உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்
திசைமாறும் வடக்கு - கிழக்கு வீட்டுத்திட்டம்

வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட 65,000 வீட்டுத்திட்டத்தில் அநுராதபுரம், பொலனறுவை, மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.போரினால் வீடுகளை இழந்த மக்களிற்கு வடக்கு, கிழக்கில் வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

2.1 மில்லியன் ரூபா செலவில் ஒவ்வொரு வீடுகளும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட மக்களிற்கே இந்த வீட்டுத்திட்டம் முழுமையாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களிற்கான 65,000 வீடுகளை அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுடன் புத்தளம், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களும் இணைக்கப்படவுள்ளதாகவும் இவை போரினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்ற அடிப்படையில் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து