை நான் அல்ல நாங்கள் ஏற்படுத்தவேண்டும்.
  மனைவி சீதை இராவணால் கடத்தப்பட்டதை மீட்டுவர ராமர் அணிலை உதவிக்கு பிடித்து தடவி தடவி பாலம் கட்டினாராம். தடவினாதாலை அணிலின் முதுகில் மூன்று கோடு வந்ததாம். இது பகவற்கீதையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. உள்ளது.அவுஸ்ரேலியாவில் இருக்கும் அணிலை யார் தடவினதாலை மூன்று கோடு வந்தது. சிந்திப்போம்.
  யேசுநாதரை சிலுவை அறையும்போது யேசுநாதரே வேண்டினார் கடவுளே இவர்களை மன்னியும் இவர்கள் செய்வது என்னவென்று அறியாது செய்கிறார்கள் யேசுவே வேறு ஒரு கடவுளிடம் மன்றாடுகிறார் என்றால் வேறு யார்அந்த கடவுள்?? கருதுப்பரிமாற்றம் தொடரட்டும்

 • N.sivas:


  சிவமயம்

  அன்பான சித்திப்பவர்க்கு.

  கடவுள் உண்டா? கடவுள் இல்லையா? என்ற தலைப்பில் மிகவும் நல்ல கருத்துக்களை முன்வைத்தீர்கள். பலர் மனதில் உள்ள கேள்விகளே இவை .இதில் என் மனதை மிகவும் கவர்த்துள்ளீர்கள்.உயிர்களை கொன்று உண்ணும்படி கூறிய இறைவன் ஏன் அவற்றுள் வலியையும் அலறலையும் படைத்தான். கடவுள் மனிதனை படைத்தானா? மனிதன் கடவுளை படைத்தானா?
  சிந்தியுங்கள்.பகவற்கீதை. பைபிள். குர்ரான். போன்றவை மனிதனை நல்வழிப்படுத்துவதற்காக மனிதனால் படைக்கப்பட்டவை. இந்தமனிதனை படைத்த மூலம் ஒன்று உண்டு. அதைதான் ஆதிமூலம் என்றும். பரம்பொருளென்றும். கடவுள் என்றும் பலவாக அழைப்பார்கள். தாங்கள் குறிப்பிட்டவைகள் அனைத்துமே ஆண்டவனை அழகுபடுத்த மனிதனால் போடப்பட்ட ஆடைகள்.அவற்றில் இருக்கும் தூசுகளை நீங்கள். சுட்டிக்காட்டி உள்ளீர்கள்.
  சாதிப்பிரிவுகள் பற்றி குறிப்பிட்டீர்கள். எந்த நாட்டில் எந்த ஊரில் இல்லை சாதி.ஆனால் அழிக்கப்பட வேண்டிய அசிங்கம். தீண்டாமை
  தங்கள் கேள்விகள் அனைத்துக்கும் என் சிற்றறிவுக்கு எட்டிய பதில்களை எழுதலாம். மீண்டும் ஓர்முறை முறை முயர்ச்சிக்கின்றேன்.இவை அனைத்தும் என் சிற்றறிவுக்கு எட்டியவை. தப்பேதும் இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும்.
  இப்படிக்கு
  அன்புடன். நா.சிவாஸ்

 • அவதானி:

  நல்ல சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள்.
  கட்டுப்பாடுகள் கடவுளினால் உருவக்கப்பட்டனவா?, கடவுளைக் காட்டி கஞ்சிகுடிப்பவர்களால் உருவாக்கப்பட்டனவா?. விடைகளைத் தேடுவோம்.

 • உங்கள் சிந்தனைகள் பயனுள்ளவை .இதில் எனக்கு மிகவும் பிடித்தது ,ஜேசுகிறிஸ்து நாதரின் மரணத்திற்கு பயன்பட்ட சிலுவையை கிறிஸ்தவர்கள் ஆபரணமாகவும் ,புனிதப் பொருளாகவும் சுட்டிக்காட்டி நல்ல விழிப்பை மக்களுக்கு ஏற்ப்படுத்துவது மிகவும் சிறப்பானது. நன்றாக சிந்தியுங்கள் ,மற்றவர்களை விழிக்க வையுங்கள் . வாழ்த்துக்கள் ,உங்கள் ராஜா .

 • அழ பகீரதன்:

  ஒரு நல்ல கட்டுரை சிந்தனை தொடரட்டும்.

Leave a Reply for சிந்திப்பவன்

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து