உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்
கலப்பு வாழ்க்கை மூலம் நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும் : ரெஜினோல்ட் கூரே

சாதி, சமயம், இனம் என்ற தனித்துவம் பாராமல், கலப்பு வாழ்க்கை மூலமாக நாட்டில் உண்மையான சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடியும் என வடமாகாண புதிய ஆளுனராக பொறுப்பேற்றுள்ள ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.கலப்பு வாழ்க்கை முறைமையின் ஊடாக பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வடமாகாண ஆளுனராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னோர்களான அரசர்களும் கலப்பு திருமணங்களையே செய்தனர். இதனால் தனித்துவமான இனம் என்று எதனையும் கூறமுடியாது எனவும், இலங்கையை ஆண்ட அரசர்களில் அதிகமானோர் இந்தியாவில் இருந்தே தமது மனைவியரை வரவழைத்திருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, சிங்கள இரத்தம் என்பது கலப்படம் கொண்டது. இங்கு வந்த முஸ்லிம்கள் அனைவரும் சிங்களப் பெண்களையே தமது திருமணம் செய்து கொண்டார்கள். நாங்கள் தனித்துவத்தைப் பற்றி சிந்திக்க முடியாது. எல்லோருமே கலப்பினத்தவர்களே என வடமாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து