உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இங்கிலாந்தில், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அங்குள்ள ஒரு மாநகராட்சியின் மேயராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான தேர்தலில் அவர் போட்டியிடுகிறார்.

இங்கிலாந்தில் ஏராளமான இந்திய வம்சாவழியினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் அரசு உயர் பதவியில் உள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான லீசெஸ்டர்ஸ் மாநகராட்சியில் அதிக எண்ணிக்கையிலான இந்திய வம்சாவழியினர் வசிக்கின்றனர். இம்மாநகராட்சிக்கான மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது.

இதில் தொழிலாளர்கள் கட்சியின் சார்பில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரீட்டா பட்டேல்(51) எனும் பெண் போட்டியிடவுள்ளார். இவர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மேலாளராக உள்ளார்.

மகளிர் அமைப்புகளின் தலைவராகவும் உள்ளார். கடந்த 1970-ம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். லீசெஸ்டர்ஸ் நகரில் வெகு ஆண்டுகளாக தங்கி அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் மேயராக தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து