உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

untitledஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயத் ரா அத் – அல் ஹுசைன் இன்று திங்கட்கிழமை கண்டிக்கு பயணம் மேற்கொண்டு தலதா மாளிகைக்கு சென்றார்.

இதன்போது அவரை பஸ்நாயக்க நிலமே வரவேற்றதுடன் இருவருக்குமிடையில் சந்திப்பு நடைபெற்றது.

அதன்பின்னர், அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேர்ர்களை சந்தித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதுடன் தனது ஸ்ரீலங்காவிற்கான பயணத்தின் நோக்கம் குறித்தும் விளக்கமளித்தார்.

இதனையடுத்தே யுத்தக் குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து