உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

நுவரெலியா ராகலை சென்லியநாட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆண்டு 10 இல் கல்லி பயின்று வரும் மாணவன் S.தருமசீலன் குளிர் ஊட்டபட்ட தலைகவசம் ஒன்றினை கண்டு பிடித்துள்ளார்.முற்றிலும் சூரியகளத்தின் உதவியுடன் செயற்ப்படும் இந் தலை கவசம் முடி உதிர்தல், முடி நரைத்தல் போன்றவற்றில் இருந்து ஏற்ப்படும் பின் விளைவுகளை தடுக்கின்றது. இந்த கண்டு பிடிப்புக்காக மாணவனுக்கு கொழும்பு ஸ்ரீ ஜயவரத்தனபுர பல்கலைகழகத்தினால் கௌரவிக்கபட்டு சான்றிதலும் வழங்கப்ட்டுள்ளது.

இது தொடர்பில் மாணவன் கருத்து தெரிவிக்கையில் S.தருமசீலனாகிய நான் நுவரெலியா ராகலை பிரதேநத்தில் CP/W/S.T சென்லியநாட்ஸ் தமிழ் மகா வித்தியாலயம் எனும் பாடசாலையில் கல்வி கற்கின்றேன். எனது விருப்பம் அப்துல்கலாம் போன்று ஆவது இதுவே எனது நீண்ட நாள் கனவு. சிறுவயது முதல் சிறு சிறு விஞ்ஞான சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதில் ஆர்வமாக இருந்து வருகின்றேன்.

14ஆம் வயதில் இலகு சமயல் உபகரணம் கண்டுபிடித்து நுவரெலியா மாவட்டத்துக்கான இரண்டாம் இட சான்றிதலை பெற்றேன். அடுத்து எனது 15 ஆம் வயதில் சிறிய விமானத்தை வடிவமைத்து அதற்கும் நுவரெலியா மாவட்டத்துக்கான 2 ஆம் இடத்திற்கான சான்றிதலை பெற்றேன்.

எனது அடுத்த கண்டுபிடிப்பான நவீன பாதுகாப்பு கவசத்தை கண்டுப்பிடித்துள்ளேன். இது சூரிய சக்தியில் இயங்கக் கூடியது. இந்த தலைக் கவசத்தில் இருக்கக் கூடிய சூரிய சக்தி மின் உற்பத்தி ஆக்கி மூலம்; பொருத்தபட்ட விசிரி சுழலும் போது தலைக வசம் குளிராக இருக்கும் இதனால் முடி விழுவதை தடுக்கக் கூடியதாக இருக்கும். இதற்காக மருந்துகளுக்கு செலவு செய்யும் செலவுகளை சேமிக்கக் கூடியதாகயிருக்கும்.

இனி வரும் காலங்களில் எனது அடுத்த கண்டுபிடிப்புக்களாக மனிதனால் இயங்கக் கூடிய ரொபோ, எரிபொருள் இல்லாமல் இயங்கக் கூடிய மோட்டார் வண்டி ஆகியன உள்ளன. மேற்கண்ட எனது திறமைகளை இனங்கண்டு எனது பாடசாலை அதிபர் திரு.வி. சிவராஜ் அவர்களும் மற்றும் சக ஆசிரியர்கள் விஞ்ஞான பிரிவு ஆசிரியர் திரு.கமலஹாசன், திருமதி. ஜேமிலா உமா மற்றும் எனது வகுப்பாசிரியர் திருமதி. விஜயகலா அவர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

எனது எதிர்கால பிரயோசன மிக்க கண்டுப்பிடிப்புக்களுக்கு இன்னும் தேவையான அனைத்து உதவிகளையும் கல்விசார்ந்த அமைப்புகளும் பொது அமைப்புக்களும் தனியார் அமைப்புக்களும் உதவி புரியுமாயின் எனக்கு செய்யும் மிப்பெரிய உதவியாக இருகும். இத்தருனத்தில் எனது தந்தை எஸ்.சின்னசாமி தாய் திருமதி. ஆதிலெச்சுமி அவர்களுக்கு மகனாக பிறந்ததை நினைத்து பெருமை அடைகின்றேன் என்றார்.

12717327_499447286926437_5204524455754292533_n

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து