உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்
யாழ் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால், புதிதாக 25 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவிவித்துள்ளார்.

வீடமைப்பு அமைச்சராக அமரர் ரணசிங்க பிறேமதாச இருந்த காலத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பொன்னாலைக் கிராமத்தில் 65 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு இருந்தன.

இந்த வீடுகள் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அழிந்து போயுள்ள நிலையில், இந்தப் பகுதியில் மீண்டும் 25 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட காணியின் உரிமையாளர்களின் சம்மதத்துடன் சுமார் இரண்டரை லட்சம் ரூபா செலவில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக சபையின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து